தமிழில் 65 திரைப்படங்களுக்கும் மேல் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ள கே. கோவிந்தராஜ், இன்று காலை காலமானார்.
தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கும் மேல் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளவர் கே. கோவிந்தராஜ். இக்கால ஆடை வடிவமைப்புகளிலும் அதன் வண்ணங்களிலும் ஆழ்ந்த அறிவாற்றல் கொண்டவர். விஜய் நடித்த ‘காதலுக்கு மரியாதை’, ‘பூவே உனக்காக’, அஜித் நடித்த ‘நீ வருவாய் என’, சரத்குமார் நடித்த ‘சூரியவம்சம்’ உட்பட பல வெற்றிப் படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.
ராமராஜன், கனகா, சங்கீதா உட்பட பல நடிகர் – நடிகைகளுக்கு தனிப்பட்ட ஆடை வடிவமைப்பாளராகவும் இருந்து வந்துள்ளார். சூப்பர் குட் பிலிம்ஸ், கே.எஸ். ரவிக்குமார், விக்ரமன், ராஜகுமாரன் ஆகியோரின் ஃபேவரைட் ஆடை வடிவமைப்பாளர் கோவிந்தராஜ் தான்.
82 வயதாகும் கே. கோவிந்தராஜ் உடல் நலக் குறைவு காரணமாக இன்று காலை காலமானார்.