No menu items!

கால்பந்து நட்சத்திரம் டியாகோ ஜோட்டா கார் விபத்தில் உயிரிழப்பு

கால்பந்து நட்சத்திரம் டியாகோ ஜோட்டா கார் விபத்தில் உயிரிழப்பு

லிவர்பூல் கால்பந்து கிளப் அணியின் நட்சத்திரம் டியாகோ ஜோட்டா (28) தனது சகோதரர் ஆண்ட்ரே சில்வா (26) ஆகியோர் கார் விபத்தில் உயிரிழந்தனர்.

வடமேற்கு ஸ்பெயினில் உள்ள ஜமோரா அருகே இருவரும் சொகுசு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கார் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்ததில் டியாகோ ஜோட்டாவும், ஆண்ட்ரே சில்வாவும் உயிரிழந்தனர். இருவரின் உடல்களையும் கைப்பற்றிய ஸ்பெயின் காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

விபத்து தொடர்​பாக காவல் துறை​யினர் விசா​ரித்து வரு​கின்​றனர். நள்​ளிர​வில் நடை​பெற்ற இந்த விபத்​தின் போது காரை யார் ஓட்​டி​னார்​கள் என்​பது தெரிய​வில்​லை. டயர் வெடித்து விபத்து நடந்​திருக்​கலாம் என போலீ​ஸார் கருதுகின்​றனர்.

28 வயதான டியாகோ ஜோட்​டாவுக்கு கடந்த வாரம்​தான் திரு​மணம் முடிந்​திருந்​தது. ரூட் கார்​டோசோ​வாவை அவர், மணந்​திருந்​தார். இவர்​களுக்கு 3 குழந்​தைகள் உள்​ளனர். இதில் கடைசி குழந்தை கடந்த ஆண்​டு​தான் பிறந்​திருந்​தது.

டியாகோ ஜோட்​டா, போர்ச்​சுக்​கல் தேசிய அணிக்​காக 50-க்​கும் மேற்​பட்ட ஆட்​டங்​களில் விளை​யாடி உள்​ளார். சமீபத்​தில் முடிவடைந்த நேஷன்ஸ் லீக் கால்​பந்து தொடரை வென்ற போர்ச்​சு​கல் அணி​யில் டியாகோ ஜோட்டா இடம் பெற்​றிருந்​தார். அவரது சகோ​தர​ரான 26 வயதான ஆண்ட்ரே சில்வா போர்ச்​சு​கலில் உள்ள பெனாஃபீல் கிளப்​புக்​காக விளை​யாடி வந்​தார்.

டியாகோ ஜோட்டா கடந்த 2020-ம் ஆண்டு வுல்வ்ஸ் கிளப்​பில் இருந்து விலகி லிவர்​பூல் கிளப்​பில் இணைந்​தார். கடந்த சீசனில் பிரிமீயர் லீக்​கில் சாம்​பியன் பட்​டம் வென்ற லிவர்​பூல் அணி​யில் டியாகோ ஜோட்டா முக்​கிய பங்கு வகித்​திருந்​தார்.

அவரது மரணம் கால்​பந்து உலகை அதிர்ச்​சிக்கு உள்​ளாக்கி உள்​ளது. லிவர்​பூல் கிளப், போர்ச்​சு​கல் கால்​பந்து சங்​கம், ஐரோப்​பிய கால்​பந்து கூட்​டமைப்​பு ஆகிய​வை இரங்​கல்​ தெரிவித்​துள்​ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...