சமீபத்தில் அகமதாபாத்தில் நடைபெற்ற விமான விபத்து, அதை தொடர்ந்து ஏர் இந்தியா விமானங்களில் ஏற்பட்டு வரும் கோளாறுகள் பேசு பொருளாகியுள்ளன. இந்நிலையில் உலகின் மிகவும் பாதுகாப்பான விமான சேவை எது என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
அதாவது உலகின் மிக பாதுகாப்பான விமான நிறுவனமாக ஏர் நியூசிலாந்து முதலிடத்தில் உள்ளது. எமிரேட்ஸ், எத்திஹாட் மற்றும் கத்தார் ஏர்வேஸ் ஆகியவை முதல் ஐந்து இடங்களில் இடம்பெற்றுள்ளன.
விமானப் பாதுகாப்பு தரவரிசை
AirlineRatings.com வெளியிட்ட தரவரிசையில், ஏர் நியூசிலாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதேபோல எச்.கே. எக்ஸ்பிரஸ் உலகின் பாதுகாப்பான குறைந்த கட்டண விமான நிறுவனமாகத் தேர்வாகியுள்ளது. கத்தார் ஏர்வேஸ் மற்றும் எமிரேட்ஸ் மூன்றாவது இடத்தில் உள்ளன. FlyDubai மற்றும் Air Arabia போன்ற நிறுவனங்களும் பாதுகாப்பான குறைந்த கட்டண விமான நிறுவனங்களின் லிஸ்டில் வந்திருக்கின்றன.
தரவரிசை நிர்ணயக் காரணிகள்
விமானப் பாதுகாப்பு வல்லுநர்கள் மற்றும் போக்குவரத்து நிபுணர்களின் ஆலோசனையின் அடிப்படையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த சம்பவங்கள், விமானங்களின் வயது, IOSA சான்றிதழ் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு தரவரிசை பட்டியல தயார் செய்யப்பட்டிருக்கிறது. குறைந்த எண்ணிக்கையிலான விமானங்களை இயக்கும் நிறுவனங்கள் சில சம்பவங்களை சந்தித்தால் அது கவலைக்குரியதாக கருதப்படுகிறது.
AirlineRatings.com தலைவர் ஷரோன் பீட்டர்சன், இது குறித்து கூறுகையில், “ஏர் நியூசிலாந்து முதலிடத்திலும் குவாண்டாஸ் இரண்டாவது இடத்திலும் இருக்கிறது. இரண்டுக்கும் இடையே சிறிய புள்ளி வேறுபாடு இருந்தது. புதிய விமானங்களை அதிகம் வைத்திருப்பதே இந்த வேறுபாட்டுக்குக் காரணம்.