No menu items!

அஃகேனம் டைட்டில் யாருக்கும் தெரியவில்லை என்றால்…

அஃகேனம் டைட்டில் யாருக்கும் தெரியவில்லை என்றால்…

அருண் பாண்டியன் – கீர்த்தி பாண்டியன் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘அஃகேனம்’. இதில், பிரவீன் ராஜா, ஆதித்யா ஷிவ்பிங்க், ரமேஷ் திலக், ஜி.எம்.சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

விக்னேஷ் கோவிந்தராஜன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு பரத் வீரராகவன் இசையமைத்துள்ளார். ஏ அண்ட் பி குரூப்ஸ் சார்பில் அருண்பாண்டியன் தயாரித்துள்ளார்.

ஜூலை 4-ம் தேதி வெளியாகும் இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

படம் பற்றி இயக்குநர் உதய் கே. கூறும்போது, “ஃ என்பது ஆயுத எழுத்தின் வார்த்தை வடிவம். அஃகேனம் என்றால் மூன்று புள்ளி. இதைத் தவிர்த்து இதற்கு வேறு எந்த அர்த்தமும் கிடையாது.

அந்த மூன்று புள்ளி என்பது இப்படத்தில் இடம்பெறும் மூன்று கதாபாத்திரத்தை பிரதிபலிக்கிறது. அந்த மூன்று முக்கியமான கதாபாத்திரங்களுக்கு இடையே நடைபெறும் கதை என்பதால் இந்த டைட்டில் பொருத்தமாக இருக்கும் என நினைத்தோம். இதையே தயாரிப்பாளரிடமும் ஆலோசனையாக சொன்னோம். அவரும் அனுமதி அளித்தார்.

இந்த டைட்டில் யாருக்கும் தெரியவில்லை என்றால் நாம் தெரியப்படுத்துவோம் என ஊக்கமளித்தார். இந்தப் படம் வெளியான பிறகு இந்த வார்த்தையும் பிரபலமாகும் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...