நாகசைதன்யா, சாய்பல்லவி நடிக்க, சந்து இயக்கும் படம் ‘தண்டேல்’. தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் பிப்ரவரி 7ல் ரிலீஸ் ஆகிறது. அல்லு அரவிந்த் தயாரித்த இந்த படத்தை தமிழில் ட்ரீம்வாரியர்பிக்சர்ஸ் ரிலீஸ் செய்கிறது. சென்னையில் நடந்த விழாவில் நடிகர் கார்த்தி சிறப்பு விருந்திரனாக கலந்துகொண்டு படக்குழுவை வாழ்த்தினார். அவர் பேசியது…
‘எனக்கு தெலுங்கு திரையுலகில் நிறைய அன்பு கிடைத்து இருக்கிறது. அவர்களுக்கு நன்றி செலுத்தும் வாய்ப்பாக இதை கருதுகிறேன். இந்த 2018 ஆம் ஆண்டில் நடந்த உண்மை சம்பவமே இந்த படக்கதை. அதை கேட்கவே ஆர்வமாக இருந்தது. நம் ஊரில் மீன் பிடிக்கும் மீனவர்கள் பாகிஸ்தான் எல்லைக்கு சென்று மாட்டிக் கொள்கிறார்கள். அதாவது, குஜராத்திற்குச் சென்று மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது எல்லை தாண்டி பாகிஸ்தானுக்கு சென்று மாட்டிக் கொள்கிறார்கள். பிறகு அங்கிருந்து எப்படி தப்பித்து வந்தார்கள் என்பதை ஒரு அழகான காதல் கதையாக இதில் சொல்கிறார்கள்.
எவ்வளவு பெரிய திரில்லாக இருந்தாலும், அது டைட்டானிக்காக இருந்தாலும் அதற்குள் ஒரு லவ் ஸ்டோரி தேவைப்படுகிறது. அந்த லவ் தான் மனதில் நிற்கிறது. இந்த படத்திற்காக ஒன்றரை ஆண்டுகாலம் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். கடல் பின்னணியில் சொல்லப்படும் கதைகள் ரசிக்கும்படி இருக்கும். தண்டேலும் அப்படி இருக்கும் என நினைக்கிறேன்.
தமிழில் காமெடி நடிகராக இருக்கும் கருணாகரன் இந்த படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகிறார். அவர் அற்புதமான நடிகர். தெலுங்கிலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.சமீபத்தில் நான் துருக்கி நாட்டிற்கு சென்றிருந்தபோது அங்கும் இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தது. அதுதான் அவருக்கு கிடைத்திருக்கும் புகழ். அவர் எப்போதும் உழைத்துக் கொண்டே இருப்பார். அவருடைய ஸ்டுடியோவுக்கு சென்றால்.. இசையை பற்றி மட்டுமே பேசிக் கொண்டே இருப்பார். அவர் தண்டேலுக்கு இசையமைத்து இருக்கிறார்.
ஹீரோயின் சாய் பல்லவி மிகவும் ஸ்பெஷல் ஆனவர். காதல் படங்களிலும் கலக்குகிறார். இளைஞர்கள் அவர் மீது பைத்தியமாக இருக்கிறார்கள். டான்சிலும் கலக்குகிறார். அமரன் படம் பார்த்துவிட்டு அவரிடம் பேசியிருக்கிறேன். ஒரு ராணுவ அதிகாரியின் மனைவியின் தியாகம் என்ன? என்று பொதுமக்களுக்கு தெரியாது. அதை அமரன் படத்தில் நீங்கள் விவரித்திருந்த விதம் அவர்களின் வலியை எங்களுக்கு புரிய வைத்துள்ளது என்றேன். ஹீரோ நாகசைதன்யாவை மட்டுமல்ல, அவர் தாத்தா நாகேஸ்வரராவ், தந்தை நாகர்ஜூனாவுக்கு எனக்கு நெருக்கம், அவருடன் இணைந்து தோழாவில் நடித்து இருக்கிறேன். இன்றைக்கும் என் படங்களை ஆதரிக்கிறார். நாக சைதன்யா கடுமையாக உழைப்பதில் ஆர்வம் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு படத்தில் அவருடைய வளர்ச்சி தெரிகிறது. உழைப்பு ஒரு போதும் வீண் போகாது.’’ என்றார்