கோவாவில் அடுத்த மாதம் தனது திருமணம் நடைபெறும் என்று கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். திருப்பதியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் இந்த தகவலை தெரிவித்தார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ், 2 தினங்களுக்கு முன் தனது திருமணம் தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அந்த பதிவில் தான் 15 ஆண்டுகளாக காதலித்து வருபவரை திருமணம் செய்துகொள்ளப் போவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
“15 வருடங்கள் முடிந்தது, இன்னும் எங்கள் பந்தததிற்கான நாட்கள் முடிவில்லாமல் தொடந்துகொண்டே இருக்கும். இது எப்போதும் கீர்த்தி மற்றும் ஆண்டனியின் உறவாக இருக்கும்” என்று அந்த பதிவில் கீர்த்தி சுரேஷ் கூறியிருந்தார். இந்த பதிவ்ன் மூலம் அவர் தன் காதலரை அறிவித்ததுடன், இதுவரை உலா வந்த வதந்திகளையும் முடித்து வைத்தார்.
துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் என்று கூறப்படும் ஆண்டனிக்கு சொந்த ஊரான கொச்சியில் ரிசார்ட்ஸ் உள்ளது. ஆண்டனி, ஹபீப் ஃபீரூக் என்பவருடன் சேர்ந்து சென்னையில் பதிவு செய்யப்பட்ட ஆஸ்போர்ட் ஹவுஸ் விண்டோ சொல்யூஷன்ஸின் முதன்மை உரிமையாளராக இருக்கிறார். இவருக்கு கேரளா மற்றும் துபாயில் கோடிக்கணக்கில் சொத்துகள் இருப்பதாக கூறப்படுகிறது.