ஐங்கரன் இண்டர்நேஷனல் கருணாமூர்த்தி தயாரிப்பில் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர்கள் அதர்வா முரளி, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நிறங்கள் மூன்று’. வரும் 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
நடிகர் முரளி மகன்கள் அதர்வா, ஆகாஷ் இருவரும் அப்பாவை போல பரபரப்பாக நடிக்க சரியான படங்கள் அமையமால் இருந்து வருகிறது. இந்த நிலையில் அடுத்தடுத்து இருவரும் வேறுவேறு படங்களில் நடித்து வெளியாக இருக்கிறது.
ஆகாஷ் முரளி விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நேசிப்பாயா என்றபடத்தில் நடித்திருக்கிறார். இது பற்றி ஆகாஷ் முரளியின் மனைவியும் தயாரிப்பாளர்களில் ஒருவருமான சினேகா பிரிட்டோ கூறும்போதும்,
நடிப்பு என்பது ஆகாஷின் நீண்ட நாள் கனவு.அது எனக்கு ஆரம்பத்திலேயே தெரியும்.அதற்காக அவர் நடிப்புப் பயிற்சி சண்டைப்பயிற்சி நடனப் பயிற்சி ஆகியனவற்றை செய்து தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டார். வேறு ஒரு நிறுவனத்திற்காக அவர் படம் பண்ணுவதாக இருந்தது. ஆனால், அவரை பிடித்துப் போனதால் என் அப்பா நம்ம நிறுவனத்திலேயே பண்ணலாம் என்று சொல்லி ஆரம்பித்தோம். நான் ஆகாஷை வைத்து படம் இயக்குவது எதிர்காலத்தில் நடக்கலாம் என்றார்.
அதர்வா நடிக்கும் நிறங்கள் மூன்று படத்தில் நடிப்பது குறிப்பது அதர்வா கூறும்போது,
“கார்த்திக்கின் ‘துருவங்கள் பதினாறு’ படம் பார்த்ததில் இருந்தே அவருடன் பணிபுரிய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அவர் ஒரு காட்சியை அணுகும் விதமே வித்தியாசமாக இருக்கும். நிஜத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு நேர்மாறான ஒரு கதாபாத்திரத்தைதான் எனக்கு இதில் கொடுத்தார். பயம் கலந்த சந்தோஷத்துடன் அவர் மீதுள்ள நம்பிக்கையில் தான் சம்மதித்தேன். உண்மையிலேயே இது வித்தியாசமான படம். எந்த ஜானரிலும் இதை அடக்க முடியாது. சரத்குமார் சார், ரஹ்மான் சார் போன்ற சீனியர் நடிகர்களுடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. துஷ்யந்த், அம்மு அபிராமி என எல்லாரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் புது அனுபவம். படத்தைத் தயாரித்த கருணா சார் மற்றும் மனோஜ் சாருக்கு நன்றி. டெக்னிக்கல் டீம் சிறந்த பணியைக் கொடுத்துள்ளது. நிறைய புது விஷயங்கள் இதில் உள்ளது. 22 ஆம் தேதி இந்தப் படத்தை திறந்த மனதுடன் வந்து திரையரங்குகளில் பாருங்கள்” என்றார்.