தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்கள் தங்களுக்கு சினிமாவில் அப்பாவின் சிபாரிசால் பட வாய்ப்புகள் கிடைக்காதா என்று காத்திருக்கிறார்கள். ஆனால் மலையாள ஹீரோ மோகன்லாலின் மகன் சினிமாவை விட்டு பண்ணை ஒன்றில் கூலியாக வேலை பார்க்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.
நடிகர் மோகன்லாலில் மகன் பிரணவ். இவர் 2015ல் மோகன்லால் பட தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார். அதற்கு முன்பாக குழந்தை நட்சத்திரமாக மோகன்லாலின் இரண்டு படங்களில் நடித்திருந்தார். இதையடுத்து 2018ல் வெளியான ஆதி என்ற மலையாளப் படத்தில் நடிகராக அறிமுகமாகியிருந்தார்
பிரணவ் தற்போது ஸ்பெயின் நாட்டில் பண்ணை போன்ற ஒரு இடத்தில் வேலை பார்க்கிறார். அவருக்கு சம்பளம் கிடையாது. அதற்கு பதிலாக தங்கும் இடமும் உணவும் உண்டு. சில நேரங்களில் அவர் குதிரை மற்றும் ஆடுகளை கூட கவனிக்க வேண்டியது இருக்கும். இது ஒரு அனுபவம்.
எனக்கு ஸ்கிரிப்ட்களைக் கேட்பது பிடிக்கும். அதனால் அதை உட்கார்ந்து கேட்பேன். பிரணவ் இப்போது இரண்டு வருடங்களுக்கு ஒரு படம் நடிக்கிறார். ஆனால் வருடத்துக்கு ஒரு படமாவது நடிக்க வேண்டும் என கூறுவேன். அனைத்தையும் பேலன்ஸ் செய்ய வேண்டும் என அவர் விரும்புகிறார்” என்றார்.
பிரணவ்வுக்கு நடிப்பதை விட டிராவல் செய்வதில் தான் ஆர்வம் அதிகம். ஹீரோவாக நடிக்க தொடங்கிய 7 ஆண்டுகளில் 5 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ஒவ்வொரு படம் முடிந்ததும் எதாவது ஊருக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அனுபவத்துக்காக அவர் அப்படி செய்கிறார்.
ஒரேயொரு பையை எடுத்துக் கொண்டு பயணம் செய்து வருகிறார். சாதாரண உடைகள் அணிகிறார். பயணத்தின்போது யாராவது பிரணவை பார்த்தால் அவர் ஒரு பணக்கார வீட்டுப் பையன் என்றே சொல்ல முடியாது. அந்த அளவுக்கு எளிமையாக இருப்பார்.
வருடத்தில் பாதி நாட்களை பயணம் செய்வதில் செலவழிக்க விரும்பும் பிரணவ் இந்த பயணத்தின் செலவுகளுக்காகவே படங்களில் நடித்து சம்பாதிக்கிறார். தனது சொந்த செலவுகளுக்காக மோகன்லாலிடம் அவர் பணம் வாங்குவதில்லை. நினைத்தபோது பயணம் செய்கிறார். பிடித்த நாடுகளுக்கு சென்று அங்கிருந்து மக்களோடு மக்களாக போக்குவத்தை பயனபடுத்தி பல இடங்களுக்கு சென்று அனுப்வமாக பதிவு செய்து கொள்கிறார். இதனால் சமீபகாலமாக அவர் திரைப்படங்களில் நடிப்பதை விட்டு பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
ஸ்பெயின் நாட்டை பொதுவாக திரைப்படங்களில் மட்டுமே பார்த்திருக்கும் நமக்கு அந்த நாட்டில் பண்ணை விவசாயத்தை பற்றி பிரணவ் அனுபவமாக பகிர்ந்து கொள்வார் என்று தெரிகிறது.
சிறுவயதிலேயே நடித்திருந்தாலும், திரிஷ்யம் இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ஆதி என்கிற படம் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். கடைசியாக இவர் வெளிவந்த ஹிருதயம் , வருஷங்களுக்கு சேஷம் ஆகிய இரண்டு படங்களும் தமிழ்நாட்டை மையப்படுத்திய கதைக்களத்தில் அமைந்திருந்ததால், தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமடைந்தார்.
அப்பா சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் தன்னை அந்த இமேஜ் வட்டத்திற்குள் அடக்காமல் ஒரு கூலியாக வேலை பார்க்கும் பிரணவிற்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.