No menu items!

இளம் இயக்குநர்கள் பிடியில் தமிழ் சினிமா!

இளம் இயக்குநர்கள் பிடியில் தமிழ் சினிமா!

தமிழ் சினிமா தற்போது சில இளம் இயக்குனர்களின் கைகளில்தான் இருக்கிறது. அதில் லோகேஷ், நெல்சன், ராஜ்குமார் பெரியசாமி என்று இளம் இயக்குனர்கள் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

மாநகரம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் அடுத்தடுத்து கைதி, விக்ரம், லியோ ஆகிய படங்களின் மூலம் எல்சியூ என்ற யுனிவர்ஸை உருவாக்கினார். யுனிவர்ஸ் என்பது ஒரு திரைப்படத்தின் கதாபாத்திரம் மற்றொரு படத்தில் அந்த கதையுடன் இணைந்து பயணிக்கும்.

இது போன்று ஹாலிவுட்டில் மார்வெல், டி.சி. என்ற இரண்டு யுனிவர்ஸ்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இது போன்று விக்ரம் திரைப்படம் மூலம் லோகேஷ் கனகராஜ் எல்சியூ என்ற உலகத்தை உருவாக்கினார். இது மிகவும் பிரபலமடைந்தது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமா நட்சத்திரங்கள் அனைவரையும் ஒரே படத்தில் எப்போது இணைக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் ’கூலி’ படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படம் எல்சியு கதையில் இடம்பெறாமல் தனிக் கதையாக லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இதனைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்கள் குறித்தும், ரஜினிகாந்துடன் பணிபுரியும் அனுபவம் குறித்தும் தனியார் யூடியூப் சேனலில் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, “கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. ரஜினிகாந்த் ஒரு இயக்குநரின் நடிகராக ஏன் உள்ளார் என்பதை சமீபத்திய நாட்களில் தெரிந்து கொண்டேன்.

தனது அடுத்தடுத்த படங்கள் குறித்து பேசுகையில், “கூலி திரைப்படத்திற்கு பிறகு கைதி 2 படத்தை இயக்கவுள்ளேன். அதனைத்தொடர்ந்து ரோலக்ஸ் கேரக்டருக்காக ஒரு படத்தை இயக்க வேண்டும். அப்படத்தை வைத்து தான் விக்ரம் 2 படத்தில் அனைத்து கேரக்டரையும் வைத்து யுனிவர்ஸை முடிக்க முடியும். இந்த படங்களுக்காக நடிகர்களின் தேதிகள் கிடைக்கவில்லை என்றால் கூலி போன்று தனிக்கதையுடன் படத்தை இயக்கி கொண்டிருப்பேன்” என கூறியுள்ளார்.

இதற்கு அடுத்து நெல்சன் ரஜினியை வைத்து ஜெயிலர் 2ம் பாகம் எடுப்பதாகவும் ஒரு தகவல் பரவிக்கொண்டிருக்கிறது. ஆனால் இது இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் ரஜினிக்கும் இதில் விருப்பம் இருப்பதாகவும் தெரிகிறது. ஆனால் அதற்கு முன்பாக 2 திரைப்படங்கள் முடித்துக் கொடுத்தப்பிறகுதான் அதுவும் நடக்கும் என்கிறார்கள். அதில் ஒன்று தெலுங்கு படம் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அமரன் வெற்றியால் பரபரப்பாக இருக்கும் ராஜ்குமார் பெரியசாமி அடுத்தடுத்து பெரிய தயாரிப்பு நிறுவனங்களுக்கு படம் இயக்க இருக்கிறார். இந்த நிலையில் இளம் தலைமுறை இயக்குனர்களின் கையில் தமிழ் சினிமாவில் இருப்பது பலரையும் வியக்க வைத்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...