தமிழ் சினிமாவில் மறக்க முடியாத சில நட்சத்திரங்களில் முக்கியமானவர் நடிகை சில்க் ஸ்மிதா. கடந்த சில வாரங்களுக்கு முன் அவரது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அப்போது அவருடன் நெருக்கமான நட்பு வைத்திருந்ந்த நடிகைகள் சிலர் சில்க் ஸ்மிதா பற்றி தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். அதில் நடிகை டிஸ்கோ சாந்தி பேசியவை இணையத்தில் வைரலாகி பரவி வருகிறது. டிஸ்கோ சாந்தி கூறியதாவது,
சில்க் ஸ்மிதா மிகவும் நல்லவர். சகஜமாகப் பேசுவார். நான் அக்கா என்று அழைப்பேன். அவரும் எல்லா விஷயங்களையும் என்னிடம் பகிர்ந்து கொள்வார். சில்க் ஸ்மிதா அந்தக் காலத்திலேயே லட்சங்களில் சம்பளம் வாங்குவார். ஒரு நாளைக்கு அவர் ஒரு லட்சம் முதல் மூன்று லட்சம் வரை சம்பளம் வாங்கினார். ஆனால் நான் அந்த நிலைக்கு வர பத்து வருடங்கள் ஆனது. அவரது வாழ்க்கை ஆடம்பரமாக இருந்தது. மாதம் ரூ.5 லட்சம் வாடகை கொடுத்து வாடகை வீட்டில் வாசித்தார். சொந்த வீடு வாங்கலாமே என்றால், கேட்க மாட்டார்.
சில்க் ஸ்மிதா பணக் கட்டுகளில் படுப்பார். இதை நான் முதலில் பார்த்தபோது மிரண்டு போய் விட்டேன். நான் வாய்ப்புகளுக்காக அலைந்தபோது தன்னை யாரும் ஆதரிக்கவில்லை. அதனால்தான் இப்போது பணக் கட்டுகளில் படுத்திருக்கிறேன் என்பார். படப்பிடிப்பில் சில்க் ஸ்மிதாவை அனைவரும் மதிப்பார்கள் என்று டிஸ்கோ சாந்தி கூறினார்.
சிலக் ஸ்மிதா 20 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தார். அவரது முகம் இருந்தால் படத்தை விநியோகஸ்தர்கள் வாங்குவார்கள் என்ற நிலையை சில்க் ஸ்மிதா கொண்டு வந்தார். இதனால் படத்தில் அவரை நடிக்க வைத்து ஒரு பாடலை எடுத்தார்கள். சூப்பர் ஸ்டார் அந்தஸ்திருந்த ரஜினிகாந்த் கூட அவர் படத்தில் சில்க் ஸ்மிதா பாடல் இருக்க வேண்டும் என்று விரும்பியதாக சொல்வதுண்டு. அப்படித்தான் தங்கமகன் படத்தில் அடுக்கு மல்லிகை அது ஆள் பிடிக்குது.. என்ற பாடலையும், அடுத்த வாரிசு படத்தில் ஆசை நூறு வகை.வாழ்வு நூறு சுவை.. என்ற பாடலையும் வைத்தார்கள். இப்படி முக்கியமான நாயகர்களுக்கு புகழ் பெற்றிருந்தார் சில்க். இப்போது வரைக்கும் அவரை நினைவுபடுத்தி இணையத்தில் அடிக்கடி புதிய தகவல்களையும், தங்கள் அனுபவங்களையும் பலரும் பதிவிட்டு வருகிறார்கள். இது வேறு எந்த நடிகைக்கும் கிடைக்காத ஒரு விஷயம்.