No menu items!

விஜய் சேதுபதியின் பிக் பாஸ் அதிரடி!

விஜய் சேதுபதியின் பிக் பாஸ் அதிரடி!

விஜய் சேதுபதி  தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாள் ஆட்டம் தொடங்கி விட்டது. 18 போட்டியாளர்கள், 9 ஆண்கள் 9 பெண்கள் என்று களை கட்டத் தொடங்கியிருக்கிறது.   இந்த முறை சர்ச்சைக்குரிய பலர் நிகழ்ச்சியில்  கலந்து கொண்டிருக்கிறார்கள்.  ஒவ்வொருவருக்கும் பின்னணியில் ஒரு வில்லங்க கதை இருப்பதை இந்த முறை பார்க்க முடிகிறது.

முதல் போட்டியாளராக தயாரிப்பாளர் லிப்ரா ரவீந்திரன் உள்ளே வந்தார். இவர் இதற்கு முன்பாக பிக் பாஸ் நிகழ்ச்சிகளை கடுமையாக விமர்சனம் செய்து இணையத்தில் பிரபலமானார்.  ஒரு தயாரிப்பாளராக தனது சினிமா தயாரிப்பில் இருக்கும் ஆர்வத்தையும், அதனை சிலர் தவறாக வழி நடத்தியதன் மூலம் ஏற்பட்ட நஷ்டத்தையும் வெளிப்படையாக மேடைகளில் பேசியதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்தார்.  இவரைத்தொடர்ந்து , சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்.ஜே.ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சவுந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதில் ஆண்கள் 9 பேர், பெண்கள் 9 பேர் என சரிசமமாக உள்ளதால் பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் ஆக இந்த சீசன் மாறி உள்ளது. அதாவது ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையில் நடக்கும் ஆட்டமே பிக்பாஸ் தமிழ் சீசன் 8. இந்த 18 போட்டியாளர்களில் ஒருவர் 24 மணி நேரத்திற்குள்ளாக எலிமினேட் செய்யப்பட உள்ளார். அவர் யார் என்பதில் ஒவ்வொரு போட்டியாளர்களும் குழப்பத்தில் இருக்கின்றனர். ரசிகர்களுக்கு இது அதிர்ச்சியை கொடுத்துள்ளது.  போட்டியாளராக களமிறங்கியுள்ள நடிகரும், இயக்குனருமான ரஞ்சித்தை பார்த்ததும், பார்ப்பதற்கே புது மாப்பிள்ளை போல இருக்கிறீர்கள் சார் என சொல்லி வரவேற்ற விஜய் சேதுபதி, அவர் இயக்கிய படங்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் என தெரிவித்தார். பீஷ்மர் திரைப்படத்தைப் பெற்றி பேசிக்கொண்டே வந்தவர், அடுத்து கவுண்டம்பாளையம் திரைப்படத்தின் நேரத்தில் ரஞ்சித் பேசியிருந்த கருத்தை கேட்டு இது எங்கள் ரஞ்சித் இல்லையே என்று சொன்னார். அதற்கு அங்கேயே ரஞ்சித் அந்த விஷயத்தில் நான் ஒரு பாடம் கற்றுக் கொண்டேன்  என்று பேசியது பாராட்டுக்குரியது.

இதே போல் சுனிதா, ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் டான்ஸ் திறமையை வெளிப்படுத்தி பேமஸ் ஆனார். தமிழ் சினிமாவில் தனுஷ் நடித்த 3, இரவு, ராகவா லாரன்ஸ் நடித்த காஞ்சனா 3 மற்றும் மான் வேட்டை ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவ்வளவு ஏன் விஜய் டிவியில் சக்கைப்போடு போடும் ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துகொண்டு மக்களை மகிழ்வித்து வருகிறார். இஅவர் தனக்கான வீடியோவில் பேசிய பேச்சில்,

கேம்ல நீங்க 100 அடிச்சாலும் அடுத்த கேமுல 0 லிருந்து தான் ஆரம்பிக்கணும். அந்த மாதிரி என்னுடைய வாழ்க்கையில் எல்லா ஸ்டேஜ்லயும் சேலஞ்ச் இருந்துச்சு. அதே மாதிரி அந்த சேலஞ்ச பிக்பாஸ் வீட்டுல ஹேப்பியா சந்திக்க போறேன் என்றார். மேலும், விஜய் சேதுபதியே சுனிதாவின் கருத்துக்கு பாராட்டு தெரிவித்தார்.

இப்படி பாராட்டும் விமர்சனமுமாக முதல் நாளே களைகட்டிய விளையாட்டில் 24 மணிநேரத்திற்குள்ளாகவே ஒருவரை வெளியேற்றிய சம்பவமும் நடந்திருக்கிறது.  முதல் நாளே  எலிமினேஷன் என்பது இதுவரைக்கும் இல்லாத நடை முறையாக இருக்கிறது.  இதில் சாச்சனா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியிருப்பதாக் கூறப்படுகிறது. எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்ற சொல் இந்த 8 வது சீசனுக்குக்குத்தான் பொருந்தும் என்கிறார்கள். இன்னும் என்னவெல்லாம் அதிரடிகளை செய்யப் போறாரோ பிக் பாஸ் பொறுத்திருந்து பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...