No menu items!

BiggBoss – 8 இதெல்லாம்தான் புதுசு!

BiggBoss – 8 இதெல்லாம்தான் புதுசு!

விஜய் டிவியில் ஒளிபரபாக இருக்கும் கேம் ஷோவான பிக பாஸ் நிகழ்ச்சியின் விஜய் சேதுபதியின் வித்தியாசமனாம் டேக் லைன் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக மாறியிருக்கிறது. கமல்ஹாசன் இடத்தை நிரப்புவார் என்கிற நம்பிக்கையை ரசிகர்களுக்கு கடத்தியிருக்கிறது நிகழ்ச்சி தயாரிப்பு நிர்வாகம். இந்த நிலையில், பிக் பாஸ் – 8 நிகழ்ச்சி வரும் அக்டோபர் 6 ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கவுள்ளதாக தொலைக்காட்சி தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதைத்தொடர்ந்த பிக் பாஸ் 8 சீசன் போட்டியாளர்கள் யார் என்ற தகவலும் பரவி வருகிறது. ரோஷினி ஹரிப்ரியன், விஜே விஷால், அக்ஷிதா அசோக், திவ்யா துரைசாமி, ஷாலின் ஜோயா, சம்யுக்தா விஸ்வநாதன், அமலா ஷாஜி, ஜாக்குலின்,தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், நடிகர் செந்தில், வினோத் பாபு, பவித்ரா ஜனனி உள்ளிட்டோர்களின் பெயர்களும் இதில் அடிப்பட்டு வருகிறது. இதில் யார் பிக் பாஸ் வீட்டிற்கு செல்வார்கள் என்பது நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நாளில் தான் தெரியவரும்.

நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டிருக்கும் அரங்கம் இன்னும் வித்தியாசமாக இருக்கும் என்கிறார்கள். அதோடு கடுமையான மழை பெய்யும் மாதத்தில் நிகழ்ச்சி நடக்க இருப்பதால் அவர்களுக்கு முன்னேற்பாடாக பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்கிறார்கள். கடந்த முறை இது போன்ற பிரச்சனையால் போட்டியாளர்கள் தங்கியிருக்கும் பகுதிக்குள் தண்ணீர் புகுந்து விட்டது. இதனால் அவர்களை பாதுகாப்பாக பேருந்து ஒன்றில் ஏற்றி அருகில் இருக்கும் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்க வைத்து அழைத்து வந்தனர். அது போன்ற நிலைமை இந்த முறை வந்து விடக்கூடாது என்று பல முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

கமல்ஹாசன் எந்த விமர்சனங்களையும் எதிர்கொள்ளக்கூடியவர். ஆனால் கடந்த முறை அவர் பிரதீப்பை ரெட் கொடுத்து வெளியேற்றியதை ரசிகர்கள் உட்பட பலரும் விரும்பவில்லை. அவர் பக்கத்து நியாயத்தை கேட்காமலே கமல்ஹாசன் அவர் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார் என்ற குற்ற்சாட்டு எழுந்தது. ஆனாலும் கமல்ஹாசன் அது பற்றி கவலைபடாமல் நிகழ்ச்சியை நடத்தி முடித்தார். வொய்ல்ட் கார்டு மூலமாக பிரதீப்பை கொண்டுவர அப்போதே முயற்சி நடந்தது. ஆனால் அதை கமல் ஆரம்பத்திலேயே தடுத்து விட்டார். இந்த முறை போட்டியாளர்கள் லிஸ்டில் பிரதீப்பின் பெயர் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையே விஜய் சேதுபதியின் 100 நாட்கள் இடையே அவர் நடிக்க இருக்கும் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் தாமதம் ஆவது குறித்தும் தயாரிப்பு தரப்பு கவலையில் ஆழ்ந்திருக்கிறது. இந்த பிரச்சனையை சமாளிப்பதற்கு விஜய் சேதுபதிக்கு சில ஐடியாக்களை பிக் பாஸ் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் செய்து கொடுத்திருக்கிறார்கள்.

கமல்ஹாசனின் இடத்தை விஜய் சேதுபதி நிரப்புவாரா என்பதை முதல் வாரத்திலேயே தெரிந்து கொள்ளலாம். இதனால் அக்டோபர் 6ம் தேதியிலிருந்து விஜய் சேதுபதியின் ஆட்டம் ஆரம்பமாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...