No menu items!

சிஎஸ்கே தக்க வைக்கும் 5 வீரர்கள் யார்?

சிஎஸ்கே தக்க வைக்கும் 5 வீரர்கள் யார்?

ஐபிஎல்லில் இந்த ஆண்டு ஒவ்வொரு அணியும் 5 வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற விதியை பிசிசிஐ அறிமுகப்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. அப்படி ஒரு விதி அமல்படுத்தப்பட்டால், சிஎஸ்கே அணி யாரையெல்லாம் தக்கவைக்கும் என்று பார்ப்போம்.

ருதுராஜ் கெய்க்வாட்:

சிஎஸ்கே அணியின் கேப்டனாக கடந்த ஐபிஎல் தொடரில் பட்டம் சூட்டப்பட்டவர் ருதுராஜ் கெய்க்வாட். அத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அதிக ரன்களை பெற்றுக்கொடுக்கும் தொடக்க ஆட்டக்காரராகவும் அவர் இருக்கிறார். கேப்டன், தொடக்க ஆட்டக்காரர் என்ற இரு பணிகளையும் அவர் சிறப்பாக செய்வதால், இந்த ஆண்டில் தக்கவைக்கப்படும் முதல் வீரராக ருதுராஜ் கெய்க்வாட் இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

ரவீந்திர ஜடேஜா:

தோனி, ரெய்னா ஆகியோருக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களின் மனம்கவர்ந்த வீரர் ரவீந்திர ஜடேஜா, சுழற்பந்து வீச்சுடன் ஃபினிஷிங் நேரத்தில் ஜடேஜாவின் பேட்டிங்கும் பல நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கைகொடுத்துள்ளது. அதனால் ருதுராஜுக்கு அடுத்ததாக அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்கவைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

ஷிவம் துபே:

கடந்த 2 ஐபிஎல் தொடர்களாக சிஎஸ்கே அணியின் முக்கிய வீரராக மாறி வருபவர் ஷிவம் துபே. அதிலும் சுழற்பந்து வீச்சாளர்கள் பந்து வீசினால், அதை சிக்சருக்கு பறக்கவிடும் ஆற்றல் வாய்ந்தவராகவும் ஷிவம் துபே இருக்கிறார். கடந்த ஆண்டு ஐபிஎல்லில் பல போட்டிகளில் சிஎஸ்கேவின் இம்பாக்ட் பிளேயராக இருந்த ஷிவம் துபேவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிச்சயம் தக்கவைக்கும்.

மதிஷா பதிரணா:

பொதுவாக இந்திய வீரர்களைத்தான் ஐபிஎல் அணிகள் உருவாக்கி உள்ளன. ஆனால் சிஎஸ்கே அணி பதிரணாவை இலங்கை அணிக்கு உருவாக்கி கொடுத்துள்ளது. யார்க்கர் போடுவதில் சிறந்தவரான பதிரணா, பல போட்டிகளை சிஎஸ்கே அணிக்கு சாதகமாக திருப்பியவர். அதனால் சென்னை அணியில் தக்கவைக்கப்படும் வெளிநாட்டு வீரராக நிச்சயம் மதிஷா பதிரணா இருப்பார்.

தோனி:

இந்த பட்டியலில் முதலில் இடம்பெற்றிருக்க வேண்டியவர் தோனி. ஆனால் கடைசி இடத்தில் இருப்பதற்கு காரணம், இந்த விஷயத்தில் தோனி இன்னும் முடிவெடுக்கவில்லை என்பதுதான். அடுத்த ஆண்டு ஐபிஎல்லில் ஆடுவோமா இல்லையா என்பதைப்பற்றி கடைசி நேரத்தில்தான் தோனி முடிவெடுக்க உள்ளார். அவர் ஆடுவதாக இருந்தால் சிஎஸ்கே நிர்வாகம் நிச்சயம் அவரை தக்கவைக்கும். இல்லாவிட்டால் அவருக்குப் பதில் ஷர்துல் தாக்குர் அல்லது தீபக் சாஹர் ஆகிய இருவரில் யாராவது ஒருவரை தக்கவைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...