No menu items!

ஐரோப்பிய கார் ரேஸில் அஜித்!

ஐரோப்பிய கார் ரேஸில் அஜித்!

அஜித் குமார் அடுத்த அதிரடிக்கு தயாராகி விட்டார். தமிழ் சினிமா கதாநாயகர்களில் வித்தியாசமானவர் அஜித். திரைப்படங்களில் நடித்துக் கொண்டே தன்னுடைய கார் பந்தய ஆசையையும் தீர்த்துக்கொள்வதில் ஆர்வம் காட்டுவார்.

ஒவ்வொரு திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவின்போதும் தன்னை ரிலாக்ஸ் செய்து கொள்ள பைக் ஓட்டுவதிலும், கார் ஓட்டுவதிலும் ஈடுபடுத்திக்கொள்வார். துணிவு படத்தின் போது இந்தியா முழுவதும் பைக்கிலேயே சுற்றி வருவதற்காக திட்டமிட்டார். அதன்படி இமயமலைப் பகுதியில் தனது நண்பர்கள் குழுவினரோடு சேர்ந்து தொடர் பைக் பயணத்தில் ஈடுபட்டார். அப்போது பல இடங்களில் ரசிகர்கள் அவரை அடையாளம் பார்த்துக் கொண்டு வரவேற்புக் கொடுத்தார்கள். ஒரு முறை நேபாளத்தையொட்டி இருக்கும் பகுதியில் இந்தப் பயணத்தைத் தொடர்ந்து வரும்போது சாலை மார்க்கமாக அவரை அடையாளம் கண்டுகொண்டு காரில் வந்த சிலர பின் தொடர்ந்து சென்றனர். அப்போது தன்னைப் பின் தொடர்ந்து வருவதைக் கவனித்த அஜித்தும் தன் பைக்கை நிறுத்தி விட்டு அவர்களிடம் விசாரித்தார். போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிற ஆசையைத் தெரிவிக்கவே, தயங்காமல் அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டார்.

இதே போல தன்னொடு பைக் பயணம் மேற்கொண்ட சக ரைடர் சுகத் என்பவருக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான பி.எம்.டபிள்.யூ. எஃப் 850 ஜிஎஸ் என்ற பைக்கை பரிசாக கொடுத்திருக்கிறார். சுகத் தான் அஜித் சிக்கிமில் செய்த பைக் ரைடை ஏற்பாடு செய்து கொடுத்தார் என கூறப்படுகிறது.

இது குறித்து பைக்கை பரிசாக பெற்றவர் வெளியிட்ட பதிவில், “2022 ஆம் ஆண்டு எனக்கு மிகவும் அதிர்ஷ்டமானது. தமிழ்த் திரையுலகின் நடிகர் அஜித் குமாரைத் தொடர்புகொள்வது பாக்கியம் என்று நான் கூறுவேன் . அட்வென்ச்சர் பைக்கை தூய்மையான வகுப்பில் ஓட்டும் ஆர்வமுள்ள பைக்கர்.நான் அவருக்காக ஒரு முழுமையான வடகிழக்கு சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்து, அவருடன் எனது நம்பகமான டியூக் 390 இல் சவாரி செய்து கொண்டிருந்தேன். சவாரியைத் தொடர்ந்து, அவர் என்னுடன் நேபாளம் மற்றும் பூட்டானுக்கு இன்னும் ஒரு சுற்றுப்பயணம் செய்வதாக உறுதியளித்தார். என்று அவர் பதிவிட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் விடாமுயற்சி படப்பிடிப்பு முடிந்து விட்டபோதும், தன்னுடன் நடித்த சிலருடன் சேர்ந்து பைக் ரைட் சென்றிருக்கிறார். அவர்களுக்கு பிரியாணி சமைத்தும் கொடுத்திருக்கிறார். படத்தில் வில்லனாக நடித்திருக்கும் ஆரவ் இந்த டூரில் கலந்து கொண்டிருக்கிறார். அஜித்தோடு இந்த டூரில் ஆரவ்வுக்கு பைக் மீதும், பைக் ஓட்டுவதன் மீது இருக்கும் காதலையும், ஆர்வத்தையும் புரிந்துகொண்ட அஜித் சுமார் 35 லட்சம் மதிப்புள்ள பைக் ஒன்றை வாங்கி கிஃப்ட் செய்திருக்கிறாராம்.

இப்படி ரேஸ் பற்றிய பெரிய ஆர்வம் உள்ள அஜித் சமீபத்தில் ரேஸ் கார் ஒன்றையும் வாங்கியிருக்கிறார். அவர் ஐரோப்பிய நாட்டில் நடக்க இருக்கும் பந்தயத்தில் கலந்து கொள்ள இருப்பதாக தெரிகிறது. இது அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...