No menu items!

பிக் பாஸ்க்கு விஜய் சேதுபதி சம்பளம் !

பிக் பாஸ்க்கு விஜய் சேதுபதி சம்பளம் !

கமல்ஹாசன் நடத்தி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது விஜய் சேதுபதி பங்கெடுத்திருக்கிறார். விஜய் சேதுபதி எல்லோருக்கும் பிடித்த நடிகராக இருக்கிறார். அதோடு தனக்கு மனதில் பட்டதை மறைக்காமல் வெளிப்படையாக பேசும் குணம் உடையவர். அவர் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கெடுத்திருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பரபரப்பாக அடுத்த இரண்டு வருடங்களுக்கு படங்களில் ஒப்பந்தம் ஆகியிருக்கும் விஜய் சேதுபதியை கமிட் செய்தததே சேனல் பெற்றிருக்கும் முதல் வெற்றியாக கருதப்படுகிறது. பல படங்களையே தவிர்த்து வந்த சேது இந்த விளையாட்டுக்குள் எப்படி ஒப்பந்தமானார் என்பதுதான் ஆச்சரியம். அவருக்காக காத்திருக்கும் தயாரிப்பாளர்கள் பலருக்கும் இதுதான் புரியாத புதிராக இருக்கிறது. இது பற்றி கேட்டால் எல்லாவற்றிருக்கும் ஒரு விலை உண்டு என்கிறார்கள். சேனல் வட்டாதத்தில் அவரத்தில் மக்கள் விரும்பும் நடிகர்களை தேட முடியாது என்பதால் ஒரே பேமெண்டில் விஜய் சேதுபதியை மறு பேச்சு பேசாமல் புக் பண்ணியிருக்கிறார்கள்.

இப்போது சில விதிமுறைகளை தளர்த்தி முக்கிய போட்டியாளர்களை உள்ளுக்குள் இழுக்க பல திட்டங்களைப் போட்டு வருகிறார்கள் அதன் படி போட்டியாளர்கள் பலரது பெயர்கள் வெளியாகியிருக்கிறது.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை மிக மூத்த காமெடி நடிகராக வலம் வந்தவர் செந்தில். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே பெரிய அளவில் அவர் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார். அவ்வப்போது சின்னத்திரை நாடகங்களிலும் அவர் நடித்து வரும் நிலையில், இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசனில் அவர் பங்கேற்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

மாகாபா ஆனந்த், ரோபோ சங்கர் உள்ளிட்ட முன்னணி தொகுப்பாளர்கள் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதே போல காதல் ஜோடியாக குக் வித் கோமாளி மூலம் புகழ்பெற்ற நடிகை சோயா மற்றும் அவரது காதலர் பிரபல டிடிஎஃப் வாசன் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இப்படி பலரது பெயர்கள் அடிபட்டாலும் கடைசி நேரத்தில்தான் அதிரடியாக பட்டியல் வெளியாகும் என்று தெரிகிறது.

இது பற்றி மாகாபா விடம் கேட்டபோது அப்படிதான் எல்லாரும் சொல்றாங்க ஆனா எனக்கு எந்த அழைப்பும் வரலையே என்று மழுப்பலாக பதில் சொல்லியிருக்கிறார். எப்படியோ இன்னும் சில தினங்களில் வெளியாகிவிடும் என்றே தெரிகிறது.

இந்த நிலையில் விஜய் சேதுபதிக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சம்பளம் பற்றி பேச்சு எழுந்திருக்கிறது. அவருக்கு இந்த தொடரை நடத்தி முடிக்க 50 கோடி கொடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. 100 நாட்கள் என்றால் அதில் அவர் பங்கேற்கும் நாட்களுக்கும், இதனால் அவர் இழந்த திரைப்படங்களின் இழப்பிற்கும் சேர்ந்த்து இந்த சம்பளம் என்கிறார்கள். ஆனால் இஅவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது அனைவருக்கும் ஒரு பாசிடிவான அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். இதன் அனைத்து இல்லத்தரசிகள் மனதில் விஜய் சேதுபதி இடம் பிடித்து விடுவார் என்பது மட்டும் உண்மை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...