தமிழ் சினிமாவில் ஸ்ரீதேவியின் பங்களிப்பை மறக்கவே முடியாது. தமிழ் பெண்ணாக இருந்து , மும்பை சினிமாவை தன் அழகால் கட்டிப்போட்டு வைத்திருந்தார். கடைசி காலகட்டம் வரைக்கும் தனக்கான ரசிகர்களின் அனபைப் பெற்று செல்லும் இடமெல்லாம் அவரைப்பார்க்க கூட்டம் கூடும் நிலை இருந்தது.
பல நாடுகளுக்கு சென்றாலும் அங்கேயும் அவரை கேமராக்கள் பின் தொடர்ந்து சென்றன. இந்த நிலையில் அவரது திடீர் மரணம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது கடைசி திரைப்படமான புலி படத்தில் கம்பீரமான ராணியாக நடிக்க தேர்தெடுக்கப்பட்டதற்கு முதல் காரணம் அவரது அழகுதான்.
அந்த அழகுக்கு கூடுதல் பலமாக இருந்தது முகத்தில் அவர் செய்துகொண்ட சிறிய அறுவை சிகிச்சைத்தான் காரணம். மூக்கில் செய்யபப்ட அந்த அறுவை சிகிச்சையால் அழகு மெருகேற்றிக் கொடுத்தது. இதற்காக அன்றைய காலகட்டத்தில் அமெரிக்கா சென்று வந்தார் ஸ்ரீ தேவி. இது அன்று பிரபலமாக பேசப்பட்டது.
அவரை போனி கபூர் திருமணம் செய்து கொண்ட பிறகும் ஸ்ரீ தேவியின் ஆளுமை கொஞ்சமும் குறையாமல் இருந்தது.
அவருடைய வழியை பின்பற்றி அவரது மகள்கள் ஜான்வி, குஷி இருவரும் திரையுலகில் கால் பதித்து நடித்து வருகிறார்கள். ஜான்வி கபூர் அம்மாவின் அறிவுரையை காப்பாற்ற எப்போதும் உடற்பயிற்சி கூடத்திலேயே இருக்கிறார். இதனால் அவரது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார். அவரும் அங்கு சென்றாலும் கேமராக்கள் பின் தொடர்ந்து செல்கின்றன.
இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு அவரது அம்மா போலவே ஜான்வி அழகுக்காக மூக்கில் அறுவை சிகிச்சையை எடுத்துக் கொண்டார். இதற்குப் பிறகு அவரது தோற்றத்தில் வசீகரமான அதிகரித்துத் தோன்றியது. அவரது புகைப்படங்களைப் பார்த்தால் அதில் அறுவை சிகிச்சைக்கு முன்னும் பின்பும் இருக்கும் அழகு வித்தியாசம் தெரியும். இதன் பிறகு தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் ஜான்வி கபூர்.
இந்த அறுவை சிகிச்சைப் போலவே ஜான்வியின் தங்கை குஷி கபூரும் செய்துள்ளார் என்ற தகவல் பரவியிருக்கிறது. இது பற்றி பத்திரிகையாளர்கள் சிலர் சமீபத்தில் குஷி கபூரிடம் கேட்டிருக்கிறார்கள். அவரோ கொஞ்சமும் தயக்கம் இல்லாமல் அவர்களிடம் ஆமாம் நான் சிறிய ஆப்ரேஷன் செய்துள்ளேன் என்று கூறியிருக்கிறார். சில நடிகைகள் தங்கள் பர்சனல் விஷயங்களை ரகசியமாக வைத்திருப்பார்கள். இதை வெளிப்படையாக குஷி கூறியிருப்பது ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. அவருக்கு பாராட்டும் குவிந்து வருகிறது.
இந்த அழகை மேம்படுத்தும் விஷயமே நிறைய பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் அது கிடைக்குமா என்பது இனிமேல்தான் தெரிய வரும். ஏற்கனவே ஜான்வி செய்து கொண்ட ஆப்ரேஷனுக்கு தகுந்த பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை குஷி கபூருக்கு அது போல நடக்ககூடாது என்பது ஜான்வி கபூரின் வேண்டுதலாக இருக்கிறது.