No menu items!

காதலில் விழுந்தாரா சமந்தா ?

காதலில் விழுந்தாரா சமந்தா ?

சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா சோபித துலிபாலா இருவருக்கும் நிச்சயதார்த்தம் நிறைவாக நடந்த பிறகும் சமந்தா தனது இணையதளத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றை எடுக்காமல் இருப்பது சர்ச்சையாக பேசபட்டு வருகிறது. அது நாக சைதன்யா சமந்தாவுக்கு திருமண நேரத்தில் முத்தம் கொடுக்கும் ஒரு போட்டோ.

அதோடு அவரைப்பற்றிய எதிர்மரையான செய்திகளும் இணையத்தில் வலம் வந்தன. அவர் திருமண முறிவுக்கு முதல் காரணம் அவரது ஆடை வடிமைப்பாளர்தான். அவருக்கும் சமந்தாவுக்குமே உறவு இருக்கிறது என்ற செய்தி அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. ஆனால் சில நிமிடங்களிலேயே அதற்கு எதிர்ப்பு தெரித்து தனது இன்ஸ்டாவில் பதிவிட்டார் சமந்தாவின் நண்பரும், ஆடை வடிவமைப்பாளருமான ப்ரித்தம் ஜுகல்கர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சமந்தாவின் புதிய காதலர் என்று இயக்குனர் ஒருவரின் பெயர் அடிபட்டுக்கொண்டிருக்கிறது. தி பேமிலி மேன் 2 இணையத்தொடரை இயக்கிய ராஜ் நிதிமோர் சமந்தாவுடன் பல இடங்களில் பயணம் செய்து வரும் புகைப்படங்கள் அதிகமாக இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதோடு அடுத்து எடுக்க இருக்கும் சிட்டாடல் என்ற இணையத்தொடரை அவர்தான் இயக்க இருக்கிறார். இதில் சமந்தா முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். இதற்கான பணி நடந்து கொண்டிருக்கிறது. இது ஹாலிவுட் தரத்தில் தயாராகும் ஒரு இந்தியத்தொடர். ஏற்கனவே இதில் பிரியங்கா சோப்ரா நடித்திருக்கிறார். இந்திய வெர்சனில் சமந்தா நடிக்க உள்ளார். இருவருக்கும் சில மாதங்களாகவே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி அது காதலாக மலர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. இது எந்த அளவுக்குன் உண்மை என்பதை சம்ந்தா உறுதிப்படுத்தினால்தான் உண்டு. ஆனால் நாக சைதன்யா திருமணம் முடிந்தவுடன் இப்படியொரு தகவல் பரவுவது எப்படி என்பதுதான் கேள்வியாக இருக்கிறது.

இது எல்லாம் சமந்தாவை ட்ரோல் செய்யும் தெலுங்கு லாபி என்கிறார்கள். இவர்கள் தொடர்ந்து இது போல சமந்தாவுக்கு எதிரான தகவல்களைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் ராஜ் நிதிமோர்க்கு ஏறகனவே திருமணமாகி விட்டது என்பதுதான். இருந்தாலும் இவர்கள் வெளிநாடுகளில் சுற்றுலா போனதுபோல் சுற்றி வருவது பலருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார்கள்.

முன்னாள் கணவரே திருமணம் செய்துகொண்டு விட்ட பிறகு சமந்தாவும் திருமணம் செய்து கொண்டு வாழ்வதில் தவறுஇல்லை. ஆனால் சினிமாவில் தொடர்ந்து வேலை பார்க்கவே திருமண பந்தத்தை முறித்துக் கொண்டார். அவரது அடுத்த இலக்கு திருமணம் இல்லை பாலிவுட் சினிமாவில் முன்னணி இடத்தற்கு வரவேண்டும் என்பதுதான். அதனால் தொடர்ந்து பாலிவுட்டில் கதை கேட்டு வருகிறார் என்றும் சொல்கிறார்கள்.

திருமணமோ திரையுலகமோ சமந்தாவின் சந்தோஷம்தான் நமக்கு முக்கியம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...