No menu items!

விஜய்  – த்ரிஷா– என்ன நடக்குது?

விஜய்  – த்ரிஷா– என்ன நடக்குது?

நடிகர் விஜய் த்ரிஷா இருவரும் வெளிநாடுகளில் சுற்றும்  புகைப்படங்கள் மீண்டும் உலவத்தொடங்கியிருக்கின்றன. விஜய்யின் பிறந்த நாள் செய்திகளைவிடவும் வேகமாக பரவியது,  திரிஷா விஜய்யுடன் இருக்கும் புகைப்படங்கள். 

பொதுவாகவே இருவருக்கும் நடிப்பில்  கெமிஸ்ட்ரி  சிறப்பாக அமைந்ததால் இவர்கள் ஜோடியாக நடித்த கில்லி போன்ற பல படங்கள் சூப்பர் ஹிட். இந்த வெற்றிதான் இருவருக்குமான நட்பிற்கு முதல் படியாக இருந்தது.  இந்த நட்பு நெருக்கமாகி லியோ படம்  வரைக்கும் வந்தது. இதன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே இருவரும் வெளிநாடுகளில் சுற்றுவது போன்ற புகைப்படங்கள் முதல் முறையாக வெளிவந்தது. இது குறித்து அப்போது பெரிய அளவில் பேசப்படவில்லையென்றாலும் இந்த பிறந்த நாள் விழாவில்  அதே போன்ற புகைப்படத்தை த்ரிஷா பகிர்ந்திருந்தது பல்வேறு சர்ச்சைக்களுக்கு வழி வகுத்திருக்கிறது.

இந்த புகைப்படங்களை மறுப்பதே இப்போது விஜய் ரசிகர்களின் வேலையாக இருக்கிறது. இணையத்தில் பகிரப்படும் படங்கள் அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட படங்கள் என்று விஜய் ரசிகர்கள் கூறுகிறார்கள். அதற்கு உதாரணமாய் அஜித் அணிந்திருந்த ஷூவை காட்டுகிறார்கள். ஆனால் விஜய்யும் அதே போன்ற ஒரு ஷூவை அணிகிறார் என்பது கூடுதல் தகவல்.

இந்த புகைப்படங்கள் விஜய், அஜித் ரசிகர்களின் சண்டையாக மாறிவிட்டது. விஜய்க்கு எதிராக ரஜினி ரசிகர்களும் சேர்ந்திருக்கிறார்கள். காக்கா கழுகு கதை சொல்லி பேசிய  பிறகு விஜய்க்கு எதிராக ஏராளமான ரஜினி ரசிகர்கள் திரண்டு விட்டார்கள்.

இந்த சண்டை ஒரு பக்கம் இருக்க,  விஜய் பிறந்த நாளன்று அஜித்தின் பல புகைப்படங்கள் இணையத்தில் தொடர்ந்து வெளியானது. ஏராளமான புகைப்படங்கள்  இப்படி திடிரென்று  களமிறக்கக் காரணம் என்ன அதுவும் விஜய்யின் பிறந்த நாள் கொண்டாட்டம் நடக்கும் தினத்தில் அவர் சார்பாக இந்த புகைப்படங்களை யார் இறக்கியது இப்படி பல கேள்விகள் விஜய்க்கும்  எழாமல் இருந்திருக்காது.

விஜய் – த்ரிஷா இந்த வதந்திகளுக்கெல்லாம் எந்த எதிர்வினையும்  செய்யமால்  இருப்பதானால்  இது பற்றிய தொடர் செய்திகள் வேகமக பரவும்படி செய்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, விஜய்யின் இந்த பிறந்த நாளுக்கு  த்ரிஷா சிறப்பு பரிசு கொடுத்து அசத்தியிருக்கிறாரா?   அந்த நிகழ்வில் எடுக்கப்பட்ட போட்டோவைத்தான் பகிர்ந்திருக்கிறாரா என்ற கேள்விகள் இப்போது எழுந்துள்ளது.  

இதற்கெல்லாம் விஜய் – த்ரிஷா தரப்புகள் மறுப்பு சொன்னாலும்  த்ரிஷாவுக்கு திருமணம் ஆகாமல் இருக்கும் வரைக்கு இந்த வதந்திகளை தடுத்து நிறுத்த முடியாது என்பது  மட்டும் நிச்சயம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...