நடிகர் சரத்குமார் நாடாளுமன்றத் தேர்தலில் தனது மனைவி ராதிகாவுக்காக கடுமையாக பிரச்சாரம் செய்து முடித்திருந்தார். ஆனால் தேர்தல் முடிவுகள் வேறு மாதிரி அழைந்து விட்டது. மனைவிக்காக சரத்குமார் அங்கபிரதட்ணம் செய்து வழிபட்ட வீடியோ வைரலாக பரவியது. மனைவியை வெற்றி பெற வைக்க முடியாத சோகத்தில் இரும்க்கும் சரத்குமார் நிலையில் அவரை இன்னொரு சிக்கலும் சூழ்ந்திருக்கிறது. சென்னையில் சில இடங்களில் சரத்குமாருக்கு வீடுகள் இருக்கிறது. அப்படி தியாகராய நகர் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அவருக்கு சொந்தமான ஒரு வீடு இருக்கிறது. இந்த குடியிருப்பில் பல குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் சரத்குமார் வீடு இருக்கிறது.
இந்த நிலையில்தான் சரத்குமார் மீது இங்கு குடியிருப்பவர்கள் புகார் தொடுத்திருக்கிறார்கள். இந்த குடியிருப்பின் கட்டிடத்தில் இருக்கும் மாடிப்பகுதியை அனைவரும் பயன்படுத்தி வந்தனர். ஆனால் சில காலங்களாக இங்கு சரத்குமார் ஆக்கிரத்துக் கொண்டு யாரும் பயன்படுத்த முடியாத நிலையை உருவாக்கியிருப்பதாக இங்கு குடியிருப்பவர்கள் சங்கத்தில் புகார் தெரிவித்திருக்கிறார்கள். அவர்கள் இதை சரத்குமாரின் கவனத்துக்கு கொண்டு சென்றும் எந்த பயனும் இல்லாததால் நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கும் அளவுக்கு போயிருக்கிறது.
குடியிருப்பவர்கள் அனைவரும் சேர்ந்து கொடுத்துள்ள இந்த புகாரில் தனுஷின் பெற்றோர் கஸ்தூரி ராஜா, விஜயலட்சுமி தம்பதியும் இருக்கிறார்கள். சரத்குமார் இப்போதுதான் தனது சமத்துவ மக்கள் கட்சியை பாரதிய ஜனதா கட்சியோடு சேர்த்தார். இதனால் வழக்கு தொடர்ந்து பல மாதங்களுக்குப் பிறகு இப்போது வெளியே தெரிய வந்திருக்கிறது. மக்கள் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள நினைக்கும் சரத்குமார் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கத்தோடு நடந்து கொள்ளலாமா என்று இணையத்தில் ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.
தேர்தலில் தோல்வியடந்ததற்கே இணையத்தில் ராதிகாவை ஒரு பக்கம் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகிறார்கள். சூர்யவம்சம் படத்தில் தேவயானியை மட்டும் கலெக்டர் ஆக்குவீங்க என்னை எம்.பி. ஆக்க மாட்டீங்களா என்று சரத்குமாரைப் பார்த்து ராதிகா கேட்பது போன்ற மீம்ஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த நேரத்தில் சரத்குமாருக்கு எதிராக கிளம்பியிருக்கும் இந்த செய்தி ராதிகாவை மேலும் வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
சரத்குமார் ராதிகா இருவரும் குடியிருப்பது கொட்டிவாக்கம் வீட்டில்தான் இங்கு அவர் சில நேரங்களில் பட வேளைகள் பார்க்கவும் நண்பர்களை சந்திக்கவும் இந்த வீட்டை பயன்படுத்தி வந்தார். பல நாட்கள் சொல்லியும் சரத்குமார் அதை காதில் போட்டுக்கொள்ளாததால்தான் நீதிமன்றத்தை நாடவேண்டியிருந்தது என்கிறாகள் அங்கு குடியிருக்கும் சிலர்.