No menu items!

விஜயபிரபாகரன் தோற்கவில்லை… தோற்கடிக்கப்பட்டார்! – கொந்தளிக்கும் பிரேமலதா

விஜயபிரபாகரன் தோற்கவில்லை… தோற்கடிக்கப்பட்டார்! – கொந்தளிக்கும் பிரேமலதா

நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட விஜயகாந்த்தின் மகன் விஜயபிரபாகரன் 14,164 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான மாணிக்கம் தாகூரிடம் தோல்வியடைந்தார். ஒரு கட்ட்த்தில் முன்னிலையில் இருந்த அவர், கடைசியில் தோல்வியை தழுவியது தேமுதிக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று காலையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

விருதுநகரில் விஜயபிரபாகரன் தோற்கவில்லை. தோற்கடிக்கப்பட்டுள்ளார். வீழ்ச்சியடையவில்லை, வீழ்த்தப்பட்டிருக்கிறார். இதுதான் உண்மை. கேப்டன் நினைவில் இருந்து மீளவில்லை என்பதால் தேர்தலில் போட்டியிடவில்லை என்றுதான் விஜயபிரபாகரன் முதலில் கூறினார். பிறகு கட்சி நிர்வாகிகள் கேட்ட்தால் போட்டியிட ஒப்புக்கொண்டார்.

விஜய பிரபாகரன் இந்த தேர்தலில் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டுள்ளார். அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. வாக்கு எண்ணிக்கையின்போது வாக்கு எண்ணும் மையத்தில் சொல்லப்பட்ட அறிவிப்புகளுக்கும், ஊடகங்களில் சொல்லப்பட்ட அறிவிப்புகளுக்கும் ஏகப்பட்ட முரண்பாடுகள் இருந்தன. வாக்கு எண்ணும் மையத்தில் பல முறைகேடுகள் நடந்ததாக அங்கிருக்கும் அதிகாரிகளே சொல்கிறார்கள்.

அங்கு ஆட்சியர், மதிய உணவு இடைவேளைக்கு பிறகு இரண்டு மணிநேரம் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தினார். இதுபற்றி கேட்ட்தற்கு “பல்வேறு தரப்பிலும் இருந்து எனக்கு நிர்பந்தங்கள் அதிகமாக இருக்கிறது. என்னால் சமாளிக்க முடியவில்லை. போனை சுவிட்ச் ஆப் செய்யப்போகிறேன்” என்று கலெக்டர் வெளியே வந்து கூறினார். ஆட்சியரை செயல்படவிடாமல் தடுத்தது யார் என்று தெரிய வேண்டும்.

வாக்கு எண்ணிக்கை நடக்கும்போதே, ராஜேந்திர பாலாஜி தவறு நடப்பதாக அங்கேயே முறையிட்டார். தேமுதிக, அதிமுக நிர்வாகிகள் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என கோரினர். ஆனால், ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மிரட்டும் தொனியில் போலீஸ் படையை இறக்கினர். இதனால் தான் விஜயபிரபாகரன் தோல்வியில் சூழ்ச்சி செய்யப்பட்டுள்ளது. விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை கோரி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளோம்

தேர்தல் முடிவை அறிவிப்பதற்கு முன்பே முதல்வர் ஸ்டாலின் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வென்றது என்கிறார். முதல்வர் அறிவிக்கும்போது நான்கு தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடந்துகொண்டு இருந்த்து. எதை வைத்து 40 தொகுதிகளிலும் வெற்றி என்று முதல்வர் முன்கூட்டியே கூறினார்? இதற்கு அவர் விளக்கம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

தேர்தல் அதிகாரி விளக்கம்

இந்நிலையில், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “விருதுநகர் தொகுதி தொடர்பாக இதுவரை தேர்தல் ஆணையத்திற்கு புகார் எதுவும் வரவில்லை. வேட்பாளர்களுக்கு சந்தேகம் இருந்தால் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். மறுவாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஐகோர்ட்டை நாடுவதே முறை. கோர்ட்டு வழிகாட்டுதலின் பேரிலேயே மறுவாக்கு எண்ணிக்கை நடைபெறும். தேர்தல் நடைபெற்று 45 நாட்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்” என்று தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...