No menu items!

இளையராஜாவின் சிம்பொனி – இதுதான்!

இளையராஜாவின் சிம்பொனி – இதுதான்!

தேனி கண்ணன்


தமிழ் சினிமா ரசிகர்களை பொறுத்தவரை இசை என்றாலே அது திரைப்படப் பாடலாகவும், ஆடுவதற்கும், கொண்டாட்டத்திற்குமான அடையாளமாகவுமாகவே பார்க்கப்பட்டு வருகிறது. அதுவும் திரையிசையும் அதிகபட்சமாக டிசம்பர் மாதத்தின் போது உலா வரும் கர்நாடக சங்கீதம் மட்டுமே இசை என்ற பார்வை பலருக்கும் இருக்கிறது.

திரையுலகிற்கு இளையராஜா வந்த பிறகு, தன் திரையிசைப் பணிகளுக்கு இடையே அறிமுகம் செய்து வைத்த வார்த்தைதான் சிம்பொனி .

அதுவரைக்கும் இந்த வார்த்தையை இசைக்கலைஞர்கள் யாரும் பயன்படுத்தியது இல்லை.

இது ஒருவகையான இசைக்குறிப்புகள்தான்.

முழு குறிப்புகளையும் ஒரு சேர வாசிக்கப்படும் இசை வடிவம்.

எளிய முறையில் சொன்னால் நம் நாட்டில் எண்பதுகளில் கடைசியில் தொலைக்காட்சியில் சேர்ந்திசை என்ற ஒரு பகுதி வரும். மாணவர்கள் வரிசையாக நின்று கொண்டு குறிப்பிட்ட ஒரு பாரதியார் எழுதிய கவிதையான கொட்டடா முரசு கொட்டடா என்ற பாடலை ஏற்ற இறக்கத்துடன் பாடிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும்.

இதன் இசை வடிவம்தான் சிம்பொனி என்பது.

பல்வேறு வாத்தியக்கருவிகளுக்காக எழுதப்பட்ட இசைக்குறிப்புகளை வேறு வேறு ரிதம் அளவில் வாசிப்படும். முதன் முதலில் இளையராஜா அவர்களை சிம்பொனி எழுத சில முயற்சித்த போது அதை வாசிக்கும் இசைக்குழுவான ராயல் பில்ஹர்மனிக் இசைக்குழு இளையராஜாவை எங்களுக்கு தெரியாது என்று கூறி தயங்கியிருக்கிறார்கள். ஆனால் இளையராஜ இதை பற்றி சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் தான் இசையமைத்த ஹவ் டூ நேம் இட், நத்திங் பட் விண்ட் ஆகிய இரண்டு இசை சிடிக்களை அவர்களுக்கு அனுப்பி வைத்தார். அதை அந்தக் குழு கேட்டு பிறகுதான் வாசிக்க சம்மதம் தெரிவித்தார்கள்.

சிம்பொனி என்பது பற்றி இளையராஜா கூறும்போது “நம் இசை வடிவத்தில் கீதம், ஸ்வரஜாதி, வர்ணம், கீர்த்தனம் என்று பல கூறுகள் உள்ளன. அதில் திரைப்பட இசையும் ஒரு வடிவம். இதில் பல்லவி, அனுபல்லவி சரணம் என்று இருப்பதைப்போலவே சிம்பொனி என்ற ஒரு இசை வடிவம் இருக்கிறது என்கிறார்.

முதல் சிம்பொனியை இசையை இளையரஜா எழுதி ராயல் பில்ஹார்மனிக் இசைக்குழு வாசித்து முடித்தவுடன் எழுந்து நின்று கைதட்டி அவரைப் பாராட்டினார்கள். காரணம் இதுவரைக்கும் சிம்பொனி எழுத 14 ஆண்டுகள் எடுத்துக் கோண்டுள்ளனர். இதுதான் வழக்கமாக இருந்திருக்கிறது.

ஆனால் இளையராஜா முதல் முறையாக எழுதும் போதும் ஒரு மாதத்தில் எழுதி முடித்தார். தற்போதும் ஒரு மாதத்தில் எழுதி முடித்திருக்கிறார். இதுவே மிகபெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

இதற்கான முன் முயற்சியாக இளையராஜா பல திரைப்படப் பாடல்களில் தனது இசைக்குறிப்புகளை சிம்பொனி சாயலில் எழுதியிருப்பார். குறிப்பாக கோழிக்கூவுது திரைப்படத்தில் வரும் ஏதோ மோகம்.. ஏதோ தாகம்.. பாடலும், அவதாரம் படத்தில் தென்றல் வந்து தீண்டும் போது…என்ற பாடலும் அந்த முயற்சியாக செய்திருப்பார்.

சில நாட்களுக்கு முன்பு நேரு உள் விளையாட்டரங்கில் இதை வெளிப்படையாக ரசிகர்களுக்கு வாசித்துக் காட்டினார் இளையராஜா. அவரது குழுவில் இருந்த நடத்துனர் ஜான் ஸ்காட் இது குறித்து அதே மேடையில் வியந்து பேசியதும் குறிப்பிடத்தக்கது. இதன் அடுத்தக்கட்டமாக அடுத்த இசைப்பாய்ச்சலுக்குத்தான் இளையராஜா தயாராகியிருக்கிறார்.

சமீபகாலமாக அவரை பற்றி வரும் சர்ச்சையான கருத்துக்களையெல்லாம் புறந்தள்ளி விட்டு சத்தமில்லாமல் சாதனைப் பயணத்துக்கு தயாராகியிருக்கும் இளையராஜா இந்தியாவின் பெருமைமிகு அடையாளம்தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...