No menu items!

விஜயின் GOAT அமோக விற்பனை!

விஜயின் GOAT அமோக விற்பனை!

விஜய் அரசியலுக்கு வரப் போகிறார். இனி ஒரு படம் மட்டும்தான் நடிப்பார். கோட் படத்தில் விஜய்க்கு 2 கதாபாத்திரங்கள். அதில் ஒன்றில் இளமையான விஜயைப் பார்க்கலாம். விஜயை இளமையாக காட்டுவதற்காகவே டி-ஏஜிங் சமாச்சாரங்களுக்கு பல கோடிகளை செலவிட்டு உள்ளார்கள்.

இப்படி பல பில்டப் அம்சங்கள் இருப்பதால், விஜய் பட வியாபாரம் நன்றாகவே சூடுப்பிடித்திருக்கிறது. ‘கோட்’ படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பெரும் பட்ஜெட்டில் எடுக்க காரணமே போட்ட முதலீட்டை எப்படியாவது எடுத்துவிடலாம் என்ற நம்பிக்கையில்தான். அது இப்போது நடக்க ஆரம்பித்திருக்கிறது.

முக்கிய காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், இப்போது போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. இதனால் பட வியாபார விஷயங்களில் ஏஜிஎஸ் நிறுவனம் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறது.

முதலில் ஏஜிஎஸ் எதிர்பார்த்த வியாபாரம் ஒடிடி உரிமை. விஜயின் முந்தையப் படமான ‘லியோ’வின் ஒடிடி ஸ்ட்ரீமிங் உரிமை 70 கோடிக்கும் மேல் விலைப் போயிருந்தது. இதனால் ஒடிடி உரிமையில் நூறு கோடிக்கும் மேல் ஏஜிஎஸ் நிறுவனம் எதிர்பார்த்ததாம்.

விஜய் பட ஒடிடி உரிமையை வாங்க அமேசான், நெட்ஃப்ளிக்ஸ் இடையேதான் போட்டி நிலவி இருக்கிறது. ஜியோ சினிமாவில் இன்னும் படங்கள் வாங்குவதற்கான பட்ஜெட்டை பெரியளவில் ஒதுக்கவில்லையாம். இதனால் அது இந்த வியாபார போட்டியிலேயே இல்லையாம்.

அமேசானுக்கும், நெட்ஃப்ளிக்ஸூக்கும் நடந்த வியாபார போட்டியில், நெட்ஃப்ளிக்ஸ் சுமார் 125 கோடிக்கு விலை பேசியிருக்கிறதாம். இறுதி சுற்று பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது என்கிறார்கள்.

அடுத்து தொலைக்காட்சி உரிமை. இந்த வியாபாரத்தில் விஜயுடன் இருக்கும் ஒருவித மனக்கசப்பினால் அந்த பிரகாசமான டிவி ஆர்வம் காட்டவில்லையாம். அதே போல் நிதி ஒதுக்கீடு இல்லாததால் விஜய் டிவியும் களத்தில் இல்லையாம். இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட ஸீ டிவி அனைத்து மொழி தொலைக்காட்சி உரிமையையும் சுமார் 70 கோடிக்கு வாங்க ஒப்புக்கொண்டிருப்பதாக கூறுகிறார்கள்.

இதனால் ஏறக்குறைய 200 கோடி வியாபாரம் அதாவது திரையரங்கு உரிமை, வெளிநாட்டு உரிமை, டிஜிட்டல் உரிமை என இவையெல்லாம் இல்லாமலேயே ஏறக்குறைய 200 கோடி வரை வியாபாரம் உறுதியாகி இருக்கிறது என தமிழ் சினிமா வியாபார வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.

இதனால் விஜயும், ஏஜிஎஸ்-ஸூம் ரொம்பவே உற்சாகத்தில் இருக்கிறார்களாம்.


கோலிவுட்டை கலங்கடிக்கும் சுசித்ரா

கோலிவுட் நட்சத்திரங்கள் மத்தியில் ஒரு பீதி நிலவுவது உண்மைதான். இதுவரை சலனமில்லாமல் ஓடிக்கொண்டிருந்த பல நட்சத்திரங்களின் வாழ்க்கையில் இப்போது கோடை மழை கொண்டாட்டத்துடன், சர்ச்சைகள் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்திருக்கிறது.

நடிகர், சமூக ஊடக பிரபலமான பயில்வான் பற்றிய கருத்தை கேட்க திட்டமிடப்பட்ட பேட்டியில், சுசித்ரா யாரென்றும் வஞ்சனையே வைக்காமல் கோலிவுட்டின் முக்கிய நட்சத்திரங்கள் பற்றிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

விஜய், த்ரிஷா, கமல், சங்கீதா, க்ருஷ், தனுஷ், ஆண்ட்ரியா, முன்னாள் கணவர் கார்த்தி என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளத்தையே தனது பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார்.

வெள்ளித்தட்டில் போதைப் பொருள், ஒரினச்சேர்க்கை, குரூப் கொண்ட்டாட்டம், டேர் சவால்கள் என பல விஷயங்களையும் தனது பேட்டியில் சொன்னதுதான் இப்போது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

சுசித்ரா சொன்னவை பொய் என்றோ, தவறு என்றோ அவர் குறிப்பிட்ட நட்சத்திரங்கள் யாருமே கருத்து தெரிவிக்கவில்லை. சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் மட்டுமே இப்போது வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

சமீபகாலமாகவே நடிகைகளுக்கு எதிராக சர்ச்சைகளை யாராவது கிளப்பிய போதெல்லாம் சம்பந்தப்பட்ட நடிகைகளும் அவர்களுக்கு ஆதரவாக நடிகர்களும் தங்களது குரலை பதிவு செய்தனர்.

ஆனால் சுசித்ராவின் இந்த பேட்டிக்கும், அவர் சொன்னவற்றுக்கும் ஏன் யாரும் எதிர்வினையாற்றவே இல்லை என்ற கேள்வி கொஞ்சம் கொஞ்சமாக ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது.

இதுபற்றி கோலிவுட்டின் சீனியர்களிடம் விசாரித்தால், ‘சுசித்ரா பெயரில் இதற்கு முன்பு வந்த சுசி லீக்ஸ் என்ற நட்சத்திரங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை வெளிப்படுத்திய பதிவுக்கே யாரும் பெரிதாக புகார் கொடுக்கவில்லை. நட்சத்திரங்களின் நெருக்கமான புகைப்படங்கள் வெளியான போதும் யாரும் அதை தடுக்க முயலவில்லை. கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர்.

அதற்கான காரணம் இப்போதுதான் தெரிய வந்திருக்கிறது. விளையாட்டுத்தனமாக சிலர் செய்த காரியம் என்பது இப்போது புரிகிறது. அவர்கள் தெரிந்தே செய்திருக்கலாம் என்பது இப்போது பேசு பொருளாகி இருக்கிறது.

ஆனால் சுசித்ரா குறிப்பிடும் அனைத்தும் உண்மையா இல்லையா என்பது தெரியாது. ஆனால் அவர் சொல்வதை தவிர்க்கவும் முடியாது. அதனால் இதற்கு மு நடந்த சம்பங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், அதற்கான விடை கிடைக்கலாம்.

மேலும் சுசித்ரா சொல்லும் பல சம்பவங்கள் எதுவும் இப்போதோ, நேற்றோ, கடந்த வாரமோ நடக்கவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்தவை.

சம்பந்தப்பட்ட சில நட்சத்திரங்களுக்கு அப்போது மார்க்கெட், மவுசு எல்லாம் இருந்தாலும், அவர்களுக்கு அப்போது இந்தளவிற்கான மனப்பக்குவமோ அல்லது புரிதலோ இல்லை என்பதும் உண்மை. சுசித்ரா சொல்வதில் சில உண்மைகள் இருக்கின்றன.

ஆனால் இன்று அதில் சம்பந்தபட்ட நட்சத்திரங்கள் அதையெல்லாம் தாண்டி வந்துவிட்டார்கள். வாழ்க்கையின் புரிதலோடு இவர்கள் இன்று வேறு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் போது, பழைய பஞ்சாயத்துகளை இப்போது நடப்பது போல் கூறியிருப்பது கோலிவுட்டை கலங்கடித்து இருக்கிறது.

இந்த முறையும் பாதிப்பு நிலையை கட்டுப்படுத்த யாரும் தயாராக இல்லை. வெகுவிரைவிலேயே இந்த பிரச்சினையை அப்படியே சத்தமில்லாமல் செய்வதற்கான வேலைகளில் இறங்கியிருக்கிறார்கள்’ என்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...