No menu items!

RCBயிடம் தோற்றால் CSK ப்ளே ஆஃப் செல்லுமா?

RCBயிடம் தோற்றால் CSK ப்ளே ஆஃப் செல்லுமா?

இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது ஐபிஎல். லீக் சுற்றின் கடைசி ஆட்டங்களை ஒவ்வொரு அணியும் நெருங்கியிருக்கும் நிலையில், அவர்களில் ப்ளே ஆஃப் சுற்றை எட்டப் போவது யார் என்ற சஸ்பென்ஸ் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல ஒவ்வொரு அணிக்கும் உள்ள வாய்ப்பைப் பற்றி பார்ப்போம்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

இந்த ஐபிஎல்லின் லீக் சுற்றில் 18 புள்ளிகளைப் பெற்றுள்ள ஒரே அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ். அதனால் அந்த அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் ஏற்கெனவே சொகுசாக நுழைந்துவிட்டது. அதிலும் ப்ளே ஆஃபில் முதல் 2 இடங்களைப் பிடித்த காரணத்தால், இறுதி ஆட்டத்துக்குள் நுழைய அந்த அணிக்கு 2 வாய்ப்புகள் உருவாகி உள்ளன. அதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரசிகர்கள் இனி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்வதைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.

ராஜஸ்தான் ராயல்ஸ்:

சென்னையில் நேற்று நடந்த போட்டியில் சிஎஸ்கே அணியிடம் தோற்றாலும், 16 புள்ளிகளைப் பெற்றுள்ள காரணத்தால் ராஜஸ்தான் அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பும் நன்றாகத்தான் இருக்கிறது. அந்த அணியின் இப்போதைய ஒரே கவலை கடைசி 2 போட்டிகளில் ஒரு ஆட்டத்திலாவது ஜெயிக்க வேண்டுமே என்பதுதான். அப்படி ஜெயித்தால்தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் முதல் 2 இடங்களுக்குள் வர முடியும். அப்படி வந்தால் முதலாவது ப்ளே ஆஃப் போட்டியில் தோற்றாலும், இறுதிப் போட்டிக்கு போக 2-வது வாய்ப்பு கிடைக்கும். அதனால் அடுத்த 2 போட்டிகளில் ஏதாவது ஒன்றில் ஜெயிப்பதே அந்த அணியின் இப்போதைய லட்சியம்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

12 போட்டிகளில் ஆடியுள்ள சன்ரைசர்ஸ் அணி, இப்போது 14 புள்ளிகளைப் பெற்றுள்ளது. அதன் நெட் ரன் ரேட் 0.406. இது சென்னையை விட குறைவாக உள்ளது நமக்கு ஆறுதல் அளிக்கும் செய்தி. ஆனால் அவர்களுக்கு 2 ஆட்டங்கள் இருப்பதால் அதில் ஏதாவது ஒன்றில் ஜெயிக்க வாய்ப்புள்ளது. அதனால் ப்ளே ஆஃப் செல்லும் 3-வது அணியாக சன்ரைசர்ஸ் அணி இருக்க வாய்ப்புகள் அதிகம்.

சென்னை சூப்பர் கிங்ஸ்:

புள்ளிப்பட்டியலில் இப்போதைக்கு மூன்றாவது இடத்தில் இருக்கும் அணி நம் சென்னை சூப்பர் கிங்ஸ். 14 புள்ளிகளைப் பெற்றுள்ளதுடன், 0.528 என்ற வலுவான நெட் ரன் ரேட்டையும் சிஎஸ்கே அணி பெற்றுள்ளது. இருந்தாலும் வரும் சனிக்கிழமையன்று ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகவும் முக்கியமானது. இந்த போட்டியில் ஜெயித்தால், சென்னை அணி மற்ற ஆட்டங்களின் எந்த முடிவையும் பற்றி கவலைப்படாமல் இருக்கலாம். ஏனென்றால் மற்ற ஆட்டங்களில் யார் ஜெயித்தாலும் தோற்றாலும் சிஎஸ்கே அணி 16 புள்ளிகளைப் பெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும்.

அப்படியென்றால் தோற்றால் சிஎஸ்கே அணியால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு போக முடியாதா?…
முடியும் ஆனால் குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் தோற்க வேண்டும். ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இப்போது 12 புள்ளிகளுடன் இருக்கிறது. அதன் நெட் ரன் ரேட் 0.387. இது சிஎஸ்கேவின் ரன் ரேட்டைவிட குறைவு. அதனால் சனிக்கிழமை நடக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை குறைந்தது 18 ரன்கள் வித்தியாசத்தில் ஜெயித்தால்தான் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் ப்ளே ஆஃப் செல்ல முடியும். அதே நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக இருந்தால், சிஎஸ்கே அணி கொடுக்கும் டார்கெட்டை 18.1 ஓவர்களுக்குள் ஆர்சிபி விரட்டிப் பிடிக்க வேண்டும் அப்போதுதான் அவர்களால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நெட் ரன் ரேட்டில் முந்த முடியும். அதனால் ஆர்சிபி அணியிடம் தோற்றாலும் மிக்க் குறுகிய வித்தியாசத்தில் தோற்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ப்ளே ஆஃப் செல்ல வாய்ப்பு கிடைக்கும்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:

12 புள்ளிகளைப் பெற்றுள்ள லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு இன்னும் 2 போட்டிகள் மீதம் உள்ளன. ப்ளே ஆஃப் சுற்றை நெருங்க, அந்த அணி 2 போட்டிகளிலும் ஜெயித்தாக வேண்டும். அதன் நெட் ரன் ரேட் -0.769 என இருப்பதால், ஒரு போட்டியில் தோற்றாலும் தொடரில் இருந்து வெலியேறிவிடும்.

டெல்லி கேபிடல்ஸ்:

ஆர்சிபி அணியிடம் நேற்று நடந்த ஆட்ட்த்தில் தோற்ற டெல்லி கேபிடல்ஸ் அணியின் புள்ளிகள் 12. அந்த அணிக்கு இன்னும் ஒரு போட்டி மட்டுமே மீதமுள்ளது. லக்னோ அணிக்கு எதிரான அந்த போட்டியில் மிகப்பெரிய வித்தியாசத்தில் ஜெயித்தால் மட்டுமே டெல்லி அணியால் ப்ளே ஆஃப் கனவைக் காண முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...