No menu items!

ரஜினிக்கு நோ சொன்ன ஷாரூக்கான்

ரஜினிக்கு நோ சொன்ன ஷாரூக்கான்

ரஜினியும், லோகேஷ் கனகராஜூம் அடுத்த இணைந்து பணியாற்ற இருக்கிறார்கள். இதற்கு தற்காலிகமாக ‘தலைவர் 171’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். தமிழ்நாடில் தேர்தல் முடிந்ததும், 22-ம் தேதி இப்படத்தின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள்.

இதனால் இப்படத்தின் ப்ரீ-ப்ரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. அதேபோல் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கும் நட்சத்திர தேர்வும் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ரஜினிக்கு வில்லனாக மைக் மோகனைக் கேட்டிருக்கிறார்கள். அதேபோல் முக்கியமான காட்சியொன்றில் சிறப்புத்தோற்றத்தில் நடிக்க, ஷாரூக்கான் தரப்பை அணுகியிருந்தார் லோகேஷ் கனகராஜ். ரஜினியும் ஷாரூக்கான் என்றால் நன்றாக இருக்கும் என ஒப்புதல் தெரிவித்துவிட்டார்.

ஆனால் இப்போது ஷாரூக்கான், என்னால் நடிக்க முடியாது. நோ என்று சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. ஷாரூக்கான் இப்போதைக்கு படம் எதிலும் மும்முரமாக நடித்து கொண்டிருக்கவில்லை என்றாலும், எதற்கு மறுத்தார் என்பதுதான் தெரியவில்லை. இது ரஜினிக்கே கொஞ்சம் ஏமாற்றம்தானாம்.

இதனால் அடுத்து யாரைக் கேட்கலாம் என்று யோசித்திருக்கிறார்கள். அதில் அடிப்பட்ட பெயர் ரன்வீர் சிங். தீபிகா படுகோன்னை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கும் அதே ரன்வீர்தான். இவருக்கும் ரஜினி ஒகே சொல்லிவிட்டாராம். அநேகமாக ரன்வீர் சிங் நடிப்பது உறுதியாகி விட்டதாக சொல்கிறார்கள்.

ரன்வீர் சிங்கைத் தவிர்த்து மூன்று முக்கிய கதாபாத்திரங்களுக்கான நட்சத்திரத் தேர்வு பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். இதில் ஷ்ருதி ஹாசன் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இவருக்கு ரஜினியின் மகள் கதாபாத்திரம் இருக்கலாம் என தெரிகிறது.

அடுத்து சத்யராஜ் மற்றும் ராகவா லாரன்ஸ் இருவரையும் ரஜினி ஒகே என டிக் செய்திருக்கிறார். இதனால் இவர்கள் இருவரிடமும் சம்பளம் மற்றும் கால்ஷீட் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

ஷாரூக்கான் நடித்தால், பான் – இந்தியப் படமாக விளம்பரப்படுத்த முடியு,மென லோகேஷ் கனகராஜ் கணக்குப் போட்டது, இப்போது தலைக்கீழாக இருப்பதால் ’வடை போச்சே’ பாணியில் லோகேஷ் தரப்பு ஏமாற்றத்தில் இருக்கிறதாம்.


டல்லடிக்கும் ‘கோட்’ வியாபாரம்

வெங்கட் பிரபு – விஜய் இணைந்திருக்கும் ‘க்ரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் ஷூட்டிங் இப்போது ரஷ்யாவில் நடந்து வருகிறது. இந்நிலையில் ‘விசில் போடு’ என்ற சிங்கிள் ட்ராக்கை ‘கோட்’ படக்குழு வெளியிட்டது.

இந்தப் பாடலுக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்பதால் தயாரிப்பு நிறுவனம் ஏஜிஎஸ் பெரும் ஏமாற்றத்தில் இருக்கிறதாம். யுவன் ஷங்கர் ராஜா அடுத்தடுத்த பாடல்களையாவது ஹிட் பாடல்களாக கொடுப்பாரா என்று விஜய் ரசிகர்களும் புலம்ப ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்த அடி ஒரு பக்கம் என்றால், பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், விடிவி கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், ப்ரேம்ஜி, ஆரவிந்த் ஆகாஷ், சினேகா, லைலா, மீனாட்சி செளத்ரி என பெரும் நட்சத்திரப் பட்டாளமும் இருந்தாலும் படத்தின் வியாபாரமும் ரொம்பவே டல்லடிக்கிறதாம்.

வருகிற செப்டெம்பர் மாதம் 5- ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டு விட்டது. இதனால் பட வியாபாரத்தில் தயாரிப்பு நிறுவனம் மும்முரம் காட்டி வருகிறது.

விஜயின் முந்தையப் படமான ‘லியோ’வுக்கு கிடைத்த எதிர்மறையான விமர்சனங்களும், கருத்துகளும் ‘கோட்’ வியாபாரத்தை பதம் பார்த்து இருப்பதாக விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

அதாவது லியோவின் தொலைக்காட்சி உரிமை சுமார் 80 கோடிக்கு விலைப் போனதாகவும், அதன் இணைய உரிமை சுமார் 120 கோடிக்கு விற்பனை ஆனதாகவும், வெளிநாட்டு உரிமை சுமார் 60 கோடி விலைப் போனதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ‘கோட்’ பட வியாபாரம் லியோவை விட அதிகமிருக்கும் என தயாரிப்பு தரப்பு நினைத்திருக்கிறது. ஆனால், கோட் பட த்தின் இணைய உரிமையை வெறும் 90 கோடிக்கு கேட்கிறார்களாம். அதாவது லியோவை விட 30 கோடி குறைவு.

அடுத்து தொலைக்காட்சி உரிமை சுமார் 50 கோடிதான் என்கிறார்களாம். இதுவும் லியோவைவிட 30 கோடி குறைவு.

மேலும் வெளிநாட்டு உரிமை வெறும் 45 கோடிக்குதான் கேட்கப்படுகிறதாம். இந்த விலை லியோவின் வெளிநாட்டு உரிமைக்காக கொடுக்கபட்ட 60 கோடிக்கும் குறைவு.

இப்படி திரும்பிய பக்கமெல்லாம் வியாபாரத்தில் எதிர்பார்த்த தொகையோ, லாபமோ கிடைக்கவில்லையாம். ஆனால் லியோவை விட கோட் படத்தில் நடிக்க விஜய் வாங்கிய சம்பளம் சுமார் 15 கோடி அதிகம் இருக்கும் என்கிறார்கள்.

கோட் வியாபாரம் பெரியளவில் இருக்குமென, உற்சாகத்தில் இருந்த ஏஜிஎஸ், பட்ஜெட்டை கொஞ்சம் தாராளமாக்கியது. இப்போது கலக்கத்தில் இருக்கிறதாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...