No menu items!

முடிகிறது தேர்தல் பிரச்சாரம் – தேர்தல் ஆணையத்தின் புதிய கட்டுப்பாடுகள்

முடிகிறது தேர்தல் பிரச்சாரம் – தேர்தல் ஆணையத்தின் புதிய கட்டுப்பாடுகள்

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று (ஏப்ரல் 17) மாலையுடன் முடிவுக்கு வருகிறது. இதைத்தொடர்ந்து வேட்பாளர்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இன்று மாலை முதல் தேர்தல் நடக்கும் நாள் வரையில் அரசியல் கட்சிகளும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள்:

வேட்பாளர்கள் அனைவரும் இன்று மாலை (17ம் தேதி) மாலை 6 மணிக்குள் தங்கள் பிரச்சாரத்தை முடித்துக்கொள்ள வேண்டும். பிரச்சார நேரம் முடிந்த பிறகு ஒலிபெருக்கி பயன்படுத்த அனுமதி கிடையாது.

தேர்தல் பிரச்சாரத்துக்காக வெளியூரிலிருந்து வந்த நபர்கள் மற்றும் தொடர்புடைய நாடாளுமன்ற தொகுதியில் வாக்குரிமை இல்லாதவர்கள் தொடர்ந்து தொகுதியில் இருக்க அனுமதி இல்லை. 5 நபர்களுக்கு மேலாக ஒன்றாக செல்ல அனுமதி இல்லை.

தேர்தல் நாள் அல்லது அதற்கு முந்தைய நாள் அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் செய்தித்தாள் மற்றும் தொலைகாட்சிகளில் விளம்பரம் செய்வதாக இருந்தால், அதற்கு முன்னரே அனுமதி பெற வேண்டும்.

உரிமம் பெறப்பட்ட துப்பாக்கிகளை தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் வரை கொண்டு செல்லவும், பயன்படுத்தவும் அனுமதி இல்லை.

தேர்தல் நாளன்று, வேட்பாளர்கள், முகவர்கள் மற்றும் அவரது பணியாளர்கள் தலா ஒரு வாகனத்தை மட்டுமே பயன்படுத்தலாம்.

அந்த வாகனத்தில் செல்ல ஓட்டுநர் உள்ளிட்ட 5 நபர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்ட வாகனத்தில் வேறு நபர்கள் செல்ல அனுமதி இல்லை.

தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வாகனத்திற்காக பெற்ற அனுமதி கடிதத்தினை வாகனத்தில் தெளிவாக தெரியும்படி ஒட்ட வேண்டும். அனுமதி பெறப்பட்ட வாகனத்தில் வாக்காளர்களை இருப்பிடத்திலிருந்து வாக்குச்சாவடிக்கோ, வாக்குச்சாவடியிலிருந்து இருப்பிடத்திற்கோ வேட்பாளரோ அல்லது முகவரோ அழைத்துச் செல்லக்கூடாது.

வாக்காளர்கள் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவியில் தொங்கும் சீட்டை வாக்குகள் விழக்கூடிய பெட்டியில் விழவைக்க எந்த முயற்சியும் செய்ய வேண்டாம். மேற்பட்ட விதிகளை மீறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டணை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். வாக்குச்சாவடிகளை நிர்வகிக்கும் நபர்கள் அதே வாக்குச்சாவடியின் வாக்காளராக இருக்க வேண்டும். கிரிமினல் முன்னோடி உள்ளவர்கள் தேர்தல் நாளில் வாக்குச்சாவடிக்கு செல்ல அனுமதிக்க கூடாது.

வாக்குச்சாவடியிலிருந்து 100 மீட்டருக்குள் ஒலிப்பெருக்கி பயன்படுத்த கூடாது.

ஒரு வேட்பாளருக்கு ஒரு முகவர் மட்டுமே வாக்குச்சாவடியில் அனுமதிக்கபடுவர். தேர்தல் நாளன்று பிற்பகல் 3 மணிக்கு முகவர்கள் மாற்றம் செய்ய அனுமதியில்லை.

வேட்பாளர்களின் முகவர்கள், வாக்குச்சாவடிக்குள் நுழையும் போதும், வெளியே செல்லும்போதும் சோதனைக்கு உட்படுத்துவதை எதிர்க்க கூடாது. வாக்குச்சாவடிக்குள் தண்ணீர், திண்பண்டங்கள், உணவுப்பொருட்கள் கொண்டுவர கூடாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...