No menu items!

அபாயம் – சென்னை கருவாடு சாப்பிடாதீர்கள்!

அபாயம் – சென்னை கருவாடு சாப்பிடாதீர்கள்!

கருவாடு பிரியர்களுக்கு இந்தச் செய்தி கொஞ்சம் அதிர்ச்சியாகதான் இருக்கும்.

மீன் உணவு சாப்பிடுவதால் உடலுக்கு ஒமேகா த்ரீ, புரோட்டீன் பல நன்மைகள் கிடைக்கும் என்று தெரியும்.

அந்த மீனை காய வைத்து கருவாடாக சாப்பிட்டால் நல்லதா கெட்டதா?

கெட்டது என்று செய்தி வருகிறது.

சென்னையில் விற்பனை செய்யப்படும் 22 வகையான கருவாடுகளை ஆய்வு செய்திருக்கிறார்கள். இந்த ஆய்வை சென்னை புதுக் கல்லூரியின் விலங்கியல் துறை நடத்தியிருக்கிறது. அந்த ஆய்வு முடிவுகள் இப்போது வெளிவந்திருக்கிறது.

சென்னை மக்கள் விரும்பி சாப்பிடும் கருவாட்டில் ஏகப்பட்ட ரசாயணங்கள் கலந்திருக்கின்றன என்று அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

கேட்மியம்(cadmium), லெட்(lead), கோபால்ட்(cobalt) போன்ற தீங்கு விளைவிக்கும் உலோகங்கள் சென்னை கருவாடுகளில் அதிக அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு 17 இடங்களில் நடத்தப்பட்டது. ஆய்வு செய்யப்பட்ட 22 வகை கருவாடுகளில் வஞ்சிரம், மத்தி, சூரை, நெத்திலி போன்ற அதிகம் விற்பனையாகும் கருவாடுகளும் இருக்கின்றன.

இந்த ரசாயணம் கலந்த கருவாடுகளை சாப்பிட்டால் கேன்சர் வரும் அபாயம் உள்ளது என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

சென்னை கருவாடுகளில் ஈயம் 32.85 – 42.09 mg/kg அளவில் இருக்கிறது. இது மிக அபாயகரமானது. உலக சுகாதார அமைப்பு(WHO) வெறும் 2.17 mg/kg அளவு ஈயத்தைதான் அனுமதிக்கிறது.

அதே போல் கேட்மியம் 2.18 – 3.51 mg/kg இருக்கிறது. ஆனால், WHO அனுமதிக்கும் அளவு 0.05 mg/kg.

இதேபோல், கோபால்ட் உலோகமம் 2.95 – 9.55 mg/kg அளவு இருக்கிறது. WHO சொல்லும் அளவு 1.13 mg/kgதான்.

சரி, ஏன் மீனுக்குள் இத்தனை ரசாயணங்கள் இருக்கிறது?

அதற்கு காரணமாய் சில காரணங்களை கூறுகிறார்கள் ஆய்வாளர்கள். வட சென்னை கடலில் பலவிதமான ரசாயணப் பொருட்கள் கடலில் கலக்கப்படுகின்றன. இது கடலின் சூழலையும் மீன்களியும் பாதிக்கிறது. இந்தப் பகுதியில் கேட்மியம், ஈயம் போன்றவை கடலை மாசுபடுத்தி இருக்கின்றன என்று கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. அது மட்டுமில்லாமல் மீன்களை காயவைத்து கருவாடு ஆக்குவதற்கு பயன்படுத்தப்படும் உப்பும் கலப்படமிக்கதாக இருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இந்த ஆய்வைப் பார்த்தால் அதிர்ச்சியாகதான் இருக்கிறது. சென்னை கருவாட்டை கொஞ்சம் அளந்து சாப்பிடுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...