No menu items!

ராதா மகளுக்கு டும் டும் டும்!

ராதா மகளுக்கு டும் டும் டும்!

‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் அறிமுகமான ராதாவுக்கு இன்றும் முன்னாள் வாலிபர்கள் மத்தியில் இருக்கும் மவுசு ஓயவில்லை.

ராதா மீதிருக்கும் அதே ஈர்ப்பு, அவரது மகள் கார்த்திகா விஷயத்தில் இருக்கும் என்ற பெரும் நம்பிக்கையோடு அவரை களத்தில் இறக்கினார் இயக்குநர் மணி ரத்னம்.

தாய் எட்டடிப் பாய்ந்தால் குட்டி பதினாறு அடி’ பாயும் என்று பழமொழி உண்டு. ஆனால் இந்த பழமொழி கார்த்திகா விஷயத்தில் சுத்தமாக எடுப்படவே இல்லை.

ராதா மகள் என்ற பின்னணியோடு இரண்டு மூன்று படவாய்ப்புகள் வந்தாலும், கார்த்திகாவால் இங்கு தாக்குப்பிடிக்க முடியவில்லை. இதனால் தனது அப்பா பார்த்துவரும் ஹோட்டல் பிஸினெஸ்ஸூக்கு தாவிவிட்டார் காத்திகா.

இந்நிலையில் வாய்ப்பு வராவிட்டாலும், வயது ஏறிக்கொண்டேதானே இருக்கும் என்பதால், ஒரு வழியாக திருமணம் செய்து கொடுத்து அவரை வாழ்க்கையில் செட்டிலாக்கி விடலாம் என ராதா முடிவெடுத்து இருக்கிறாராம்.

இதே வேகத்தில் கார்த்திகாவுக்கு மாப்பிள்ளைப் பார்க்கும் படலம் ஜரூராக நடந்தது. சினிமா செட்டாகவில்லை. இனி வாழ்க்கையிலாவது அடுத்த வேலையைப் பார்க்கலாம் என்று கார்த்திகாவும் ஓகே சொல்லிவிட்டாராம்.

வெகுசீக்கிரத்தில் ராதா வீட்டிலிருந்து கார்த்திகா திருமண அழைப்பிதழ் வரலாம்.

நயன்தாரா, ஹன்சிகா மோத்வானி திருமணம் மாதிரி இதையும் ஒடிடி-க்கு தாரை வார்த்துவிடுவார்களா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் அந்த 7 ஆண்டுகள்!

தமிழ் சினிமாவில் இன்றைக்கு நடித்து கொண்டிருக்கும் நடிகைகளில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் கொஞ்சம் வித்தியாசமானவர்.

தமிழில் ‘யு – டர்ன்’, ‘விக்ரம் வேதா’, ‘நேர்க்கொண்ட பார்வை’, ‘இறுகப்பற்று’, தெலுங்கில் ‘ஜெர்ஸி’, மலையாளத்தில் ‘அராத்து’, கன்னடத்தில் ‘ஆபரேஷன் அலமேலம்மா’, ‘ரஷ்டம்’ என தென்னிந்திய மொழிகளில் ஒரு ரவுண்ட் அடித்திருக்கும் அதே ஷ்ரத்தா ஸ்ரீநாத்தான்.

இந்தப் படங்களையெல்லாம் பார்க்கும் போது, ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருக்கும் விதவிதமான கதாபாத்திரங்களைப் பற்றி புரிந்து கொள்ளமுடியும். சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்கள் என்றாலும் இவரை நம்பி நடிக்க கூப்பிடலாம். குழந்தைக்கு அம்மா கதாபாத்திரம் என்றாலும் அந்த ரோலுக்கு முக்கியத்துவம் இருந்தால், நிச்சயம் நடிப்பார்.

இதனால் இவரால் ’ரா காவாலயா… காவாலயா..’ மாதிரியான கவர்ச்சிகரமான சினிமாவில் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

‘நான் பொதுவாகவே ஸ்கிரிப்ட்லதான் கவனம் செலுத்துறேன். நல்ல கதை, சினிமா மேல காதல் இருக்கிற இயக்குநர்கள்னா நிச்சயம் நடிப்பேன். நல்லப் படமா இருந்தாலும் அதுக்கு மார்க்கெட்டிங் தேவைப்படுது. இல்லைன்னா நாம நினைக்கிற மாதிரி மக்கள்கிட்ட போய் சேரமாலே போயிட வாய்ப்பு இருக்கு.

நல்ல கதை வந்தா நடிக்கலாம். ஆனா அது அடுத்தடுத்து வர்றது இல்ல. அதனால ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் பெரிய இடைவெளி வந்துடுது. இதனால எனக்கு வாய்ப்பு வர்றது இல்ல என்கிற மாதிரியான ஒரு எண்ணம் உருவாகிடுது. ஆனா அதைப்பத்தியெல்லாம் நான் கவலைப்படுறது இல்ல.’ என்று வெளிப்படையாகவே கூறுகிறார் ஷ்ரத்தா.

இப்படியெல்லாம் வெளிப்படையாக பேசியும், தென்னிந்திய சினிமாவில் 7 ஆண்டுகள் தாக்குப்பிடித்திருக்கிறார் ஷ்ரத்தா. ஒரே காரணம் நல்ல கதைகளில் மட்டுமே நடிப்பேன் என்று கெத்துதான்.


புலம்ப வைத்த காஜல் அகர்வால்!

பரபரவென நடித்துகொண்டிருந்த காஜல் அகர்வாலுக்கு, வாய்ப்புகள் கொஞ்சம் ஜகா வாங்க, கொஞ்சம் கூட யோசிக்காமல் திருமணம் செய்து கொண்டார்.

திருமணம், குழந்தை என ஏறக்குறைய முழு இல்லத்தரசியாகவே மாறிவிட்ட நேரத்தில்தான், ‘இந்தியன் – 2’ படத்தின் ஷூட்டிங் மீண்டும் அரம்பித்தது. திருமணமாகி, குழந்தைப் பெற்றிருந்தாலும் காஜல் அகர்வால் நடித்த காட்சிகளை வெட்டியெறிய முடியாது என்பதால் காஜலையே மீண்டும் இந்தியன் –2 படத்தில் நடிக்க அழைத்தார்கள்.

உற்சாகமான காஜல் மீண்டும் சினிமா பக்கம் வந்துவிட்டார். ஆனாலும் தனது குழந்தையை அம்போவென்று விட்டுவிடவில்லை. ஆனால் தயாரிப்பாளர்கள் தலையில் கையை வைத்துவிட்டார் என்கிறார்கள்.

ஷூட்டிங் இருந்தால், முன்பெல்லாம் தனது டச்சப் பாய், ஹேர் டிரெஸ்ஸர், மேக்கப் மேன் என உதவியாளர்களை அழைத்து வந்த காஜல், இப்போது தனது அம்மாவையும் கூடவே அழைத்து வருகிறாராம்.

காஜல் கூடவே கிளம்பி வரும் அவரது அம்மா, காஜல் நடிக்க போகும் நேரங்களில் பேரன் நீல் கூடவே இருந்து கவனித்து கொள்கிறாராம்.

நட்சத்திரங்களுக்கு ஆகும் செலவு பட்ஜெட்டில், இப்போது புதிதாக இப்போது மகன் அம்மா என்ற இரு புது செலவையும் அறிமுகப்படுத்தி இருக்கிறார் காஜல் அகர்வால்.

அவர் நடிப்பதற்கு சம்பளம் ஓகே. ஆனால் அவரது குழந்தைக்கான செலவை தயாரிப்பாளர்கள் தலையில் கட்டுவது சரியா என்ற புலம்பல் இப்போது ஆரம்பித்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...