No menu items!

Inside Pant – உதயநிதி ஸ்டாலின் Twitter கிண்டல்!

Inside Pant – உதயநிதி ஸ்டாலின் Twitter கிண்டல்!

ட்விட்டரின் 2K Kids மொழியில் சொல்ல வேண்டுமென்றால் Fun பண்ணிக் கொண்டிருக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

அவரது சனாதன ஒழிப்பு பேச்சும் அதற்கு பாஜகவும் ஆதரவாளர்களும் காட்டும் எதிர்ப்பும் எல்லோருக்கும் தெரிந்ததே.

கொசுவை ஒழிப்பது போல் சனாதானத்தை ஒழிக்க வேண்டும் என்பதுதான் உதயநிதி ஸ்டாலின் கடந்தவார பேச்சு. அதை குறிப்பது கொசுவர்த்தி சுருள் எரியும் படத்தை நேற்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

உடனே வழக்கம் போல் பாஜகவினருக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் கோபம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது. பலவிதமான பதில்களைத் தந்தார்கள்.

அதில் சாவித்ரி முமுக்ஷு என்பவர், ‘உங்கள் பேண்ட்டின் பின்பாகத்துக்குள் என்ன நடக்கிறது என்பதை ஏன் புகைப்படம் எடுத்து போட்டீர்கள்? நீங்க வாயைத் திறக்கிறதுக்கும் அதற்கும் எந்த வித்தியாசமும் தெரியவில்லை’ (Why have you put a photo of what’s happening inside the rear part of your pants? Not that it looks any different from when you open your mouth.)என்று கிண்டலாக உதயநிதியின் கொசுவர்த்தி சுருள் படத்துக்கு பதிலளித்திருந்தார்.

அதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ’என் பேண்டுக்குள் ஏன் எட்டிப் பார்க்கிறீங்க, அது நல்லப் பழக்கம் இல்லை’ (Why are you seeing what’s happening inside my pants? 😳 not a good behaviour)என்று எதிர் கிண்டலாக பதிலளித்திருந்தார்.

இந்த டிவிட்டர் விவாதத்தில் பலர் பங்கேற்று தங்கள் கருத்துக்களை பதிவிட்டிருந்தார்கள்.

உதயநிதியின் பேண்ட் பதிவை எடுத்துப் பதிவிட்ட மூத்த பத்திரிகையாளர் ஆர்கே, ’ஒரு கிண்டலுக்கு தமிழ்நாட்டு அமைச்சரவையில் இருக்கும் அமைச்சரி பதில் இது, இவர் நாளை முதல்வர் ஆவதற்கும் வாய்ப்பிருக்கிறது’ (This response to a troll is by a Minister in the Tamilnadu Cabinet, who is possibly the DMK’s next Chief Minister!)என்று உதயநிதியை விமர்சனம் செய்திருந்தார்.

அது மட்டுமில்லாமல் தனது அடுத்தப் பதிவில், ‘உதயநிதியின் ட்விட்டர் பதிவை அதிமுக மொழிபெயர்ப்பு செய்து திமுகவின் இளைய தலைவர் எவ்வளவு மோசமாக நடந்துக் கொள்கிறார் என்பதை பிரச்சாரம் செய்யப் போகிறது என்று கேள்விப்படுகிறேன். அப்படியா?’ என்று கேட்டு எடப்பாடி பழனிசாமியின் பெயரை இணைத்திருந்தார்.

இதற்கும் உதயநிதி பதிலளித்தார், ‘சார், உண்மையாகவா?’ என்று மிக சுருக்கமாக. இதற்கு ஆர்கே பதிலளிக்கவில்லை.

இதற்கு இடையே உதயநிதியின் ட்விட்டர் பதிவுக்கு ‘நீ விளையாடு நண்பா’ என்று ஃபையர் எமோஜி போட்டிருந்தார் உதயநிதியின் நண்பர் அமைச்சர் அன்பில் மகேஷ்.

அமைச்சர்களுக்கும் கொஞ்சம் பொழுதுபோக்கு வேண்டுமல்லவா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...