இப்போது லேட்டஸ்ட் பரபரப்பு ‘ஆதிபுரூஷ்’ படத்தின் ப்ரமோஷனுக்காக திருப்பதி பாலாஜி கோயிலுக்குச் சென்ற கீர்த்தி சனானை அப்பட இயக்குநர் ஓம் ராத் கன்னத்தில் முத்தமிட்டதுதான்.
’ஆதிபுரூஷ்’ படத்தில் ராமர் கதாப்பாத்திரத்தில் பிரபாஸ், சீதா வேடத்தில் பாலிவுட் நடிகை கீர்த்தி சனான் ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்த பின்பு கீர்த்தியும், ஒம் ராத்தும் திருப்பதி கோயிலுக்குச் சென்றனர். அப்போதுதான் இந்த முத்தம் அரங்கேறியது.’
திருப்பதி கோயிலின் தலைமை பூசாரி இந்த முத்தம் குறித்து தனது கண்டனத்தை தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. ‘கோயிலுக்கு வரும் போது கணவன் மனைவி கூட சேர்ந்து நெருக்கமாக வருவது குறித்து யோசிப்பார்கள். ஆனால் இந்த இயக்குநரும் நடிகையும் இப்படி செய்யலாமா. இதற்கு அவர்கள் ஹோட்டல் ரூமிற்கு போயிருக்கலாமே’ என்று சொல்லியதாக கூறப்படுகிறது.
ஆந்திரப்பிரதே மாநில பாஜக செயலாளர் ரமேஷ் நாயுடு நாகோது கூட, இந்த முத்த சம்பவத்தை கண்டித்து ட்வீட் செய்து பின்னர் அதை அகற்றிவிட்டார். ‘ஒரு புனிதமான இடத்தில் உங்களுடைய நோக்கத்தை அரங்கேற்றுவது அவசியமா? பொதுவெளியில் உங்களுடைய அன்பையும், அரவணைப்பையும் வெங்கடேஸ்வரா சுவாமி கோயில் அரங்கேற்றியது மரியாதைக்குரியதும் அல்ல. ஏற்றுக் கொள்ளக்கூடியதும் அல்ல’ என்று ட்வீட் செய்திருந்தார்.
இப்படி முத்த பஞ்சாயத்து தீவிரமான நிலையில், ராமானந்த் சாகரின் ‘ராமாயண்’ டிவி சீரியலில் சீதாவாக நடித்த தீபிகா சிகிலாவும் தனது வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார்.
‘இப்போதுள்ள நடிகர்கள் நடிகைகள் தாங்கள் நடிக்கும் கதாபாத்திரங்களுக்குள் முழுமையாக தங்களை ஈடுப்படுத்தி கொள்வது இல்லை. அந்த கதாபாத்திரங்களில் இருக்கும் உணர்வுப்பூர்வமான அம்சங்களை புரிந்து கொள்வதும் இல்லை. அவங்களைப் பொறுத்தவரை ராமாயணம் என்பது ஒரு திரைப்படமாக மட்டுமே தெரிகிறது. ஆனால் அதில் இருக்கும் ஆன்மீக உணர்வுடன் அவர்கள் தங்களை தொடர்புப்படுத்தி பார்ப்பதே இல்லை. கீர்த்தி இந்த தலைமுறை நட்சத்திரமாகவே இருக்கிறார். கட்டிப்பிடிப்பதும், முத்தமிடுவதும் அன்பை வெளிபடுத்தும் ஒன்றாகவே பார்க்கிறார் போல. கீர்த்தி தன்னை சீதாவாகவே நினைத்து பார்க்கவில்லை. நான் சீதாவாகவே வாழ்ந்தேன். ஆனால் இன்றைக்குள்ள நடிகைகள் ஒரு கதாபாத்திரமாக நினைக்கிறார்கள். அந்தப்படம் முடிந்தவுடன் அதைப்பற்றி கவலைப்படுவேதே இல்லை.