No menu items!

நீச்சல் உடையில் தம் கட்டிய ரகுல் ப்ரீத்சிங்!

நீச்சல் உடையில் தம் கட்டிய ரகுல் ப்ரீத்சிங்!

சல்லிக்காசு கூட செலவில்லாமல் ஐபிஎல் போட்டிகளைக் கண்டுகளிக்கும் வாய்ப்பை கொடுத்ததன் மூலம் ஒடிடி- சந்தையில் ஜியோ சினிமா பெரும் சலசலப்பை ஏற்படுத்திவிட்டது. இந்த தில்லாலங்கடி இலவச சந்தா திட்டம் மூலம் லட்சக்கணக்கில் சந்தாதாரர்களைப் பெற்றிருக்கிறது ஜியோ சினிமா.

அடுத்து புதுப்புது படங்களை முதன் முதலாக ஜியோ சினிமாவில் ஸ்ட்ரீமிங் செய்யும் வேலைகளிலும் இறங்கியிருக்கிறது. அந்த வகையில் இப்போது ‘ஐ லவ் யூ’ என்ற பெயரில் ஒரு படத்தை எடுத்து வருகிறது.

இதில் கார்த்தியின் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மற்றும் சூர்யாவின் ‘என்.ஜி.கே’ படங்களில் நடித்த ரகுல் ப்ரீத்சிங் நடிக்கிறார். இப்படத்தின் திரைக்கதையின் படி, தண்ணீருக்கடியில் இரண்டு நிமிடம் 30 நொடிகள் மூச்சு விடாமல் இருப்பது போல் நடிக்கும் காட்சி ஒன்றும் இடம்பெறுகிறதாம்.

இந்தக்காட்சி குறித்து படத்தின் இயக்குநர் நிகில் மகாஜன் தயங்கியப்படியே ரகுல் ப்ரீத்சிங்கிடம் சொல்ல, அந்தககாட்சியில் நடிக்க தயக்கமில்லாமல் உடனே ஒப்புக்கொண்டிருக்கிறார் ரகுல் ப்ரீதிசிங்.

இதற்காக ஒரு மாதம், ஒரு ஸ்கூபா டைவிங் பயிற்சியாளரிடம் பயிற்சி பெற்று இருக்கிறார் ரகுல் ப்ரீத்சிங்.

தண்ணீருக்கு அடியில் மூச்சைப் பிடித்து கொண்டு தாக்குப்பிடிக்கும் பயிற்சி எடுத்த பிறகு அந்தக்காட்சியை எடுக்கும் நாளும் வந்துவிட்டது. அப்போதுதான் ஒரு குண்டை தூக்கிப் போட்டிருக்கிறார் இயக்குநர். இந்த காட்சி நள்ளிரவில் நடப்பது போல் இருப்பதால், அதிகாலை 2 மணிக்கு அந்த இருட்டில்தான் காட்சியை எடுக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

வேறுவழியில்லாமல் ரகுலும் அதிகாலை இரண்டு மணிக்கே நீச்சல் உடையில் நீச்சல் குளத்திற்கு குதித்து இருக்கிறார். குளிரில் வெடவெடத்துப் போன ரகுலுக்கு அந்த காட்சியின் ஒவ்வொரு டேக்கும் முடியும் போது, வெண்ணீரை அவர் மேல் விட்டு குளிரை தாக்குப்பிடிக்க உதவியிருக்கிறது படக்குழு. இதனால் அதிகாலை குளிரை ஒருவழியாக சமாளித்தப்படியே அந்த காட்சியை முடித்து கொடுத்துள்ளார்.

’தண்ணீரூக்குள் இரண்டு நிமிஷம் 30 விநாடிகள் தாக்குப்பிடித்ததை விட, நீச்சல் குளத்தில் இருந்த க்ளோரின்னைதான் என்னால் சமாளிக்க முடியவில்லை. கண்கள் எரிய ஆரம்பித்துவிட்டன’ என ரகுல் ப்ரீத்சிங்கின் கண்களை கசக்குகிறார்.

ரகுல் ப்ரீதிசிங் சில நாட்களுக்கு முன்புதான் க்ரையோதெரபி எனப்படும் மைனஸ் 13 டிகிரி குளிரில் இருக்கும் பனிக்கட்டி தண்ணீரில் குளித்து ஆச்சர்யமூட்டினார்.


விஜய் தேவரகொண்டா டீம் ரொம்ப மோசம்!

தமிழ் சினிமாவில் கஸ்தூரி எப்படியோ, அதே மாதிரி தெலுங்கு சினிமாவில் அனசுயா பரத்வாஜ்.
டிவியில் காம்பியரராக இருந்தவர் இப்போது சினிமாவில் கவர்ச்சியாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார். ‘புஷ்பா’ படத்திலும் நடித்திருக்கிறார்.

அனசுயா அவ்வப்போது சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசவும் தவறுவது இல்லை. இப்படிபட்டவரை இப்போது இணையத்தில் இழுத்துவிட்டு வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

‘நானும் விஜயும் முன்பு நல்ல நண்பர்கள். அப்போ அவருடைய் ‘அர்ஜூன் ரெட்டி’ படம் வெளியானது. அந்தப்படத்தில் சில காட்சிகள் ஏடாக்கூடமாக இருந்ததால், அதை ம்யூட் செய்திருந்தார்கள். ஆனால் விஜய் தனது ரசிகர்கள் திரையரங்குகளில் அந்த காட்சியில் வரும் வசனத்தை சத்தம்போட்டு கூற சொன்னார் என்ற அனசுயா சொன்னது பிரச்சினைகளுக்கு பிள்ளையார் சுழியானது.

இப்போது விஜயின் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் என்னை தகாத வார்த்தைகளால் கிண்டலடித்து வருகின்றனர். இது குறித்து விஜயிடம் கூறினேன். இந்த மாதிரி நடந்துகொள்வதை நீங்கள் ஊக்குவிக்காதீர்கள் என்று கூட சொன்னேன்.’ என்ற அனசுயா இப்போது தீவிரமான மன அழுத்தத்தில் இருக்கிறாராம்.

குழந்தைகளின் தாயாக இருக்கும் போது இப்படி தகாத முறையில் கிண்டலடிப்பது குழந்தைகளின் மனதையும் பாதிப்பதாக அனசுயா வருத்தப்பட்டு இருக்கிறார்.

விஜய் தேவரகொண்டாவின் பப்ளிசிட்டி டீமில் இருக்கும் ஒருவர்தான் மற்றவர்களுக்கு பணம் கொடுத்து, அனசுயாவை இணையத்தில் கிண்டலடிக்க தூண்டுகிறார் என்பதே அனசுயாவின் குற்றச்சாட்டு.

இதையெல்லாம் விஜய் தேவரகொண்டா கண்டுகொண்டதாக தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...