தனது 16 வயதிலேயே நடிக்க வந்த தமன்னாவுக்கு இப்போது 34 வயதாகிறது. 80 படங்களுக்கும் மேல் கதாநாயகியாக நடித்துவிட்டார். அதனாலோ என்னவோ இன்றைய நடிகர்கள் தமன்னாவை ஜோடியாக்க நடிக்க தயங்குகிறார்கள்.
மளமளவென வந்த ஹீரோயின் வாய்ப்புகள், படபடவென குறையவே வெப் சிரீஸ் பக்கம் தாவினார் தமன்னா.
தமன்னாவுக்கு இப்போது வெப் சிரீஸ் வட்டாரத்தில் நல்ல வரவேற்பு. இதனால் தொடர்ந்து வெப் சிரீஸ்களில் நடிப்பதற்கு அதிக ஆரவம் காட்டிவருகிறார்.
வெப் சிரீஸ்களின் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட், அவற்றுக்கு சென்சார் இல்லையென்பதே. இதனால் கவர்ச்சியையும், ஆணும் பெண்ணும் நெருக்கமாக இருப்பதையும் காட்டுவதில் இன்று வெப் சிரீஸ் இயக்குநர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.
அதேபோல் இந்த காட்சிகளில் யார் தூள்கிளப்புகிறார்கள் என்பதில் நட்சத்திரங்களுக்கும் இடையே போட்டி இருக்கிறது.
வெப் சிரீஸ் பக்கம் தாவிய தமன்னாவுக்கும் இந்த போட்டியில் எப்படியாவது தாக்குப்பிடிக்க வேண்டியது கட்டாயம் உருவாகி இருகிறது. அதை சமீபத்தில் வெளியான இரண்டு வெப் சிரீஸ்களின் ட்ரெய்லர்கள் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கின்றன. ’
ஜி கர்தா’ [Jee Karda] என்னும் வெப் சிரீஸ் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாக இருக்கிறது. இந்த வெப் சிரீஸில் ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் இடையில் பல நெருக்கமான காட்சிகள் இருப்பதை அதன் ட்ரெய்லர் காட்டுகிறது.
அதேபோல், மற்றுமொரு வெப் சிரீஸான ‘லஸ்ட் ஸ்டோரிஸ் -2’ நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது. இதன் முதல் சீசனில் கியாரா அத்வானி சம்பந்தப்பட்ட ’அந்த’ காட்சி இணையத்தில் இன்றும் வைரல் க்ளிப்பாக சுற்றி வருகிறது. இதன் தொடர்ச்சியாக காமத்தை அடிப்படையாக கொண்ட கதை என்பதால் இதிலும் நெருக்கமான காட்சிகள் இருக்கின்றன. இதிலும் தமன்னா நெருக்கமாக நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இதுவரையில் வாயைப் பிளக்க வைக்காத கவர்ச்சியுடன் நடித்த தமன்னா, இப்போது கவர்ச்சியில் எல்லை மீறும் வகையில் வெப் சிரீஸ்களில் நடிக்க ஆரம்பித்திருப்பது எப்படியாவது தனது மார்க்கெட்டை தக்க வைக்கவேண்டுமென முயற்சிப்பதைதான் காட்டுகிறது.
வடஇந்திய அரசியல்வாதிகளை சீண்டும் கமல்!
பொதுவாகவே ஷங்கர் தனது படங்களில் லஞ்சத்திற்கு எதிரான காட்சிகளையும், வசனங்களையும் வைப்பது வழக்கம்.
ஷங்கர் – கமல் இருவரும் இணைந்த ‘இந்தியன்’ படம் வெளியான போதே, அப்படத்தில் லஞ்ச லாவண்யத்திற்கு எதிராக இருந்த காட்சிகள், அதிகம் பேசப்பட்டன.
இப்போது ‘இந்தியன் -2’ படத்தில் எதைப்பற்றி ஷங்கர் சொல்ல இருக்கிறார் என்றும், தற்போது அரசியலில் இருக்கும் கமல் ஷங்கரிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்றும் இந்தியன் படக்குழுவினரிடையே பேச்சு எழுந்திருக்கிறது.
சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்ற சேனாபதியாக வரும் கமல், இந்த இரண்டாம் பாகத்தில், சுயநலமிக்க அரசியல்வாதிகளை வேட்டையாடுவதாக திரைக்கதை வடிவமைக்கப்பட்டிருக்கிறதாம்.
அதிலும் குறிப்பாக அரசியல் தளத்தில் இன்று வட இந்திய அரசியல்வாதிகள், தென்னிந்திய அரசியல்வாதிகளை தங்களுடைய பகடை காய்களாக பயன்படுத்தி ஆதாயம் அடைவதையும், தங்களது சுய லாபத்திற்காக வடக்கு தெற்கு என பிரித்து அரசியல் பலன்களை அனுபவிப்பதையும் காட்டுவதோடு, அந்த அரசியல்வாதிகளை களையெடுப்பதாகவும் காட்சிகள் இடம்பெறுகிறதாம்.
இதில் கமல் வட இந்திய அரசியல்வாதிகளை சீண்டும் வகையில் வசனங்களும் இடம்பெறலாம் என்றும் கூறுகிறார்கள். அதாவது நிதி ஒதுக்கீடு மட்டுமில்லாமல் திட்டங்களை செயல்படுத்துவதிலும் கூட வட இந்திய மாநிலங்களுக்கும் அதிகமாகவும், தென்னிந்திய மாநிலங்களை கண்டுக்கொள்ளாமல் விட்டுவிடுவதையும் வைத்து அனல் பறக்கும் வசனங்கள் இருப்பதாக இந்தியன் 2 குழு பக்கம் கிசுகிசுக்கிறார்கள்.
ரஜினிக்கு நோ. பாலகிருஷ்ணாவுக்கு ஓகே!
ரஜினி ரொம்பவே மாறிவிட்டார்.
முன்பு போல் அதிரடி வேண்டும். கதாபாத்திரத்தில் இளமை தளும்ப வேண்டும். இப்படியெல்லாம் கதை வேண்டுமென கேட்பதில்லையாம்.
உணர்வுப்பூர்வமான, மனதை கனக்க செய்யும் கதை, காட்சிகள் இருந்தால் சொல்லுங்களேன் என்று கேட்கிறாராம்.
இதனால்தான்’ ’டான்’ படஇயக்குநர் சிபி சக்ரவர்த்தி சொன்ன கதையில் ரஜினி நடிக்க முடியாமல் போனது. சிபி சொன்ன கதையில் ஆக்ஷன் கொஞ்சம் தூக்கலாக இருந்தது.
இப்போது சிபி சக்ரவர்த்தியை, தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி கூப்பிட்டு அனுப்பியிருக்கிறார். ஹைதராபாத்திற்கு சென்ற சிபியை, ரஜினிக்கு சொன்ன கதையை எனக்கு சொல்லுங்கள் என்று கேட்டிருக்கிறார். சிபி கதையைச் சொல்ல சொல்ல சிரஞ்சீவி ரொம்பவே உற்சாகமாகி இருக்கிறார். அநேகமாக ரஜினிக்கு சொன்ன கதையில் சிரஞ்சீவி நடிக்க வாய்ப்புகள் மிக அதிகம் என்கிறார்கள்.
இந்த சம்பவத்திற்கு பிறகு, தெலுங்கு பட இயக்குநர் பாபி, ரஜினிக்கு ஒரு கதை சொன்னார். சிரஞ்சீவி நடித்த ‘வால்டர் வீரய்யா’ படத்தை இயக்கிய அதே இயக்குநர்தான்.
ரஜினி தெலுங்கு இயக்குநர் படத்தில் நடிக்கப்போகிறார் என்று பேச்சு அடிப்பட்டது. ஆனால் அப்படியொரு பேச்சு கிளம்பிய வேகத்திலேயே அடங்கிப் போய்விட்டது.
இப்போது விஷயம் என்னவென்றால், ரஜினி நோ சொன்ன அதே கதையை, பாலகிருஷ்ணாவிடம் பாபி சொல்லியிருக்கிறாராம். ஒரே சிட்டிங்கில் கதையைக் கேட்ட, பாலகிருஷ்ணா உடனே ஓகே சொன்னதாகவும் கூறுகிறார்கள்.