No menu items!

இன்ஸ்டாவில் விஜய் – பின் தொடர்ந்த கீர்த்தி சுரேஷ்!

இன்ஸ்டாவில் விஜய் – பின் தொடர்ந்த கீர்த்தி சுரேஷ்!

ஒரே ஒரு வரிதான்.

ஹலோ, நண்பா நண்பிஸ்…

இதுவரை 41 லட்சம் Follwers வந்துவிட்டார்கள்.

43 லட்சம் 31 ஆயிரம் லைக்குள் குவிந்திருக்கின்றன.

4 லட்சத்து 88 ஆயிரம் கமெண்டுகள் வந்துவிட்டன.

இன்ஸ்டாகிராமுக்கு விஜய் வந்ததை அவரது ரசிகள் வெறித்தனமாய் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

விஜய் இண்ஸ்டாவுக்குள் வந்த முதல் 100 நிமிடங்களில் 10 லட்சம் ஃபாலோவர்ஸ் வந்துவிட்டார்கள். இது உலக அளவில் பெரிய சாதனை.

இதற்கு முன் இத்தனை வேகமாய் ஃபாலோவர்ஸ்களை அடைந்தவர்கள் மிகக் குறைவு.

BTS எனும் தென் கொரியப் பாடகர் குழுவைச் சேர்ந்த டேஹ்யங் என்ற இளம் பாடகர் இன்ஸ்டாகிராமில் இணைந்த முதல் 43 நிமிடங்களில் 10 லட்சம் ஃபாலோவர்களை அடைந்தார். அதுதான் இன்று வரை உலக சாதனையாக இருக்கிறது.

ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி இன்ஸ்டாகிராமில் சேர்ந்த 59வது நிமிடத்தில் அவருக்கு 10 லட்சம் ஃபாலோவர்கள் வந்தார்கள்.

மூன்றாவது இடத்தில் விஜய் இருக்கிறார் என்று புள்ளிவிவரங்கள் சொல்லுகின்றன. தளபதி விஜய் இன்ஸ்டாவில் இணைந்த 99 வது நிமிடத்தில் 1 மில்லியன் அதாவது 10 லட்சம் ஃபாலோவர்களை தொட்டுவிட்டார்.

இந்திய அளவில் இத்தனை வேகத்தில் 10 லட்சம் ஃபாலோவர்களை பெற்ற ஒரே இந்தியர் என்ற பெருமை விஜய்க்கு கிடைத்திருக்கிறது.

இது மட்டுமல்ல இன்ஸ்டாவில் விஜய் வெளியிட்ட முதல் போட்டோவுக்கு 104 நிமிடங்களில் 10 லட்சம் லைக்குகள் கிடைத்திருக்கின்றன.

இதற்கு முன் அல்லு அர்ஜூன் வெளியிட்ட ஒரு படத்துக்கு 78 நிமிடங்களில் 10 லட்சம் லைக்குகள் கிடைத்தது சாதனையாக இருக்கிறது.

ட்விட்டரில் விஜய்க்கு 44 லட்சம் ஃபாலோவர்கள் இருக்கிறார்கள். ஆனால் விஜய் ட்விட்டரில் இணைந்தது 2013ஆம் ஆண்டு. பத்து ஆண்டுகளில் இத்தனை ஃபாலோவர்கள் வந்திருக்கிறார்கள்.

ஆனால் இன்ஸ்டாவில் இணைந்து 24 மணி நேரத்தில் விஜய்யை பின் தொடருபவர்கள் எண்ணிக்கை 41 லட்சமாய் இருக்கிறது. இது விஜய்யின் ரசிகர் படை பலத்தைக் காட்டுகிறது.

விஜய் இன்ஸ்டாவுக்கு வந்ததும் கீர்த்தி சுரேஷும் ராஷ்மிகா மந்தானாவும் உடனே பின் தொடர ஆரம்பித்து விட்டார்கள்.

ஏற்கனவே கீர்த்தி சுரேஷையும் விஜய்யையும் வைத்து கிசுகிசுக்கள் இருக்கும் நிலையில் விஜய்யை உடனே கீர்த்தி ஃபாலோ செய்யத் துவங்கியிருப்பது கிசுகிசுக்களை பலமடைய செய்திருக்கிறது.

விஜய் இன்ஸ்டாகிராமுக்கு வந்தததில் லியோ படக் குழுவினருக்கு பெரிய மகிழ்ச்சி. படத்தின் விளம்பரங்களுக்கு விஜய்யின் இன்ஸ்டா அக்கவுண்ட் உதவியாக இருக்கும் என்று உற்சாகமாய் இருக்கிறார்கள்.

Insta கிராமத்துல வாடி வாழலாம்

நாம வாழும் நிமிஷத்தெல்லாம் சுட்டு தள்ளலாம்

நானும் நீயும் சேரும் பொது தாறுமாறு தான்

அந்த FaceBook-இல் பிச்சிக்கிடும் Like-உ Share-உ தான்

Let’s take a Selfie புள்ள Give me a உம்மா உம்மா
என்று கத்தி படத்தில் விஜய் பாடுவார்.

இப்போது இன்ஸ்டா கிராமத்தில விஜய்யும் அவரது ரசிகர்களும் சேரும்போது லைக்கும் ஷேரும் அள்ளிக் கொண்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...