No menu items!

இந்தியாவில் 10 ஆயிரத்தை கடந்த கொரோனா

இந்தியாவில் 10 ஆயிரத்தை கடந்த கொரோனா

இந்தியாவில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை  கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்pஇல், “இந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழை) ஒரே நாளில் 1,805 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை 10,300-ஆக உயர்ந்துள்ளது.

கரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 64 ஆயிரத்து 815 ஆக உள்ளது. கரோனா தொற்றால் சத்தீஸ்கர், இமாச்சலப்பிரதேசம், குஜராத், உத்தரப் பிரதேசம் மாநிலங்களில் தலா ஒருவர், கேரளா மாநலத்தில் இருவர் என மொத்தம் 6 பேர் இறந்துள்ளனர். இதன்படி, கரோனா தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 837 ஆக உள்ளது.” என்று கூறப்பட்டுள்ளது.


சட்டசபைக்கு கருப்பு உடையில் வந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள்

ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை கண்டித்து சட்டசபைக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கருப்பு உடை அணிந்து வந்தனர்.

பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் 2 ஆண்டு தண்டனை பெற்ற ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தில் இன்று கருப்பு உடையில்   காங்கிரஸ் எம்பிக்கள் பங்கேற்றனர்.

இந்த நிலையில், ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை கண்டித்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கருப்பு உடை அணிந்து இன்று சட்டசபைக்கு  வந்தனர்.  அப்போது ராகுலுக்கு ஆதரவாக இருப்போம் என்ற வாசகத்துடன் கூடிய பாதகைகளை அவர்கள் ஏந்திவந்தனர்.


 நடிகர் அஜித்துக்கு சூர்யா, கார்த்தி ஆறுதல்

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் கடந்த மார்ச் 24-ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார்.

 இந்நிலையில் அஜித் தந்தையின் மறைவுக்கு பின்னர் இன்று நடிகர் சூர்யா, தனது தம்பி கார்த்தியுடன் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித்தின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரை சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளனர். இந்த சந்திப்பின் போது அஜித்தின் குடும்பத்தினர் உடன் இருந்தனர்.


டி20 கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்கா புதிய சாதனை

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் 259 ரன்கள் என்ற இலக்கை விரட்டிப் பிடித்து தென் ஆப்பிரிக்க அணி புதிய சாதனை படைத்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா – வெஸ்ட்  அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் போட்டி நேற்று செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 258 ரன்களைக் குவித்தது.

வெற்றிபெற 259 ரன்களை எடுக்கவேண்டும் என்ற நிலையில் ஆடவந்த தெனாப்பிரிக்க அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 259 ரன்களைக் குவித்து வெற்றிபெற்றது. அந்த அணியில்  குவிண்டன் டி காக் 44 பந்துகளில் 9 பவுண்டரிகள் 8 சிக்சர்களுடன் 100 ரன்களை விளாசினார். ரீசா ஹென்றிக்ஸ், 28 பந்துகளில் 11 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 68 ரன்கள் விளாசினார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...