No menu items!

பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர்கள் – முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு

பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர்கள் – முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி ஏற்கனவே நான் பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தேன். நம்முடைய தொடர் முயற்சிகளின் விளைவாக, பாராளுமன்ற மக்களவையில் இதற்கான சட்டவரைவு நிறைவேற்றப்பட்டிருக்கும் முக்கியமான நடவடிக்கையை வரவேற்கிறேன். நரிக்குறவர்கள் மற்றும் குருவிக்காரர் சமூகங்களின் கண்ணியமான வாழ்க்கையை உறுதிசெய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்வோம்” என்று கூறியுள்ளார்.

ஆவின் நெய் விலை உயர்வு: 9 மாதங்களில் 3வது முறையாக விலையேற்றம்

ஆவின் நெய் விற்பனை விலையை லிட்டருக்கு 50 ரூபாய் உயர்த்துவதாக ஆவின் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி 1 லிட்டர் ப்ரீமியம் நெய் ரூ.630 லிருந்து ரூ.680 ஆகவும், அரை லிட்டர் நெய் ரூ.340 லிருந்து ரூ.365 ஆகவும் ஆவின் நிர்வாகம் உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு இன்று (டிச.16) முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் ஒரு லிட்டர் நெய் ரூ. 515 லிருந்து ரூ.535 ஆகவும், ஜூலை மாதம் ரூ.535 லிருந்து ரூ.580 ஆகவும் உயர்த்தப்பட்டது. இதன் முன்பாக கடந்த நவம்பர் மாதம் ஆவின் ஆரஞ்சு பால், ஜூலை மாதம் தயிர் உள்ளிட்ட பால் பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மனைவியுடன் உறவில் இருந்த நண்பனை படுக்கையிலே வெட்டி கொன்ற நண்பன்

புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியம் குருசம்பேட்டா பகுதியை  சேர்ந்தவர்கள் கொல்லாட்டி ராம்பாபு (வயது 35), சங்காடி புஜ்ஜி (35). நண்பர்களான  இருவரும் ஒன்றாக மீன்களை மொத்தமாக வாங்கி சில்லரை வியாபாரிகளுக்கு விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இதற்காக புஜ்ஜி அடிக்கடி  ராம்பாபு வீட்டிற்கு வந்து செல்லும் போது ராம்பாபு மனைவி அர்தானியுடன்  நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் ராம்பாபுவிற்கு தெரியவந்ததை அடுத்து கடந்த 11ஆம் தேதி   மனைவியுடன்  புஜ்ஜி தகாத உறவில் இருந்த போது அங்கு வந்த ராம்பாபு  கத்தியால் புஜ்ஜியின் கழுத்து மற்றும் உடல் பகுதியில் சரமாரியாக குத்தியதில் அவர் சம்பவ இடத்திலயே  ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஏனாம் போலீசார் புஜ்ஜியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஏனாம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்த  ராம்பாபுவை  ஹைதராபாத் புறவழிச்சாலையில்  போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இறந்ததாக கருதி மகன் பால் ஊற்றியபோது திடீரென்று எழுந்து உட்கார்ந்த விவசாயி

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஆலம்பட்டி முரண்டாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (வயது 60). விவசாயியான இவர், இதயம் மற்றும் நுரையீரல் பாதிக்கப்பட்டு கடந்த 19 நாட்களாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று காலை சண்முகம் திடீரென ஆபத்தான நிலைக்கு சென்றுவிட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். தொடர்ந்து அவர் மயக்க நிலையிலேயே இருந்தார். இதையடுத்து அவரை வீட்டுக்கு அழைத்து செல்ல முடிவு செய்த உறவினர்கள் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் முரண்டாம்பட்டிக்கு கொண்டு வந்தனர்.

முரண்டாம்பட்டி வந்த பின்னரும் அவர் மயக்க நிலையிலேயே இருந்ததால் இறந்துவிட்டதாக கருதி அவரது வீட்டின் திண்ணையில் சண்முகத்தை வைத்தனர். இதற்கிடையே சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருந்த அவரது மகன் சுப்பிரமணியன் மாலையை கழற்றினார். பின்னர் தந்தைக்கு பால் ஊற்றினார். ஆனால், சிறிது நேரத்தில் சண்முகம் உடலில் இருந்து அசைவுகள் தென்பட்டன. இதனைக்கண்ட உறவினர் ஆச்சரியத்துடனும் பதட்டத்துடனும் அவரை பார்த்தனர். சிலர் அவரின் அருகே அமர்ந்து சத்தம் போட்டு கூப்பிட்டனர். கொஞ்சம் கொஞ்சமாக கண் விழித்த சண்முகம் பேசத் தொடங்கினார். உடல் நலமும் சீராகி இருந்தது. இறந்ததாக நினைத்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட விவசாயி சண்முகம் உயிர்பிழைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது. வெளியூர்களில் இருந்து சண்முகம் இறந்ததாக நினைத்து துக்கம் விசாரிக்க வந்தவர்கள், உயிருடன் இருந்தவரிடம் நலம் விசாரித்துவிட்டு சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...