No menu items!

World Cup Football – இங்கிலாந்துக்கு செல்லும் கத்தார் பூனை

World Cup Football – இங்கிலாந்துக்கு செல்லும் கத்தார் பூனை

இங்கிலாந்து அணி இந்த உலகக் கோப்பையை வெல்லாவிட்டாலும், அந்த அணியின் வீரர்களான கைல் வாக்கரும், ஜான் ஸ்டோன்ஸும் வெறுங்கையோடு திரும்பவில்லை. கத்தார் நாட்டில் இருந்து ஒரு பூனையுடன் திரும்புகிறார்கள்.

கத்தாரில் இங்கிலாந்து வீரர்களின் பயிற்சி முகாம் இருந்த இடத்தை ஒரு தெருப் பூனை வளைய வந்திருக்கிறது. பயிற்சி இல்லாத நேரத்தில் அந்த பூனையுடன் விளையாடி இருக்கிறார்கள் கைல் வாக்கரும், ஜான் ஸ்டோன்ஸும். உலகக் கோப்பை முடிந்து கத்தாரில் இருந்து திரும்பவேண்டிய நேரத்தில், அந்த பூனையைப் பிரிய அவர்களுக்கு மனமில்லை. தங்கள் அணி நிர்வாகத்தின் மூலம் அந்த பூனையை இங்கிலாந்துக்கு எடுத்துச் செல்ல அனுமதி பெற்றனர். இதைத்தொடர்ந்து இங்கிலாந்துக்கு திரும்பும் வீரர்களுடன் அந்த பூனையும் செல்கிறது.

இங்கிலாந்து நாட்டில் தற்போதைய விதிப்படி வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் மிருகங்களை சுமார் 4 மாதங்கள் தனிமைப்படுத்தி வைக்கவேண்டும். அதன் பிறகே ஊருக்குள் அனுமதிப்பார்கள். இந்த விதியால் 4 மாதங்கள் அப்பூனை தனிமைப்படுத்தி வைக்கப்பட உள்ளது. இது ஒருபுறம் இருக்க பூனையை யார் வீட்டுக்கு எடுத்துச் செல்வது என்பதில் கைல் வாக்கருக்கும், ஜான் ஸ்டோஸுக்கும் இடையே போட்டி நடக்கிறதாம்.

விடைபெறுகிறார் மோட்ரிக்

உலகக் கோப்பையின் அரை இறுதி ஆட்டத்தில் குரோஷியா அணி தோற்றது அந்த அணியின் நட்சத்திர வீரரான மோட்ரிக்கை கடுமையாக பாதித்துள்ளது. இந்த தோல்வியால் மனமுடைந்து போயிருக்கும் மோட்ரிக், சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வுபெற திட்டமிட்டுள்ளாராம். 37 வயதான மோட்ரிக், குரோஷிய அணிக்காக இதுவரை 161 போட்டிகளில் ஆடி இருக்கிறார்.

சனிக்கிழமை மொராக்கோ அணிக்கு எதிராக நடக்கவுள்ள 3-ம் இடத்துக்கான போட்டியுடன் ஓய்வுபெற விரும்புவதாக பயிற்சியாளர் டாலிக்கிடம் கூறியிருக்கிறார் மோட்ரிக். ஆனால் இதை ஏற்க மறுத்துள்ள டாலிக், 2024-ம் ஆண்டு நடக்கவுள்ள ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டிக்கு பிறகு ஓய்வு பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். குரோஷியா இதுவரை கண்டதிலேயே மிகச்சிறந்த கால்பந்து வீரரான மோட்ரிக் ஐரோப்பிய கோப்பையை வென்றபிறகு கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வுபெற வேண்டும் என்பது அவரது விருப்பமாக உள்ளது.

பயிற்சியாளரின் இந்த கோரிக்கையை மோட்ரிக் ஏற்பாரா அல்லது கால்பந்துக்கு விடை கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சாண்டோஸை நீக்கிய போர்ச்சுக்கல்

இந்த உலகக் கோப்பையில் சர்ச்சையை ஏற்படுத்திய விஷயங்களில் ஒன்று கிறிஸ்டியானோ ரொனால்டோவை ஆடவிடாமல் பெஞ்சில் உட்கார வைத்தது. சுவிட்சர்லாந்து மற்றும் மொராக்கோ அணிகளுக்கு எதிரான போட்டிகளில் பெரும் பகுதியில் ரொனால்டோவை பெஞ்சில் உட்காரவைத்தார் அணியின் பயிற்சியாளர் பெர்னாண்டோ சாண்டோஸ். அவருக்கு பதிலாக இளம் வீரர்களை ஆடவைத்தார்.

சுவிட்சர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ரொனால்டோவுக்கு பதிலாக களம் இறக்கப்பட்ட வீரர் 2 கோல்களை அடித்ததால் அதற்காக சாண்டோசை யாரும் விமர்சிக்கவில்லை. ஆனால் மொராக்கோவுக்கு எதிரான கால் இறுதிப் போட்டியில் முதல் பாதியில் ரொனால்டோவை ஆடவைக்காத நிலையில் போர்ச்சுக்கல் தோற்றது. இது அந்நாட்டில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

ரொனால்டோவை ஆடவைக்காததால்தான் போர்ச்சுக்கல் தோற்றது என்ற எண்ணம் ரசிகர்கள் மத்தியில் எழந்துள்ளதால் பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் சாண்டோஸ். இவர் கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து போர்ச்சுக்கல் அணியின் பயிற்சியாளராக இருந்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...