No menu items!

பொன்னியின் செல்வன் – புறக்கணிக்கும் தெலுங்கு சினிமா?

பொன்னியின் செல்வன் – புறக்கணிக்கும் தெலுங்கு சினிமா?

தேர்தலில் ஓட்டு போட்டுவிட்டு, மை கறைப் படிந்த விரலுடன் சுடச்சுட ஒரு செல்ஃபி எடுத்து அதை சோஷியல் மீடியாவில் போட்டு விட்டு, ’என் கடமையை செய்துவிட்டேன் நீங்கள் எப்படி..’ என்று கேட்பது ட்ரெண்டிங்காக இருந்தது.

இப்போது இந்த சோஷியல் மீடியா சம்பிரதாயத்தில் தேர்தலுக்கு அடுத்து சினிமாவும் சேர்ந்திருக்கிறது.

ஏதாவது ஒரு கமர்ஷியல் ஹீரோ நடித்தப் படத்தையோ அல்லது பெரிய இயக்குநரின் பிரம்மாண்ட படைப்பையோ பார்த்துவிட்டு, ’நான் FDFS பார்த்துட்டேன். அப்ப நீங்க..’ என்று ஸ்டேட்டஸ் அப்டேட் செய்வதும் கட்டாய சம்பிரதாயமாகி விட்டது.

அந்தவகையில் இப்பொழுது ‘பொன்னியின் செல்வன்’ சோஷியல் மீடியாவில் ட்வீட்களாகவும், ஸ்டேட்டஸ்களாகவும், லைக்குகளாகவும், டிஸ்லைக்குகளாகவும், ஃபார்வேட்களாகவும் தகதகத்துக் கொண்டிருக்கிறது.

இங்கே ஆரம்பித்தது பிரச்சினை.

’பொன்னியின் செல்வன்’ வெளியானதுமே ’பாகுபலி’யும் சோஷியல் மீடியா ட்ரெண்ட்டிங்கில் இணைந்தது.

இதற்கு காரணம் பொன்னியின் செல்வன் சூப்பரா இல்லை பாகுபாலி பெட்டரா என்று ஒப்பிட்டு கிளம்பிய ட்வீட்கள். இப்போது இந்த பஞ்சாயத்து சோஷியல் மீடியாவில் பற்றிக்கொண்டு எரிகிறது.

ஒருபக்கம் ’பிபிசி தமிழ் நியூஸ்’ தனது ட்விட்டர் அக்கெளண்டில் ‘பாகுபலி Vs பொன்னியின் செல்வன். 10-க்கு நீங்கள் வழங்கும் மதிப்பெண் என்ன?’ என்று கேட்டு வைக்க அங்கே தமிழ் நெட்டிசன்கள் கமெண்ட் கலாட்டாக்களில் இறங்கியிருக்கிறார்கள்.

மற்றொரு பக்கம் தெலுங்கு ஊடகங்கள் சொல்லி வைத்தது போல ‘பொன்னியின் செல்வன்’ விமர்சனத்தில் 2 மதிப்பெண்கள் 2.25. மதிப்பெண்கள் 2.5 மதிப்பெண்கள் கொடுத்திருக்கின்றன.

கதை சொன்னவிதம் நன்றாக இல்லை. ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் சரியில்லை. விறுவிறுப்பாக இல்லை. இப்படி மைனஸ்களை பட்டியலிட்டு இருக்கின்றன தெலுங்கு ஊடகங்கள்.

இதனால் கொந்தளித்த பிஎஸ் ரசிகர்கள், படம் வெளியானதுமே, ‘’டோலிவுட் ரசிகர்கள் படம் பார்க்காமலே ஏன் இப்படி தேவையில்லாத, வெறுப்பான கமெண்ட்களை சொல்கிறீர்கள். பாகுபலி இங்கே தமிழ்நாட்டில் வெளியானதும் அதை நாங்கள் பாராட்டினோம். தூக்கிவைத்து கொண்டாடினோம்.’’ என்ற ரீதியில் கமெண்ட்களை போட, பதிலுக்கு தெலுங்கு சினிமா ரசிகர்களும் தங்களது கமெண்ட்களை தொடர்ந்து பகிர ஆரம்பித்தனர்.

’பாகுபலி’ படமே பொன்னியின் செல்வன் கதையின் காப்பிதான். பாகுபலியில் வரும் ஃபேண்டஸி கப்பல், வெள்ளத்தில் பாகுபலியைத் தூக்கியபடி நிற்கும் ராஜமாதா, பாகுபலி யானை அடக்குவது எல்லாமே பொன்னியின் செல்வன் கதையில் இடம்பெற்ற சம்பவங்களின் பாதிப்புதான் என்றும் ஒரு மீம்களை தட்டிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு பதிலடியாக ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் தமிழில் படுதோல்வி, ’யுகானிகி ஒக்கடு’ தெலுங்கில் ப்ளாக்பஸ்டர். 24 தமிழ்நாட்டில் ஆவரேஜ்ஜிக்கும் கீழ். ஆனால் இங்கே ப்ளாக்பஸ்டர். சூர்யா, விஜய், கார்த்திக்கு இங்கே பெரிய ஒபனிங் இருக்கு. இதேமாதிரி எத்தனை தெலுங்கு ஹீரோக்களுக்கு தமிழ் சினிமாவுல ஒபனிங் இருக்கு’ என்று தெலுங்கு ரசிகர்கள் கமெண்ட்களை போட்டப்படி இருக்கிறார்கள்.

இப்படி தெலுங்கு – தமிழ் சினிமா ரசிகர்களிடையே ’பொன்னியின் செல்வன்’ ’பாகுபலி’ ஒப்பீடு பற்றி ஒரு சோஷியல் மீடியா போர் போய்கொண்டிருக்கையில் படம் வெளியாவதற்கு முன்பே இதற்கெல்லாம் பதில் சொல்லும் தீர்க்கதரிசி போல தனது கருத்தை வெளியிட்டு இருக்கிறார் மணி ரத்னம்.

..’ராஜ ராஜ சோழன்தான் பொன்னியின் செல்வன் தமிழ்நாட்டில் மிகச்சிறந்த பேரரசர்களில் ஒருவர். இந்த மாதிரியான வரலாற்று கதையைக் கையாளும் போது, அதை முடிந்தவரை யதார்த்தத்துடன் அதன் உண்மைத்தன்மை அதிகம் மாறாமல் பார்த்து கொள்ளவேண்டும்.

அதேமாதிரி பொன்னியின் செல்வனைச் சுற்றி இருக்கும் கதாபாத்திரங்களும் நிஜத்தில் வாழ்ந்தவர்கள். உதாரணத்திற்கு வந்திய தேவன். கதை இவரைச் சுற்றிதான் நகரும். வந்திய தேவனும் நம்மை மாதிரியே ஒரு சாதாரண மனிதன். அவரது பார்வையில், நடக்கும் சம்பவங்களைப் பார்ப்போம். ஒரு ரியலிஸ்டிக் படம். இது பாகுபலி மாதிரி ஃபேண்டஸி படம் அல்ல. பொன்னியின் செல்வனில் சூப்பர் ஹீரோக்கள் இல்லை. இதில் வரும் முன்னணி கதாபாத்திரங்கள் சாதாரண மனிதர்கள். இயல்பானவர்கள். அதனால் செட் அப், விஷூவல்ஸ், லோகேஷன்கள் எல்லாமே அப்படியே இருக்கவேண்டும். படம் பார்ப்பவர்களை சோழர்களின் காலத்திற்கு அழைத்துச் செல்ல முயற்சித்திருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை இரண்டு படங்களும் வேறு வேறு வகை. பாகுபலி ஃபேண்டஸி படம், மிகப் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டிருக்கிறது.

பொன்னியின் செல்வன், மனித உணர்வுகள், வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் யதார்த்தம் இருக்கும்.’’ என்று ஒரு பேட்டியில் தனது கருத்தைப் பகிர்ந்து இருக்கிறார் மணி ரத்னம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...