இந்திய கிரிக்கெட் வீரர்களில் 2-வது பணக்காரர் மகேந்திர சிங் தோனி (முதல் இடத்தில் கோலி உள்ளார்). கடந்த ஆண்டு இறுதியின்படி இவரது சொத்து மதிப்பு 846 கோடி ரூபாய். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றாலும், விளம்பரதாரர்கள் இன்னும் இவரது கஜானாவை நிரப்பி வருகிறார்கள்.
ஒருசிலர் என்னதான் கோடிக்கணக்கில் சம்பாதித்தாலும், பணத்தை சிக்கனமாக செலவழிப்பார்கள். ஆனால் தோனி அதற்கும் கணக்கு பார்ப்பதில்லை. உலகிலேயே சிறந்த விஷயங்களை தான் வைத்திருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அந்த வகையில் அவர் வைத்துள்ள சில காஸ்ட்லியான விஷயங்கள்…
ராஞ்சி பண்ணை வீடு
பொதுவாக சிறிய நகரங்களில் இருந்து உருவாகும் பிரபலங்கள், ஒரு கட்டத்துக்கு மேல் தாங்கள் வளர்ந்த இடத்தில் இருந்து டெல்லி, மும்பை, சென்னை என பெரிய நகரங்களுக்கு பறந்து விடுவார்கள். ஆனால் தோனி இன்னும் தான் உருவான சிறிய நகரமான ராஞ்சியிலேயே இருக்கிறார். அங்குள்ள தோனியின் பண்ணை வீடு 7 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த பண்ணை வீட்டின் மதிப்பு ரூ.6 கோடி. இயற்கை முறையில் இங்கு விவசாயம் செய்துவரும் தோனி, இங்கு விளையும் பழங்கள் மற்றும் காய்கறிகளை உள்ளூர் மக்களுக்கு மிகக் குறைந்த விலையில் வழங்கி வருகிறார்.
போர்ஷே 911 கார்
கார்கள் மீது தோனிக்கு உள்ள காதல் அலாதியானது. ராஞ்சியில் உள்ள தனது பண்ணை வீட்டில் கார்களை வைப்பதற்காகவே ஒரு மிகப்பெரிய தளத்தை தோனி ஒதுக்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. Ferrari 599 GTO, Hummer H2, Land Rover Freelander 2, Nissan Jonga, Jeep Grand Cherokee Trackhawk உள்ளிட்ட பல கார்களை அவர் வைத்துள்ளார். இத்தனை கார்கள் இருந்தாலும் தோனிக்கான பிடித்தமான கார் போர்ஷே 911. இந்தக் காரின் விலை 2.55 கோடி ரூபாய்.
சொந்த விமானம்
சொந்தமாக விமானம் வைத்திருக்கும் கிரிக்கெட் வீரர்களில் தோனியும் ஒருவர். இவர் வைத்துள்ள குட்டி விமானத்தின் மதிப்பு 260 கோடி ரூபாய். தன் மகள் மற்றும் மனைவியுடன் வெளியூர்களுக்கு செல்ல இந்த விமானத்தை தோனி பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.
47 லட்ச ரூபாய் பைக்
சொந்தமாக விமானம், சொகுசு கார்கள் என பல வசதிகள் இருந்தாலும், தோனிக்கு மிகப் பிடித்த வாகனம் பைக். அதுவும் ஸ்போர்ட்ஸ் பைக் என்றால் மிகவும் பிடிக்கும். இந்தியன் ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றிய காலத்தில் வாங்கிய Yamaha RX 135-தான் தோனியின் முதல் பைக். இந்த பைக்குக்குப் பிறகு தோனி வாங்கிச் சேர்த்துள்ள மொத்த பைக்குகளின் எண்ணிக்கை 100-ஐ தாண்டுகிறது. கார்களைப் போலவே பைக்குகளுக்காகவும் தன் பண்ணை வீட்டில் ஒரு தளத்தை வைத்துள்ள தோனி, ஓய்வு நேரங்களில் தன் பண்ணை வீட்டைச் சுற்றி மகளுடன் ரைட் போவதை வழக்கமாக கொண்டுள்ளார். இவர் வைத்துள்ள பைக்குகளிலேயே அதிக விலை மதிப்புள்ள பைக் Confederate Hellcat . இதன் மதிப்பு 47 லட்சம் ரூபாய்.
நேரம் பொன்னானது
காலத்தை பொன்போல் மதிப்பவர் தோனி. கீப்பிங் செய்யும்போது ஒவ்வொரு வினாடியும் மிக முக்கியமானது என்பது அவருக்கு நிச்சயம் தெரியும். இப்படி நேரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் தோனி Panerai Radiomir California வகை கைக்கடிகாரத்தை அணிகிறார். இந்த கைக்கடிகாரத்தின் மதிப்பு 9.25 லட்சம் ரூபாய்.
God bless you bro