விஷால் இப்போது இயக்குநர் ஹரியின் இயக்கத்தில் நடித்துவரும் படம் ‘ரத்னம்’. இப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச்’ நிறுவனம் தயாரிக்கிறது. ‘ரத்னம்’ படத்தில் நடிப்பதற்காக விஷாலுக்கு கொடுக்கப்பட்ட சம்பளத்தில் மீதமிருக்கும் 2 கோடியே 56 லட்சத்தை நீதிமன்றத்தில் கட்டவேண்டுமென தயாரிப்பு நிறுவனத்திற்கு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
விஷால் சம்பளத்தை அவரிடம் கொடுக்காமல் ஏன் நீதிமன்றத்திற்கு கொடுக்கவேண்டும்? இதில் லைகாவுக்கு என்ன தொடர்பு? ஏன் விஷால் படங்கள் வெளியாகும் போது இப்படி பிரச்சினைகள் கிளம்புகின்றன என்றால் அதற்கு ஒரு பின்னணி இருக்கிறது.
விஷால் தன்னுடைய படங்களை தயாரிக்க ‘விஷால் ஃப்லிம் ஃபேக்டரி’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். அப்போது விஷால் கைவசம் பணம் எதுவுமில்லை. இதனால் திரைப்படங்களுக்கு நிதி அளிக்கும் தொழிலை செய்து வரும் கோபுரம் ஃப்லிம்ஸ் அன்பச்செழியனிடமிருந்து 21 கோடியே 29 லட்சம் கடனாகப் பெற்றார் விஷால்.
இந்த பணத்தை விஷாலுக்கு பதிலாக லைகா ப்ரொடக்ஷன்ஸ் அன்புச்செழியனுக்கு கொடுத்துவிட்டதாம். இந்த மொத்த தொகையையும் விஷால் திரும்பி கொடுக்கும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து உரிமைகளுல் லைகாவுக்கு கொடுக்கப்பட வேண்டுமெனவும் ஒப்பந்தம் போடப்பட்டதாம்..
கடன் சுமையிலிருந்து விடுப்பட்ட விஷால், அதற்குப் பிறகு தனது விஷால் ஃப்லிம் ஃபேக்டரி சார்பில் படமெடுக்கவில்லை. மேலும் ஒப்பந்தத்தை மீறி செயல் படுகிறார் என லைகா கொந்தளித்துவிட்டதாம். இதனால் விஷாலை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் லைகா வழக்கு தொடர்ந்தது
இந்த வழக்கு இன்னும் நிலுவையில்தான் உள்ளது இதனால்தான் இப்போது ரத்னம் படம் வெளியாகும் நேரத்தில், அப்படத்திற்கு பேசிய சம்பளத்தில் மீதமிருக்கும் தொகையை நீதிமன்றத்தில் கட்ட சொல்லி ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கு விஷால் தரப்பிலிருந்து மேல் முறையீடு செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் விசாரணை நாளை நடைபெற இருக்கிறது.
இந்த பஞ்சாயத்து எப்போது முடிவுக்கு வரும் என்பது விஷாலுக்கும் தெரியாது, லைகாவுக்கும் தெரியாது.
கார்த்தியுடன் இணையும் ;அனிமல்; இயக்குநர்
’அர்ஜூன் ரெட்டி’ அடுத்து ‘அனிமல்’ இந்த இரண்டுப் படங்கள்தான் இயக்கியிருக்கிறார் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா. இந்தியா முழுவதும் பேசப்படும் இயக்குநர்களில் ஒருவராக அடையாளம் காணப்படுகிறார்.
இவர் அடுத்து கார்த்தியுடன் இணைய இருப்பதாக ஒரு கிசுகிசு அடிப்படுகிறது.
அதாவது, நலன் குமாரச்சாமி இயக்கத்தில் ‘வா வாத்தியாரே’ படத்திலும், 96 பட இயக்குநர் ப்ரேம் குமார் இயக்கத்தில் ஒரு படத்திலும் கார்த்தி நடித்து வருகிறார். இதற்கு பின்பு ‘கைதி 2’ அடுத்து ‘சர்தார் 2’ என இரண்டு சீக்வல் படங்களும் திட்டமிடப்பட்டு இருக்கின்றன.
இந்த இரண்டுப் படங்களையும் முடித்ததும் சந்தீப் ரெட்டி வங்கா படத்தில் நடிக்க கார்த்தி இருக்கிறாராம்.
மறுபக்கம் சந்தீப் பிரபாஸ் உடன் சேர்ந்து ஸ்பிரிட் என்ற பட த்தையும், ஹிந்தியில் அனிமல் பார்க் படத்தையும் முடிக்க வேண்டியிருக்கிறது.
இதை கணக்குப்பண்ணிதான் இவர்கள் கூட்டணி அடுத்தவருடம் இணைய இருப்பதாக கூறுகிறார்கள்.