No menu items!

விஜயகாந்தின் இறுதி நொடிகள் – பிரேமலதா வெளியிட்ட தகவல்கள்

விஜயகாந்தின் இறுதி நொடிகள் – பிரேமலதா வெளியிட்ட தகவல்கள்

கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில், மறைந்த விஜயகாந்தின் படத்தை, விஜயகாந்தின் மனைவியும், தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் நேற்று திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதிலிருந்து:

” வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகத் தான் அவரை டிச.25ஆம் தேதி மருத்துவமனை அழைத்துச் சென்றேன். அன்னைக்கு கிறிஸ்துமஸ், மருத்துவர்கள் விடுமுறை என்பதால் அடுத்த நாள் அதாவது 26ம் தேதி கூட்டிட்டு வர சொன்னார்கள். எனக்கு 8 என்றாலே பயம். என் செண்டிமெண்ட் அப்படி. 26ன் கூட்டுத்தொகை எட்டு என்பதால் 26ம் தேதி அவரை மருத்துவமனை அழைத்துச் செல்ல தயக்கமாயிருந்தது. மருத்துவர்கள் வற்புறுத்தலால் 26ஆம் தேதியே கூட்டிட்டுப் போனேன்.

கேப்டனை அழைத்துக் கொண்டு உலகம் முழுக்க நான் போகாத மருத்துவமனை இல்லை. 26ம் தேதி மருத்துவமனையில் சேர்த்தோம். வழக்கமான பரிசோதனைகளுடன் கோவிட் சோதனையும் நடந்தது. கொரோனா அவருக்கு இருந்தது. அப்பலாம் நல்லாதான் இருந்தார். டிச.28ம் தேதி அதிகாலை 4 மணிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே, அவரின் கையைப்பிடித்து கொண்டு, “உங்களுக்கு ஒண்ணும் ஆகாது, நிச்சயம் வீட்டுக்கு போய்விடுவோம். தைரியமாக இருங்க”னு சொன்னேன். நான் சொல்றதை அவர் கேட்டாலும் மூச்சுவிட ரொம்ப சிரமப்பட்டார்.

ஆனா, டாக்டர்கள் நம்பிக்கை தரல. ’இந்த முறை மிகவும் கஷ்டம்’னு சொல்லிட்டாங்க. சொந்தக்காரங்களுக்கு சொல்லிடுங்கனும் சொன்னாங்க. அடுத்த இரண்டு மணிநேரத்தில், விஜயகாந்த்தின் உயிர் பிரிந்துவிட்டது. இதுதான் அன்றைக்கு விஜயகாந்த்துக்கு நடந்தது.

விஜயகாந்த் இறந்தபிறகு அவருக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ராஜாஜி ஹாலை தான் முதலில் கேட்டோம். ஆனால், அது முடியாது என்று கூறிவிட்டார்கள். ராஜாஜி ஹாலை தவிர்த்து வேறு இடங்களை கேட்க சொன்னபோது சென்னை தீவுத்திடலை கேட்டோம். பத்தே நிமிஷத்துல தீவுத்திடலுக்கு சரினு அரசுகிட்டருந்து தகவல் வந்துருச்சு.

இந்த பிரபஞ்சம் இருக்கும்வரை விஜயகாந்தின் கோயிலாக அவரது நினைவிடம் உருவாக்கப்படும். அதேபோல் இங்கு அளிக்கப்படும் அன்னதானம் இந்த பிரபஞ்சம் இருக்கும்வரை இதே இடத்தில் தொடரும். விஜயகாந்தின் பெயரில் ட்ரஸ்ட் ஆரம்பிக்க வேண்டும் என்று பலரும் கேட்டுக்கொண்டார்கள். அவர்களது விருப்பப்படி, ”வள்ளல் விஜயகாந்த் நினைவு அன்னதானம் ட்ரஸ்ட்” என்று விஜயகாந்த் மறைந்த அன்றே ஆரம்பித்துவிட்டேன்.

விஜயகாந்த் உடல்நலம் குன்றிய இந்த 10 ஆண்டுகளிலும் எனது முழுக்கவனமும் விஜயகாந்த்தை சுற்றியே இருக்கும். ஒருநாள் கூட இந்த ஆண்டுகளில் அவரை தனியாக விட்டதில்லை. ஆனால், இந்த ஒருமாதம் அவரை விட்டு எப்படியாக தனியாக இருக்கிறேன் என்பது எனக்கே தெரியவில்லை. இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் விஜயகாந்துக்கே மனைவியாக வாழ ஆசைப்படுகிறேன். நிறைய சூழ்ச்சிகளில் விஜயகாந்த் மாட்டியதால் தான் தேமுதிகவின் பாதை எப்படியோ சென்றுவிட்டது. தொண்டர்களை வாழ வைத்து அழகு பார்க்கும் அன்னையாகத்தான் இனி என்னுடைய வாழ்க்கை இருக்கும். இனி மக்களுக்காக தான் எனது வாழ்க்கை.” இவ்வாறு உருக்கமாக பேசினார் பிரேமலதா விஜயகாந்த்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...