No menu items!

விஜய் ரிட்டையர்ட். சிவகார்த்திகேயன் போடும் திட்டம்!

விஜய் ரிட்டையர்ட். சிவகார்த்திகேயன் போடும் திட்டம்!

கிழவன் எப்ப மண்டையைப் போடுவான், திண்ணை எப்ப காலியாகும்’ இப்படியொரு பழமொழி உண்டு.

அந்த கதைதான் இப்போது தமிழ் சினிமாவில் நடந்து கொண்டிருக்கிறது.

விஜய் அரசியலுக்கு வருவதால், சினிமாவுக்கு முழுக்குப் போட்டுவிட்டு, நான் முழு நேர அரசியல்வாதி ஆகப் போகிறேன் என்று அறிக்கை விட்டிருக்கிறார். விஜயின் இந்த அறிக்கை அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி, என்றால் சிலருக்கு இன்ப அதிர்ச்சியாகவும் இருக்கிறது.

விஜய் நடிக்காமல் ஒதுங்கினால், தமிழ் சினிமாவின் வருவாய்க்கு இழப்பு என்றும் அஜித்திற்கு போட்டி இல்லை என்றும் பலவாறாக கருத்துகள் கிளம்பிக் கொண்டிருக்கின்றன.

ஆனால் ஹீரோக்கள் மத்தியிலோ, விஜய் இடத்தை யார் பிடிப்பது என்ற போட்டி ஆரம்பமாகி இருக்கிறது. விஜய் – அஜித் என்பதை மாற்றி தங்களது பெயருடன் அஜித் என்ற போட்டி அடையாளத்தை உருவாக்க இப்பொழுதே திட்டமிட ஆரம்பித்திருக்கிறார்கள் என்கிறார்கள்.

இந்த ரேசில் ரொம்பவே உஷாராக களத்தில் இறங்கி இருப்பவர் சிவகார்த்திகேயன்தான் என்று முணுமுணுக்கிறார்கள். இந்த முறை தன்னை ஒரு பக்காவான கமர்ஷியல் ஹீரோவாக முன்னிறுத்தும் கதைகளில்தான் நடிக்க திட்டமிட்டு வருகிறாராம். இதற்காக விஜயை வைத்து ஹிட் கொடுத்த இயக்குநர்கள், இன்றைக்கு கமர்ஷியல் படங்கள் எடுப்பதில் கில்லாடிகளை தன் படங்களுக்கு வளைத்துப் போடுவதில் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறாராம்.

அந்த வரிசையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களின் வரிசை ராஜ்கமல் ப்லிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த ராஜ்குமார் பெரியசாமி, விஜய் டிவியில் ப்ரொடியூசராக இருந்தவர். விஜய் அவார்ட்ஸ் இயக்குநர். இந்த நட்பின் அடிப்படையில்தான் ராஜ்குமார் பெரியசாமி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். மேலும் ராஜ்குமார் பெரியசாமி கமல் தயாரிப்பில் டைரக்டர் ஆக காரணம் விஜய் டிவி மகேந்திரன். இவர்தான் இப்போது கமலுடன் தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகிறார். இந்தப்பட த்திற்காக சிவகார்த்திகேயன் தனது உடல் எடையைக் குறைத்து வித்தியாசப்படுத்தி நடித்திருக்கிறார். இந்தப் பட ஷூட்டிங் இன்னும் சில நாட்களில் முடிவடைய இருக்கிறது.

இதற்குப் பிறகு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார்.

அடுத்து விஜயை வைத்து ’மாஸ்டர்’, ’லியோ’ ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கிறார். இந்தப்படத்தில் சிவகார்த்திகேயனும் நடிக்கிறார் என்ற செய்தி வெளிவந்தது. இது உண்மைதானா என்று இன்னும் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளிவரவில்லை.

சிவகார்த்திகேயனுக்கு ’டான்’ படம் மூலம் ஹிட் கொடுத்த சிபி சக்கரவர்த்தியுடன் மீண்டும் இணைகிறாராம். அநேகமாக இந்தப் படத்தை விஜய் சேதுபதியை வைத்து மகாராஜா படத்தை தயாரித்து வரும் நிறுவனம் தயாரிக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது.

இதற்கு அடுத்து விஜயை வைத்து ‘கோட்’ படத்தை இயக்கும் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஆர்வம் காட்டி வருகிறாராம். இந்தப் படத்தை சத்ய ஜோதி ப்லிம்ஸ் தயாரிக்க ஆர்வம் காட்டி வருகிறதாம்.

ஏ.ஆர். முருகதாஸ், லோகேஷ் கனகராஜ், வெங்கட் பிரபு என விஜயை வைத்து இயக்கிய இயக்குநர்களுடன் கைக்கோர்க்கும் வகையில் பக்காவாக திட்டமிட்டு நடிக்க இருக்கிறாராம் சிவகார்த்திகேயன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...