No menu items!

விஜய் 200 கோடி ஷாருக் 250 கோடி – அதிகம் சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகர்கள்

விஜய் 200 கோடி ஷாருக் 250 கோடி – அதிகம் சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகர்கள்

2024- இந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகர்களில், அடிகமானோர் தென்னிந்திய சினிமா நடிகர்கள்தான் என்று கூறுகிறது உலகப் புகழ்பெற்ற ஃபோர்ப்ஸ் பத்திரிகை.

சமீப காலமாக, அதாவது கோவிட்டுக்கு பிந்தைய காலகட்டத்தில் தென்னிந்திய சினிமா ஒட்டுமொத்த இந்திய அளவில் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது. ஆக்‌ஷன் கலந்த கதைகளுக்கு இந்தியா முழுவதிலும் அதிக வரவேற்பு இருப்பதாகவும், மொழி வித்தியாசமின்றி இது போன்ற படங்களை ரசிப்பதாகவும் தெரிய வந்திருக்கிறது. இதன் மூலம் தென்னிந்திய நடிகர்கள் அதிகம் பேர் இப்போது இந்தியாவில் அதிகம் சம்பளம் பெறும் டாப் 10 நடிகர்கள் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார்கள்.

அந்த வகையில் ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு இருக்கும் டாப் 10 பட்டியல் இதோ. இந்த அதிகம் சம்பளம் வாங்கும் இந்திய நடிகர்கள் பட்டியலை, இப்பத்திரிகை உலகப் புகழ்பெற்ற, சினிமாவுக்கான இணையதளமான ஐ.எம்.டி.பி-யில் இருந்து எடுத்திருப்பதாகவும் ஃபோர்ப்ஸ் தெரிவித்திருக்கிறது.

நடிகர் : ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் [தோராயமாக] கோடிகளில்

  1. ஷாரூக்கான் 150 – 250
  2. ரஜினிகாந்த் 150 – 210
  3. ஜோசப் விஜய் 130 – 200
  4. பிரபாஸ் 100 – 200
  5. ஆமீர்கான் 100 – 175
  6. சல்மான் கான் 100 – 150
  7. கமல் ஹாசன் 100 -150
  8. அல்லு அர்ஜூன் 100 -125
  9. அக்‌ஷய் குமார் 60 – 145
  10. அஜித் குமார் 105

மேலும் இவர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பையும் ஃபோர்ப்ஸ் குறிப்பிட்டு இருக்கிறது.

ஷாரூக்கான்

இவரது ஒட்டுமொத்த சொத்து மதிப்பு சுமார் 6,300 கோடி. [தோராயமாக]

அதாவது இந்திய திரைப்பட நடிகர்களிலேயே மிக அதிக சொத்து மதிப்பு நடிகர் இவர்தான். கிங் கான் என்று செல்லமாக அழைக்கப்படும் ஷாரூக்கான் கொடுத்த தோல்விப்படங்கள் அவருடைய வளர்ச்சியை எந்தவிதத்திலும் தடுக்கவில்லை. 2023-ல் அடுத்தடுத்து 1000 கோடி வசூல் செய்த இரண்டுப் படங்களைக் கொடுத்திருக்கிறார். 1980-களில் சின்னதிரையில் நடிக்க வந்தவர், 1992-ல் ’தீவானா’ படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமாகி இன்று இந்திய வெள்ளித்திரையில் கிங் ஆக ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

ரஜினி காந்த்

ரஜினியின் ஒட்டுமொத்த சொத்து 430 கோடி. [தோராயமாக]

தென்னிந்திய நடிகர்களிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் ரஜினிகாந்த். தென்னிந்தியாவில் ஒரு திரைப்பட நட்சத்திரம் என்பதையும் தாண்டி, இவருக்கு ஒரு வாழும் கடவுள் போன்ற புகழ் கிடைத்திருக்கிறது. கடைசியாக ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ படத்திற்காக இவர் 110 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறார்.

ஜோஸப் விஜய்

விஜயின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 474 கோடி. [தோராயமாக]

தென்னிந்தியாவில் மிக அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் விஜயும் ஒருவர். ‘தளபதி’ என்று செல்லமாக அழைக்கப்படும் விஜய், ஏறக்குறைய இருபது ஆண்டுகளாக திரைத்துறையில் இருக்கிறார். 1984-ல் தனது 10-வது வயதில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தவர் இன்று வரை உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். 2023-ல் இவரது ’வாரிசு’ படம் உலக முழுவதிலும் 300 கோடி வசூல் செய்திருக்கிறது. அடுத்து வெளியான ‘லியோ’ படம் ஒட்டுமொத்தமாக 612 கோடி வசூலித்து இருக்கிறது.

பிரபாஸ்

இவரது ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 241 கோடி. [தோராயமாக]

பிரபாஸ் தெலுங்கு படங்களில் நடிக்கும் நடிகராக இருந்தாலும், இவரது நட்சத்திர அந்தஸ்து இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலியின் ‘பாகுபலி’ பட வரிசையில் நடித்தப் பிறகு பல மடங்கு அதிகரித்து இருக்கிறது. கடந்த 8 ஆண்டுகளில் இவரது நிகர சொத்து மதிப்பு 94 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. பெரும் பட்ஜெட்டில் உருவான இவரது ‘ஆதிபுரூஷ்’ தோல்வி படமாக அமைந்தாலும், அடுத்து வந்த ‘சலார்’ இவருக்கு கொஞ்சம் தெம்பை கொடுத்திருக்கிறது.

ஆமீர்கான்

ஆமீர் கான் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 1862 கோடி [தோராயமாக]

தன்னைத் தேடி வருகிற எல்லா பட வாய்ப்புகளையும் ஒப்புக்கொள்ளாமல், கதையைப் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடிப்பதால் அமீர்கானுக்கு என்று ஒரு பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. தன்னுடைய கதை மற்றும் கதாப்பாத்திரங்களுக்காக இவர் அதிகம் மெனக்கெடுவதால், இவருக்கு ‘மிஸ்டர். பெர்ஃபெக்‌ஷனிஸ்ட்’ என்ற செல்லப் பெயரும் இருக்கிறது. 2022-ல் கடைசியாக வெளிவந்த இவரது ’லால் சிங் சத்தா’ படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால் தற்காலிகமாக சினிமாவுக்கு ஒரு ப்ரேக் எடுத்த அமீர் கான், ‘சித்தாரே ஜமீன் பர்’ படத்திற்காக காத்திருக்கிறார்.

சல்மான் கான்

சல்மான் கானின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 2900 கோடி [தோராயமாக]

மிகப்பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கும் மற்றுமொரு பாலிவுட் நடிகர். காதல் நாயகனாக அறிமுகமாகி, ஆக்‌ஷன் ஹூரோவாக வலம் வரும் இவர் இப்போதுவரை சிங்கிள் சிங்கம். கடைசியாக இவரது நடிப்பில் வெளிவந்த ’டைகர் 3’ படம் உலக முழுவதிலும் 466.63 கோடி வசூல் செய்திருக்கிறது.

கமல் ஹாசன்

கமல் ஹாசனின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 150 கோடி. [தோராயமாக]

தென்னிந்திய சினிமாவில் மற்றுமொரு ஆளுமை கமல் ஹாசன். தனது சினிமா பயணத்தில் 234-வது படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழி படங்களும் அடங்கும். 2023-ல் இவருடைய படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதால் இவரும் மணிரத்னமும் இணைந்திருக்கும் படத்திற்கு அதிக எதிர்பார்பு இருக்கிறது.

அல்லு அர்ஜூன்

அல்லு அர்ஜூனின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 350 கோடி. [தோராயமாக]

தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, கதாநாயகனாக வலம்வந்தவரை இந்தியா முழுவதும் தெரிந்த நடிகராக்கியது இவரது நடிப்பில் வெளியான ‘புஷ்பா’. இதன் இரண்டாம் பாகம் இந்தாண்டு வெளியாக இருக்கிறது. மேலும் இப்படம் ஷாரூக்கான் நடிப்பில் வெளியான ‘ஜவான்’ பட வசூலையெல்லாம் முறியடிக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.

அக்‌ஷய் குமார்

அக்‌ஷய் குமாரின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 2500 கோடி. [தோராயமாக]

’ஹேரா பெரி’, ‘பூல் புலாயா’ மாதிரியான காமிக் வகையறா படங்கள், குடும்ப பொழுதுபோக்கு படங்களில் நடித்து பிரபலமான பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார். சமீபகாலமாக சமூக கருத்துகளைச் சொல்லும் முக்கியமான படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். அந்த வரிசையில் ‘ டாய்லெட்’, ‘ஏக் ப்ரேம் கதா’, ‘பத்மன்’ போன்ற படங்கள் அமைந்திருக்கின்றன. 2023-ல் இவருக்கு ஹிட் படங்கள் எதுவுமில்லை. இவர் சிறப்புத்தோற்றத்தில் நடித்த ’ஒஎம்ஜி 2’ படம் உலகம் முழுவதிலும் சுமார் 221 கோடி வசூல் செய்திருக்கிறது.

அஜித் குமார்

அஜித் குமாரின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 196 கோடி. [தோராயமாக]

தென்னிந்திய நடிகர்களில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் அஜித்தும் இடம்பிடித்திருக்கிறார். 2023-ல் வெளியான இவரது ‘துணிவு’ பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படம் சுமார் 130 க் ஓடி வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...