No menu items!

’விடுதலை 2’ – அப்டேட்

’விடுதலை 2’ – அப்டேட்

‘விடுதலை’ வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனால் அடுத்த பாகத்திற்கான வேலைகளில் உடனே இறங்கிவிட்டார்  வெற்றி மாறன்.

முதல் பாகத்தில் சூரியின் வாழ்க்கையும், அவரது பதபதைப்பும்தான் படமாக இருந்தது. விஜய் சேதுபதிக்கு ஒரு சில காட்சிகள் மட்டுமே இடம்பெற்றிருந்தன.

ஆனால் இரண்டாம் பாகத்தில் அப்படியே தலைக்கீழ். விஜய் சேதுபதி யார்..அவருடைய பின்னணி என்ன.. அவர் ஏன் ஒரு போராளியானார்.. என்று கதை நீள்கிறதாம்.

விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகளை ஏறக்குறைய எடுத்துமுடித்துவிட்டார் வெற்றி மாறன். இன்னும் சில முக்கிய காட்சிகள் இருக்கின்றன. இவற்றை மழை இல்லாத நாட்களில்தான் அந்த காட்டுப்பகுதியில் எடுக்க முடியுமென்பதால் விடுதலை யூனிட் அதற்காக காத்திருக்கிறது.

இன்னும் 30 நாட்கள் ஷூட் செய்ய வேண்டியிருக்கிறது. இந்த ஷெட்யூலில் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் மற்றும் சூரி சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

’விடுதலை 2’ படம் அதன் முதல் பாகத்தை விட அதிக ஆக்‌ஷன் காட்சிகளுடன் இருக்கும். அதேபோல் இதன் நீளமும் முதல் பாகத்தை விட கொஞ்சம் அதிகமிருக்கும்.

ஷூட் முடிந்ததும் இறுதிகட்டப்பணிகளை முடிக்கவே நான்கைந்து மாதங்கள் வரை பிடிக்கும் என்கிறார்கள்.  இதனால் ’விடுதலை 2’ அடுத்த வருடம் கோடை விடுமுறை நாட்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


லிப்லாக் கொடுத்தால் தப்பில்லை – நானி

தெலுங்கு நடிகர் நானி இப்போது ‘ஹாய் நான்னா’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதில் ’சீதா ராமம்’ படத்தில் நடித்த மிருணாள் தாக்கூர் நானிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

குடும்ப கதை என்ற அடையாளத்தோடு வெளிவரவிருக்கும் இப்படத்தில் நானி மிருணாள் தாகூருக்கு இதழோடு இதழ் பதித்து முத்தம் கொடுக்கும் காட்சி ஒன்றும் இடம்பெற்று இருக்கிறது.

குடும்ப படத்தில் இப்படியொரு முத்தக்காட்சி தேவையா என்ற கேள்வியை நானியிடம் கேட்டதற்கு, ’நாம இப்ப 2023-ல் இருக்கோம்.  காலத்துக்கு ஏத்த மாதிரி நாமளும் மாறிட்டு இருக்கோம்னு நாம் சொல்ல வேண்டிய நேரம் இது. நம்மோட மனைவியையோ இல்ல கேர்ள் ஃப்ரெண்ட்டையோ முத்தம் கொடுக்குறது நமக்கு செளகரியமாக இருக்கு. அது தப்பில்லன்னு நினைச்சா, அதை ஏன் சினிமா காட்சியில வைக்க கூடாது? முத்தம் என்பது நம்மோட வாழ்க்கையில ஒரு அடிப்படையான ஒண்ணு. அதே மாதிரி சினிமாங்கிறது ட்ராமா இல்ல.

நம்மோட யதார்த்த வாழ்க்கையைப் பிரதிபலிக்கிற கலை. அதுல நம்மோட வாழ்க்கை, உறவுகளை வெளிப்படுத்துறது முக்கியம். இனிமேலும் மரத்தைச் சுத்தி ஓடி, பாட்டுப்பாடி ஆடினா யாரும் பார்க்க மாட்டாங்க. அது எடுப்படாது. அதனால உறவுகளைப் பத்தி சொல்லும் போது, உண்மையான உணர்வோடு இருக்கிற மாதிரி எடுக்கணும்.’ என்று ஒரு பாடமே எடுத்துவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...