No menu items!

தமிழகத்தின் மொத்த வாக்காளர்கள் 6.20 கோடி

தமிழகத்தின் மொத்த வாக்காளர்கள் 6.20 கோடி

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரிசத்யபிரதா சாகு வெளியிட்டார்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “01.01.2023-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம். 2023-ன் ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் 6,20,41,179 வாக்காளர்கள் (ஆண் வாக்காளர்கள் 3,04,89,866, பெண் வாக்காளர்கள் 3,15,43,286 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 8,027 பேர்) பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்டுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 6,66,295 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் 3,34,081, பெண்கள் 3,32,096, மூன்றாம் பாலினத்தவர் 118). இதற்கு அடுத்தப்படியாக கோயம்புத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 4,57,408 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் 2,27,835, பெண்கள் 2,29,454, மூன்றாம் பாலினத்தவர் 119)” என்றார்.


பாஜக தலைவராக ஆளுநர் செயல்பட வேண்டாம் – டி.ஆர்.பாலு

பாஜக தலைவராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்பட வேண்டாம் என்று திமுக எம்.பி டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் பிரிவினையையும், மோதல்களையும், குழப்பத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் உள்ளே நுழைந்து நாள்தோறும் சர்ச்சைக்குரிய கருத்துகளையும் செயல்பாடுகளையும் செய்து கொண்டிருப்பவர் தான் கவர்னர் ஆர்.என்.ரவி. எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் சனாதனம், ஆரியம், திராவிடம், திருக்குறள், காலனி ஆதிக்கம் உள்ளிட்டவை குறித்து அவரது கருத்துகள்அபத்தமானவையாகவும், ஆபத்தானவையாகவும் இருக்கின்றன.

தமிழர்களை இன உணர்வு பெற்றவர்களாக மாற்றியது திராவிட இயக்கம். அவர்களைக் கல்வியில், வேலைவாய்ப்பில் முன்னுக்குக் கொண்டு வந்தது திராவிட இயக்கம். அனைவரும் ‘இந்தியர்’ என்று மேடைதோறும் பேசி வருகிறார் ஆளுநர். ஏற்கனவே தமிழ்நாட்டில் பாஜகவிற்கு ஒரு மாநில தலைவர் இருப்பதால், தமிழ்நாட்டில் ஆளுநராக இருந்து கொண்டு இன்னொரு பாஜக மாநில தலைவராக செயல்பட்டு தமிழர்களுக்கே எதிராக ஆளுநர் ரவி பேசிக் கொண்டிருக்காமல் அரசியல் சட்டப்படி பணியாற்றுவதே அவருக்கு சிறந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.


மம்தா பானர்ஜி பிறந்த நாள் – முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் எப்போதும் நல்ல உடல் நலத்தோடும் மகிழ்ச்சியோடும் திகழ விழைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.


மும்பை மருத்துவமனைக்கு ரிஷப் பந்த் மாற்றம்

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் மேல் சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் மும்பைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் கடந்த 30-ந் தேதி டெல்லியில் இருந்து தனது சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரூர்க்கீ நகருக்கு காரில் சென்றார். அப்போது அவரது கார் விபத்துக்குள்ளானது. இதைத்தொடர்ந்து அவர் டேராடூனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக அவரை மும்பைக்கு கொண்டுசெல்ல முடிவெடுக்கப்பட்டது.

ரிஷப் பண்டால் வழக்கமான விமானத்தில் பயணிக்க முடியாது என்பதால் நேற்று மாலை மேல் சிகிச்சைக்காக டேராடூனில் இருந்து மருத்துவ வசதியுடன் கூடிய ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...