No menu items!

தஞ்சையில் பழுப்பு நிலக்கரி எடுக்க தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது: உதயநிதி ஸ்டாலின்

தஞ்சையில் பழுப்பு நிலக்கரி எடுக்க தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது: உதயநிதி ஸ்டாலின்

திருவாரூர், கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்திற்கு சொந்தமாக 3 நிலக்கரி சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. என்.எல்.சி மூன்றாவது நிலக்கரி சுரங்கத்தின் பெரும்பகுதி காவிரிப் படுகையை ஒட்டியே அமைந்துள்ள நிலையில், மீதமுள்ள 6 நிலக்கரி சுரங்கங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் தஞ்சை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், மொத்தம் 66 இடங்களில் ஆழ்துளையிட்டு நிலக்கரி எடுப்பதற்கான அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் உள்ள 11 இடங்களிலும், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்திலும் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, இன்று திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பின்போது, ‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட தஞ்சையில் பழுப்பு நிலக்கரி எடுக்க தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. நிலக்கரி சுரங்க விவகாரம் குறித்து நாளை சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிப்பார். புதிய நிலக்கரி சுரங்க விவகாரம் பற்றி சட்டப்பேரவையில் நாளை அறிவிப்பு வெளியிடப்படும்’’ என்றார்.

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா; தூத்துக்குடியில் ஒருவர் உயிரிழப்பு

இந்தியாவில் நேற்று புதிதாக 3,641 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று 3,038 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 20,129-ல் இருந்து 21,179 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 2,609 பேர் குணமடைந்த நிலையில் 9 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் சென்னை, கோவை, சேலம், திருச்சி உள்ளிட்ட மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகாரித்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பார்த்திபன் (வயது 54) என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். கடந்த மாதம் 23-ம் தேதி கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பார்த்திபனுக்கு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

அருணாசல பிரதேசத்தில் 11 இடங்களின் பெயர்களை மாற்றிய சீனா: இந்தியா கண்டனம்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசல பிரதேச மாநிலம் தங்களுக்கு சொந்தம் என சீனா நீண்டகாலத்திற்கு முன்பிருந்து உரிமை கொண்டாடி வருகிறது. அதனை தெற்கு திபெத் என கூறி வருகிறது. இந்நிலையில், அருணாசல பிரதேச மாநிலத்தில் உள்ள 11 இடங்களின் பெயர்களை சீனா மாற்றி உள்ளது. இதற்கு இந்தியா இன்று கடும் கண்டனம் வெளியிட்டு உள்ளது. இந்தியாவின் வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி வெளியிட்ட செய்தியில், அருணாசல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக இன்றளவும் உள்ளது. தொடர்ந்து இந்தியாவின் ஒரு பகுதியாக இருப்பதுடன் வருங்காலத்திலும் எப்போதும் இதே நிலை தொடரும் என்று தெளிவுப்படுத்தி உள்ளார்.

கடந்த 2017-ம் ஆண்டும் அருணாசல பிரதேசத்தில் உள்ள 6 பகுதிகளுக்கும், 2021-ம் ஆண்டும் 15 இடங்களுக்கும் சீன பெயர்களை அந்த நாடு அதிகாரபூர்வமாக வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஜி-20 தொடர்பான கூட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் ஜி-20 அமைப்பின் உறுப்பு நாடுகள் பங்கேற்று வருகின்றன. அந்த வகையில் அருணாசல பிரதேச தலைநகர் இடாநகரில் கடந்த மார்ச் மாத இறுதியில் ஜி-20 கூட்டம் ஒன்று நடந்தது. இதில் சீனா பங்கேற்கவில்லை.

டெல்லி மெட்ரோ ரெயிலில் நீச்சல் உடையில் பயணித்த இளம் பெண்

டெல்லி மெட்ரோ ரெயிலில் இளம்பெண் ஒருவர் அரைகுறை ஆடையில் பயணம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த இளம்பெண் நீச்சல் உடை அணிந்து டெல்லி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. அந்த வீடியோவில் இளம் பெண் ஒரு இருக்கையில் பெரிய கருப்பு நிற பையுடன் அமர்ந்திருந்தார். அவர் எழுந்து நிற்கும்போதுதான் அவர் அரைகுறை ஆடை அணிந்து இருப்பது தெரிய வந்தது. அருகில் இருந்தவர்கள் இதனை கண்டும் காணாமல் இருந்தனர். சிலர் முகம் சுளித்தனர். வழக்கம் போல இந்த செயலுக்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக வலைத ளங்களில் கருத்து மோதல் நடந்து வருகிறது.

டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் நிறுவனம் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் மற்றும் மெயின்டனன்ஸ் சட்டத்தின்படி பிரிவு 59-ன் கீழ் அநாகரீகமான ஆடை அணிந்து பயணிப்பது குற்றமாகும். தான் விரும்பிய ஆடை அணிவது தனிப்பட்ட சுதந்திரம்தான். ஆனாலும் பொது போக்குவரத்தில் இதுபோன்ற அநாகரீகமான ஆடை அணிந்து வருவதை தவிர்க்குமாறு’ தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...