No menu items!

காஜல் அகர்வால் – பாலிவுட்டுல மதிப்பு இல்ல மரியாதை இல்ல

காஜல் அகர்வால் – பாலிவுட்டுல மதிப்பு இல்ல மரியாதை இல்ல

பொதுவாகவே இந்த பாலிவுட் பாய்ஸ்களுக்கு தென்னிந்திய சினிமா என்றாலே ரொம்பவே இளக்காரம்தான்.

தென்னிந்திய மொழிகளைச் சேர்ந்த யாரையும் அங்கே வளரவிட மாட்டார்கள். பாலிவுட்டுக்குள் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்தாலும், தொடர்ந்து தாக்குப்பிடிக்க முடியாமல், அங்கே நமக்கு எதிராக கிளப்பும் அரசியலை எதிர்கொள்ள முடியாமல் திரும்பியவர்களில் பாலசந்தர், ரஜினி, கமல், மணிரத்னம், ஷங்கர் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

இப்படி நம்மூர் புத்திசாலிகளை ஓரங்கட்டுவதில் ஒட்டுமொத்த பாலிவுட்டும் ஒன்றாக கைக்கோர்த்து நின்றாலும், அங்கேயும் உள்குத்து வேலைகள் அவ்வப்போது நடக்கின்றன.

அங்கே இருக்கும் மூவி மாஃபியாவுக்கு பின்னணி பலம் ரொம்பவே அதிகம். இந்த பட்டியலில் கரன் ஜோஹர், சங்கி பாண்டே என சிலர் ரொம்பவே மும்முரமாக செயல்பட்டு வருவதாக கூறுகிறார்கள்.

மூவி மாஃபியா தொடர்ந்து பலம் பெற்று வந்தாலும், அவர்களை எதிர்த்து தைரியமாக சிலர் நிற்கதான் செய்கிறார்கள். அந்த வகையில் ‘குயின்’ வெப் சீரிஸில் ஜெயலலிதாவாக நடித்த கங்கனா ரனவத்., ‘ப்ரியங்கா சோப்ரா ஹிந்தி சினிமாவில் ப்ரேக் எடுக்குறேன் என்று எஸ்கேப் ஆக காரணமே இந்த கரன் ஜோஹர்தான். ப்ரியங்கா சோப்ராவுக்கும் ஷாரூக்கானுக்கு இருந்த ஃப்ரெட்ண்ட்ஷிப்பை பார்த்து டென்ஷனான கரன் மூவி மாஃபியா மூலம் ப்ரியங்காவுக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்தார். அந்த வெறுப்புலதான் ப்ரியங்கா ஹிந்திப் படங்கள்ல நடிக்காம அமெரிக்காவுக்கு போயிட்டாங்க’ என்று வெளிப்படையாகவே சொல்லி அதிர வைத்திருக்கிறார்.

இப்படியொரு சூழலில் காஜல் அகர்வாலிடம் தென்னிந்திய சினிமா மற்றும் பாலிவுட்டை பற்றி கேட்ட போது, ‘’இங்கே தென்னிந்திய சினிமாவுல இருக்குற சூழ்நிலை, பணியாற்றுகிற ஸ்டைல் எல்லாமே பிடிச்சிருக்கு. இங்கு இருக்குற நியாயமாக நடந்துகுற முறை, மதிப்பு, மரியாதை, டீசண்ட்டாக இருக்குற ஒழுங்கு முறை எல்லாமே எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. இதெல்லாம் ஹிந்தி சினிமாவுல இல்ல’ என்று கூறியிருக்கிறார் காஜல் அகர்வால்.


5 ஆண்டு ஷூட் முடிந்தது. கமல் எஸ்கேப்!

5 ஆண்டுகளாக தயாரிப்பு நிலையிலே இருந்து வரும் ’இந்தியன் 2’ ஷூட்டிங் ஒரு வழியாக முடியப் போகுதாம்.
இந்த ஐந்து வருடத்தில் எக்கச்சக்க மாற்றங்கள். இதுவரையில் இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்டம் என்றால் அது ஷங்கர்தான் என்ற ஒரு இமேஜ் இருந்தது.

ஆனால் அந்த பெயரை இப்போது எஸ்.எஸ் ராஜமெளலி தட்டிப் பறித்து கொண்டார். இதனால் ஷங்கருக்கு உண்டாகி இருக்கும் இந்த போட்டியால் கடும் நெருக்கடி, தன்னை முன்னிறுத்த கடுமையாக போராடி வருகிறார். இதற்கு வசமாக அமைந்தப் படம்தான் ராம் சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’. இதன் படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால்தான் ‘இந்தியன் 2’ படத்தை. மளமளவென முடிக்க முடியவில்லையாம்.

இப்போது ‘கேம் சேஞ்சர்’ படத்திற்கு ப்ரேக் விட்டிருக்கும் ஷங்கர், ஒரே வேகத்தில் ’இந்தியன் 2’ படத்தை முடிக்க திட்டமிட்டு இருக்கிறார். இப்பொழுது போட்டிருக்கும் திட்டம் பக்காவாக நடந்தால், ஜூன் மாதம் இந்தியன் 2 பட ஷூட்டிங் முழுமையாக முடிவடைந்து விடுமாம். ஆக்‌ஷன் காட்சிகளைத் தவிர ஒரேயோரு பாடல் மட்டுமே ஷூட் செய்யப்படாமல் மிதி இருக்கிறதாம்.

பாடலுக்கு 10 நாள் ஷூட்.முடிந்தால் தீபாவளிக்கு இந்தியன் 2-ஐ ரிலீஸ் செய்துவிடலாம் என ஷங்கர் பம்பரமாக சுழன்று சுழன்று வேலைகளைப் பார்த்து வருகிறார்.

’இந்தியன் 2’ ஷூட்டிங் ஒரு வழியாக 5 ஆண்டுகளுக்குப் பிறகு முடிவடைய இருப்பதால், கமல் உற்சாக இருக்கிறார். விக்ரமிற்கு பிறகு ஒரு பெரிய பட்ஜெட் ஆக்‌ஷன் படம் இது என்பதால் தனது மார்க்கெட்டை உயர்த்தும் என நம்புகிறார். மேலும் மணிரத்னம் பட த்திற்கும் இங்கிருந்து எஸ்கேப்பாகி விடலாம் என்பதுதான் உற்சாகத்திற்கு காரணம்.


நக்மாவுக்கு ஆளுங்கட்சி எம்,பி. உடன் காதல்??

ஜோதிகாவின் அக்கா நக்மா தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடிக்கும் போதே, பல காதல் சர்ச்சைகளில், கிசுகிசுக்களில் அவரது பெயர் அடிக்கடி அடிப்பட்டது.

மும்பையில் இருந்து வந்தாலும், நக்மாவுக்கு தமிழ், தெலுங்கு சினிமாவில்தான் பெரிய வரவேற்பு கிடைத்தது. மளமளவென பெரிய ஹீரோக்களுடன் நடித்தவர், மார்க்கெட் டல்லடிக்க ஆரம்பித்ததும் அரசியலுக்குள் நுழைந்தார்.

அதுவும் போரடிக்க, வந்தாரை வாழவைக்கும் சினிமாவான போஜ்புரி சினிமாவில் மீண்டும் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார். இப்போ இங்குதான் மீண்டும் காதல், கல்யாணம் கிசுகிசுவில் நக்மா பெயர் அடிப்படுகிறது.

புஷ்பா பட ஹீரோவான அல்லு அர்ஜூன் நடித்த ‘ரேஸ் குர்ரம்’ படத்தில் நடித்திருப்பவர்தான் இந்த ராஜ் கிஷன். பாஜக கட்சியைச் சேர்ந்த எம்பி இவர். ராஜ் கிஷனுடன் நக்மா தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில்தான் இவர்கள் இருவருக்கும் இடையே நெருங்கமான உறவு இருக்கிறது என்ற பேச்சு அடிப்பட ஆரம்பித்திருக்கிறது.

நடிகராக இருந்தாலும் அடிப்படையில் அரசியல்வாதியான ராஜ் கிஷன். ‘நாங்க நடிச்ச படங்கள் ப்ளாக் பஸ்டராக ஹிட் அடிக்குது. நக்மா என்னோட ஃபெஸ்ட் ப்ரெண்ட். அதுக்கும் மேல எனக்கு கல்யாணமாயிடுச்சு. என மனைவி ப்ரீத்தி சுக்லா மேல எனக்கு மரியாதை இருக்கு. பயமும் இருக்கு. என்னோட ஆரம்ப காலம் முதல் கையில பணம் இல்லாத நாட்களிலிருந்து என்கூடவே என் மனைவி இருக்கார்.’’ என்று மூச்சுவிடாம சொல்லியிருக்கிறார்.

’கூட நடிக்குற நடிகர்களோட ஏன் நல்ல உறவு இருக்கக்கூடாதுன்னு எனக்கு தெரியல. எங்க ரெண்டுப் பேருக்கும் இடையில நல்ல புரிதல் இருந்தால் மத்தவங்களுக்கு என்ன பிரச்சினைன்னு புரியல. சினிமாவுல நாங்க கணவன் மனைவியா, காதலர் காதலியாக நடிக்கணும், அப்படீன்னா வெளி வாழ்க்கையில பழக ஒரு நல்ல கம்ஃபோர்ட் லெவல் இருக்கணும்ல.’ என்று படப்படத்து இருக்கிறார் நக்மா.

இதையெல்லாம் கேட்ட நெட்டிசன்கள், ‘சட்புட்டுன்னு ஏதாவது பேசி ஒரு முடிவுக்கு வாங்கப்பா’ என்று கலாய்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...