சிவகார்த்திகேயன் எப்படியாவது விஜயின் இடத்தைப் பிடித்துவிட வேண்டுமென முழுவீச்சில் இறங்கியிருக்கிறாராம். இதன் தொடர்ச்சியாகவே இப்போது ஏ.ஆர். முருகதாஸ் படத்தில் அதிக ஆர்வம் காட்டுகிறாராம்.
இந்தப் பட த்தின் பூஜை காதலர் தினத்தன்று நடந்தது. அடுத்த நாளே ஷூட்டிங்கை தொடங்கிவிட்டார்கள். தெலுங்கு திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ லக்ஷ்மி மூவீஸ் நிறுவனம் இதைத் தயாரிக்கிறது.
ஷூட்டிங் தொடங்கிய முதல் நாளன்றே சிக்கல் ஆரம்பித்திருக்கிறது. ஏ.ஆர். முருகதாஸ் முதல் காட்சியை ஷூட் செய்திருக்கிறார். அடுத்த காட்சிக்கு தயாராகும் போதே, ப்ரொடக்ஷன் மேனேஜருக்கு ஒரு போன் கால் வந்திருக்கிறது. உடனே ’ஷூட்டிங்கை நிறுத்துங்கள். இல்லையென்றால், இனி இங்கே ஷூட்டிங் நடக்காது’ என்று கூறப்பட்டிருக்கிறது.
முதலில் ப்ரொடக்ஷன் மேனேஜருக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஆனால் இந்த பரபரப்பு சிவகார்த்திகேயன், ஏ.ஆர். முருகதாஸ் வரைக்கும் போயிருக்கிறது. ஆனால் இவர்கள் இருவரும் என்ன பிரச்சினை, ஏன் ஷூட்டிங்கை நிறுத்த சொல்கிறார்கள் எனத்தெரியாமல் குழம்பியிருக்கிறார்கள்.
இந்தப் படத்தை தெலுங்கு நிறுவனம் ஒன்று தயாரிப்பதால், அவர்கள் ஷூட்டிங்கிற்கு பயன்படுத்தும் கருவிகள் அனைத்தையும் ஹைதராபாத்திலிருந்து கொண்டு வந்திருக்கிறார்கள். அந்த கருவிகளை வைத்துதான் ஷூட்டிங்கை தொடங்கி இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் படப்பிடிப்பு நடைபெற்றால், வெளி மாநிலங்களில் இருந்து கேமரா உள்பட படபிடிப்பு கருவிகளை கொண்டு வந்து ஷூட் செய்யக்கூடாது என்று ஒரு விதி இருக்கிறது. அதாவது இங்குள்ள நிறுவனங்களில் இருந்தே கருவிகளை வாடகைக்கு எடுத்து படப்பிடிப்பை நடத்த வேண்டுமென்ற விதி இருக்கிறது. இதை கண்டுகொள்ளாமல் ஹைதராபாத்தில் இருந்து அனைத்து படபிடிப்பு கருவிகளையும் கொண்டு வந்துவிட்டார்கள்.
இதற்கு இங்குள்ள அவுட்டோர் யூனிட் சங்கம் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறது. தொடர்ந்து ஷூட்டிங்கை வைத்தால், தமிழில் இனி எடுக்கப்படும் எந்தப் படத்திற்கும் நாங்கள் பணிபுரிய மாட்டோம் என்று கூறப்பட்டிருக்கிறது.
இதனால் டென்ஷனாகி போன தயாரிப்பு நிறுவனம் தரப்பில், ‘ஷூட்டிங்கை தொடர்ந்து நடத்தவில்லை என்றால் நாளொன்றுக்கு பதினைந்து லட்சம் வரை எங்களுக்கு நஷ்டம் ஆகிவிடும். அதனால் இன்னும் இரண்டு மூன்று நாட்கள் கொடுங்கள். அதுவரை நாங்கள் கொண்டுவந்த கருவிகளை வைத்து ஷூட்டிங்கை தொடர்கிறோம். பிப்ரவரி 20-ம் தேதிக்குப் பிறகு இங்குள்ள படபிடிப்பு கருவிகளைப் பயன்படுத்தி கொள்கிறோம். நான்கு நாட்களுக்கு பொறுத்து கொள்ளுங்கள். இந்த ஷெட்யூல் இந்த மாதம் இறுதி வரை நடக்கிறது. அதனால் மீத் நாட்களில் இங்குள்ள படப்பிடிபு கருவிகளைப் பயன்படுத்துவோம் என உறுதி கூறப்பட்டதாம்.