No menu items!

ஷங்கர் மகளின் மறுமண பின்னணி

ஷங்கர் மகளின் மறுமண பின்னணி

தமிழில் ’இந்தியன் 2’, தெலுங்கில் ‘கேம் சேஞ்சர்’ என ஒரே நேரத்தில் இரு படங்களை முடிக்க வேண்டிய கட்டாயத்தில், வழக்கத்தைவிட ரொம்பவே பரபரப்பாக இருக்கிறார் ஷங்கர்.

இப்படியொரு சூழலில்தான் ஷங்கரின் முதல் மகள் ஐஸ்வர்யாவுக்கு மறுமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது என்று தெரியவந்திருக்கிறது. இதை ஷங்கரின் இரண்டாவது மகளும், நடிகையுமான அதிதி தன்னுடைய சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதிதி இது குறித்து பதிவிட்டப் பிறகே கோலிவுட்டில் பலருக்கு தெரிந்திருக்கிறது.

ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா, இவருக்கு சினிமா மீது ஆசையெல்லாம் இல்லை. முடிந்தவரை யாருடைய கண்ணிலும் படாமல், ஷங்கரின் மகள் என்ற அடையாளம் இல்லாமல், ஒரு சராசரி பெண்ணாக வாழ நினைப்பவர். இதனால் இவரைப் பற்றி பலருக்கு தெரியாது.

ஆனால் தங்கை அதிதி இவருக்கு அப்படியே தலைக்கீழ். ஜாலியாக, எல்லாவற்றையும் கொண்டாடியபடி, தான் இருக்கும் இடத்தை அதிரவைப்பவர். அதிதிக்கு சினிமா மீது ஆர்வம் அதிகம்.

மகள்களுக்கு திருமணம் செய்ய ஷங்கரும் அவரது மனைவியும் முடிவு செய்த போது, ஐஸ்வர்யாவுக்கு வாழ்க்கைத் துணையாக ரோஹித்தை தேர்வு செய்தனர். இந்த ரோஹித், ஒரு கிரிக்கெட் வீரர். பாண்டிச்சேரி அணியின் கேப்டன். ஐஸ்வர்யா – ரோஹித் ஜோடியின் திருமணம் ஏறக்குறைய ஒரு காதல் திருமணம்தான்.

2022-ல் ஐஸ்வர்யாவுக்கும், ரோஹித்துக்கும் மகாபலிபுரத்தில் வைத்து மிகப்பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. அப்போது கொரோனா திவீரமாக இருந்த காலக்கட்டம் என்பதால், இவர்களது திருமணம் எளிமையாகவே நடைபெற்றது. ஷங்கருக்கு நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே திருமண அழைப்பு.

மகளுக்கு திருமணமான உற்சாகத்தில் இருந்தார் ஷங்கர். ஆனால் நான்காவது மாதமே அந்த சந்தோஷம் தொலைந்துப் போனது. ஆறாவது மாதமே மகளின் திருமணம் விவாகரத்து வரை போய் முட்டிக்கொண்டு நின்றது. நொறுங்கிப் போனது ஷங்கரின் குடும்பம். காரணம் ரோஹித் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள். அவர் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் பாயுமளவிற்கு அவர் மீது பகீர் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன.

விட்டால் போதும் என்ற மனநிலையில் இருந்தார் ஐஸ்வர்யா. இதனால் மீண்டும் தனது அப்பா அம்மாவுடன் இருக்க ஆரம்பித்தார். சட்டரீதியாக ரோஹித்திடமிருந்து ஐஸ்வர்யா விவாகரத்துப் பெற்றார். மகளை இப்படிப் பார்ப்பது எந்த அம்மா, அப்பாவுக்குதான் சந்தோஷமாக இருக்கும்.

ஆனால் மற்றொரு திருமணத்திற்கு ஐஸ்வர்யா மனதளவில் தயாராக இல்லை. ஆனால், ஐஸ்வர்யாவுக்குஃப் மறுமணம் செய்து வைப்பதில் அவரது அம்மா உறுதியாக இருந்தார். ஷங்கர் உடல் மெலிந்து போனதே இந்த கவலையால்தான் என்கிறார்கள்.

கடந்த நான்கு வருடங்களாக ஷங்கரின் படங்கள் எதுவும் வெளிவரவில்லை. ’இந்தியன் 2’ பட வேலைகள் பாதியில் முடிந்திருந்தன. ’’கேம் சேஞ்சர் வேலைகள் மட்டும் தொடர்ந்தன. இதனால் ஷங்கருக்கு கொஞ்சம் நிம்மதி. கவலையை மறக்க ஷுட்டிங்கில் கவனம் செலுத்தியிருக்கிறார்.

பொதுவாகவே ஷங்கருக்கு பல உதவி இயக்குநர்கள் இருப்பார்கள். பலர் இருந்தாலும் அதில் ஒன்று அல்லது இரண்டுப் பேருக்குதான் அலுவலகப்பணி, வீட்டுப்பணியில் அதிக முக்கியத்துவம் இருக்கும். அதாவது அவர்கள்தான் அந்தப் பணிகளை கவனித்து கொள்வார்கள்.

அப்படியொரு நல்லப்பெயரை பெற்றவர்தான் தருண் கார்த்திகேயன். இந்த தருண் டிரம்ஸ் வாசிப்பதில் கில்லாடி. ஒரு தேர்ந்த பின்னணி இசை பாடகரைப் போல பாடக்கூடியவர். எடிட்டிங் செய்வதிலும் கைத்தேர்ந்தவர். அமெரிக்கா வாடை அடிக்கும் ஒரு உதவி இயக்குநர். இப்படி பல திறமைகள் கொண்ட இளைஞர்களை ஷங்கருக்கு பிடிக்கும்.

அதிதி மூலம் ஐஸ்வர்யாவுக்கும் தருண் கார்த்திகேயன் பழக்கமாக, ஒரு நல்ல நட்பு உருவானதாம். இதுவே இப்போது ஐஸ்வர்யாவின் மறுமணம் வரை தொடர்ந்திருப்பதாக விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

வெகுவிரைவிலேயே இவர்கள் இருவரின் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம். அநேகமாக இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் படங்களின் வெளியீட்டுக்குப் பிறகு திருமணம் இருக்கலாம் என்றும் முடிவாகி இருக்கிறதாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...