No menu items!

மணி ரத்னத்துடன் இணையும் சிம்பு

மணி ரத்னத்துடன் இணையும் சிம்பு

கமலும் அவருடைய மாப்பிள்ளை மணி ரத்னமும் இணைந்து மிரட்டிய படம் ‘நாயகன்’. இந்தப் படத்திற்குப் பிறகு கமலும் மணி ரத்னமும் இணைந்து படம் பண்ணவே இல்லை.

இவர்கள் இருவருக்குள்ளேயும் இருந்த மனக்கசப்பு இப்பொழுது எப்படியோ குறைந்திருக்கிறது. ’விக்ரம்’ வெற்றி கமலை ரொம்பவே மாற்றியிருக்கிறது. அடுத்து அவருடைய வயதும் அவருடைய பழக்கவழக்கங்களை மாற்றியிருக்கிறது.

இதனாலேயே 36 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் மீண்டும் மணி ரத்னமுடன் இணைந்து படம் பண்ண சம்மதித்து உள்ளார். இவர்களின் படத்திற்கு, மணி ரத்னம் தனது சினிமா பயணத்தில் முதல் முறையாக ‘தக் லைஃப்’ என்று ஆங்கிலத்தில் பெயர் சூட்டியிருக்கிறார்.

த்ரிஷா, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி என ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்தவர்களை ‘தக் லைஃப்’ படத்திலும் ஒப்பந்தம் செய்திருக்கிறது மெட்ராஸ் டாக்கீஸ்.

இந்தப் படத்தில் நடிப்பதாக ஒப்பந்தமான துல்கர் சல்மான், தனது சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கும் நேரம் பார்த்து, ’தக் லைஃப்’ படத்திலிருந்து விலகுவதாக துல்கர் அறிவித்துவிட்டார். இவர் ஏற்கனவே மணி ரத்னம் படமான ’ஒகே காதல் கண்மணியில்’ நடித்திருக்கிறார். இருந்தும் தவிர்க்க முடியாத சூழலினால் இந்தப் படத்திலிருந்து விலகுகிறேன் என்று கூறியிருக்கிறார்.

ஷூட்டிங் நெருங்கி வருகிற சூழலில், துல்கருக்குப் பதிலாக யாரை அணுகலாம் என்று யோசித்த போது, கமல் நாம் ஏன் சிம்புவை இதில் நடிக்க வைக்கக்கூடாது என்று கருத்து சொன்னாராம்.

‘செக்க சிவந்த வானம்’ படத்தில் சிம்புவும் நடித்திருக்கிறார் என்பதால் மணி ரத்னம் படத்தில் நடிப்பது எப்படியிருக்கும் என்பது சிம்புவுக்கும் தெரியும். அதே நேரம், கமல் ஹாஸனின் ராஜ்கமல் ஃப்லிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குநர் தேசிங்கு இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக இருந்தது.

இந்த உறவே கமல் சிம்பு பெயரை உச்சரிக்க வைத்திருக்கிறது. அநேகமாக சிம்பு ‘தக் லைஃப்’ ஷூட்டிங்கில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஒருத்தர் கூட தொட முடியாது – ஸ்ரேயா

ஸ்ரேயா கவர்ச்சியாக நடிப்பார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அந்த கவர்ச்சி திருமணத்திற்குப் பிறகு அதிகமாகும் என்றோ, குழந்தை ஒன்று பிறந்த பிறகு இன்னும் அதிகமாகும் என்றோ யாரும் யோசித்து கூட பார்த்திருக்க முடியாது.

சினிமா சம்பந்தப்பட்ட விழாக்கள் என்றாலும், சமூக ஊடக ரீல்களாக இருக்கட்டும் ஸ்ரேயா அணியும் ஆடைகளின் மீது மற்ற நடிகைகளுக்கே கொஞ்சம் பொறாமை இருக்கதான் செய்கிறது.

திருமணமாகி, குழந்தைப் பிறந்த பிறகும் கூட ஸ்ரேயா தன்னை எவ்வளவு அழகாக காட்டமுடியும் என்பதை உணர்ந்திருக்கிறார் என்று நடிகைகளும் பாராட்டுகிறார்கள். இந்த கவர்ச்சி, அழகு சமாச்சாரம் ஒரு பக்கம் இருந்தாலும், ரீல்ஸ் போடுவதில் அதிகம் அக்கறை காட்டும் ஸ்ரேயா இப்போது தனது அனுபவத்தின் அடிப்படையில் ஒரு அறிவுரையைக் கூறியிருக்கிறார்.

இந்த சமூக ஊடகங்களில் சில மக்கள் பண்ணுகிற ட்ராமாகள், பந்தாக்கள் எல்லாவற்றையும் நம்மால் சகிக்கவே முடியாத அளவிற்குப் போய் கொண்டிருக்கின்றன. இவற்றை எப்படி தவிர்ப்பது. அவர்களை காயப்படுத்தாமல் நாம் எப்படி தப்பிப்பது என்ற குழப்பம் எல்லோருக்குமே இருக்கிறது.

இதற்குதான் ஸ்ரேயா ஒரு அசத்தல் டிப்ஸை கொடுத்திருக்கிறார்.

’தினமும், ஒரு காலன் அளவுக்கு தண்ணீர் குடியுங்கள். இது உங்களை தேவையில்லாத ட்ராமாகளிலிருந்து உங்களைக் காப்பாற்றும். இவர்கள் பண்ணுகிற ட்ராமா, பந்தாவிலிருந்து உங்களுக்கு நிம்மதி கிடைக்கும்’ என்கிறார்.

அதெப்படி தண்ணீர் குடித்தால் பிரச்சினை தீரூம் என்று சொல்கிறீர்கள் என்று கேட்டால், ’’நிறைய தண்ணீர் குடித்தால், என்னவாகும்? நீங்கள் உங்களுடைய பாத்ரூமில் பிஸியாக இருக்கவேண்டியிருக்கும். அப்புறம் ஏன் ட்ராமா பக்கம் போகப் போறீங்க. உங்களை ஒருத்தர் கூட தொட முடியாது. தண்ணீர் அதிகம் குடியுங்கள். உடலில் நீர் வற்றாமல் ஆரோக்கியமாக இருங்கள்’ என்று டிப்ஸ் கொடுக்கிறார் ஸ்ரேயா..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...