No menu items!

கிறிஸ்டோபர் நோலன் சம்பளம் இத்தனை கோடியா?

கிறிஸ்டோபர் நோலன் சம்பளம் இத்தனை கோடியா?

96-வது அகாடமி விருதுகளை அறிவித்துவிட்டார்கள். ஆரம்பம் முதலே ‘ஒப்பன்ஹ்யெமர்’ விருதுகளை அள்ளும் என்று ரொம்பவே எதிர்பார்பு இருந்தது. ஒரு அதை உறுதி செய்யும் வகையில், ஒரு சினிமா சுனாமியைப் போல பல விருதுகளை வாரியணைத்து கொண்டிருக்கிறது கிறிஸ்டோபர் நோலனின் ‘ஒப்பன்ஹெய்மர்’ [Oppenheimer] திரைப்படம்.

சிறந்த படம் [Best Picture]

சிறந்த நடிகர் – சிலியன் மர்ஃபி [Best Actor in a Leading Role: Cillian Murphy]

சிறந்த துணை நட்சத்திரம் – ராபர்ட் டவுனி ஜூனியர் [Best Actor in a Supporting Role: Robert Downey Jr.]

சிறந்த இயக்குநர் – கிறிஸ்டோபர் நோலன் [Best Directing: Christopher Nolan]

சிறந்த அசல் இசை – லுட்விக் கோரன்சன் [Best Original Score: Ludwig Göransson]

சிறந்த படத்தொகுப்பாளர் – ஜெனிஃபர் லேம் [Best Film Editing: Jennifer Lame]

சிறந்த ஒளிப்பதிவாளர் – ஹோய்டே வான் ஹோய்டெமா [Best Cinematography: Hoyte van Hoytema]

என இந்த வருட ஆஸ்கர் விருதுகளில் அதிகப்பட்சமாக 7 விருதுகளைப் பெற்றிருக்கும் படமாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிலும் சிறந்தப் படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த படத்தொகுப்பாளர், சிறந்த அசல் இசை என ஒரு படத்திற்கு முக்கியமான அம்சங்களுக்காக இந்தப் படம் விருதுகளைக் குவித்திருப்பதுதான் ஹைலைட்.

கடந்த 20 வருடங்களில் ஆஸ்கர் விருதிற்கு 8 முறை பரிந்துரைக்கப்பட்டது கிறிஸ்டோபர் நோலனின் பெயர். ஆனால் இந்த ஆண்டுதான் அவரால் ஆஸ்கரை கைப்பற்ற முடிந்திருக்கிறது.

பொதுவாகவே கிறிஸ்டோபர் நோலனின் படங்களில் ‘ஒப்பன்ஹெய்மர்’ தான் சிறந்தப்படம் என்று அப்படத்தில் நடித்திருக்கும் ராபர்ட் டவுனி ஜூனியர் வாயாரப் புகழ்ந்திருக்கிறார். ‘அயர்ன் மேன்’ ஆக நடித்திருக்கும் அதே ராபர்ட்தான் இவர். இந்தப் படத்தில் நடித்ததற்காக இவருக்கும் முதல் ஆஸ்கர் விருது கிடைத்திருக்கிறது.

‘பார்பி’ என்னும் கலர்ஃபுல்லான படத்திற்கு எதிராக திரையரங்குகளில் களமிறங்கிய ’ஒப்பன்ஹெய்மர்’ இதுவரையில் நோலனுக்கு பக்கபலமாக இருந்த பேட் மேன் கதாபாத்திரம் இல்லாமல் போட்டியில் குதித்தது.

பிரபல விமர்சன தளங்களான ராட்டன் டொமட்டோஸ் உள்ளிட்ட பல இணைய தளங்களில் இதுவரையில் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய படங்கள் எதற்கு 60%-க்கு குறைந்த மதிப்பெண்கள் இல்லை. அதாவது அவர் எடுத்தப்படங்கள் எதுவும் தவறான படங்கள் இல்லை என்பதையே இந்த விமர்சகர்கள் மற்றும் மக்களின் மதிப்பீடுகள் காட்டுகின்றன. பொதுவாகவே கிறிஸ்டோபர் நோலனின் படங்களை விமர்சகர்களை விட மக்கள் அதிகம் விரும்புகிறார்கள்.

இவர் இயக்கிய 12 படங்களில் ’த டார்க் நைட்’ மற்றும் ஒப்பன்ஹெய்மர்’ ஆகிய இரண்டுப் படங்களும் ராட்டன் டொமட்டோஸ் [Rotten Tomatoes]-ல் விமர்சனத்தில் அதிக மதிப்புகளைப் பெற்றிருக்கிறது. இரண்டுப் படங்களும் விமர்சகர்களிடையே 94%-மும், மக்களிடையே 94%-மும் பெற்றிருக்கின்றன.

இதேபோல் மற்றொரு விமர்சன தளமான மெட்டாக்ரிட்டிக் [Metacritic] இணைய தளத்தில், ’டன்க்ரிக்’ [Dunkirk] முதல் இட த்திலும், ‘ஒப்பன்ஹெய்மர்’ இரண்டாமிடத்திலும் இருக்கிறது.

ஹாலிவுட் படமான ‘ஒப்பன்ஹெய்மர்’ உலகம் முழுவதிலும் இதுவரையில் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை பாக்ஸ் ஆபீஸ் வசூலாக அள்ளியிருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணுக்குண்டுவின் தந்தை என்றழைக்கப்படும் ராபர்ட் ஒப்பன்ஹெய்மரின் வாழ்க்கையைப் பற்றிய படம். இந்தப் படத்தை இயக்க ஒப்புக்கொண்ட போது, கிறிஸ்டோபர் நோலன் தனக்கு சம்பளம் இவ்வளவு வேண்டுமென என அடம்பிடிக்கவில்லையாம்.

படம் நன்றாக ஓடும் என்று அவருடைய உள்ளுணர்வு சொல்லியிருக்கும் போல. படம் வசூல் செய்யும் தொகையில் இருந்து குறிப்பிட்ட தொகையை தனக்கு சம்பளமாக தந்தால் போதும் என்று சொல்லிவிட்டாராம்.

ஆனால் இப்போதுதான் கிறிஸ்டோபர் நோலனின் சம்பளம் எவ்வளவு என்று தெரிய வந்திருக்கிறது. பாக்ஸ் ஆபீஸ் வசூலில் கிறிஸ்டோபர் நோலனின் சம்பளத்தைப் இத்தனை சதவீதம் என்று போட்டு பார்த்திருக்கிறார்கள்.

வெறும் 72 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று கணக்கு சொல்லியிருக்கிறது. அதாவது நம்மூர் மதிப்பில் சுமார் 600 கோடி ரூபாய், கிறிஸ்டோபர் நோலன் சம்பளமாக கொடுக்கப்பட்டு இருக்கிறதாம்.

இதைப் பார்த்து ஹாலிவுட்டே மிரண்டுப் போய் இருக்கிறது. இது நோலனின் நம்பிக்கைக்குக் கிடைத்த பலன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...