No menu items!

சிக்கிமில் வாகன விபத்து: 16 ராணுவ வீரர்கள் பலி

சிக்கிமில் வாகன விபத்து: 16 ராணுவ வீரர்கள் பலி

சிக்கிமில் உள்ள  ஜெமா என்ற இடத்தில் நேரிட்ட வாகன விபத்தில் 16 ராணுவ வீரர்கள் பலியானார்கள்.

இதுகுறித்து ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  “சேட்டன் என்ற இடத்தில் இருந்து தாங்கு என்ற இடத்தை நோக்கி 3 வாகனங்களில் ராணுவ வீரர்கள் சென்றனர். ஜெமா என்ற இடம் வழியாக அவர்கள் சென்று கொண்டிருந்தபோது, செங்குத்தான சரிவு கொண்ட ஒரு திருப்பத்தில் ஒரு வாகனம் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர்.   4 பேர் காயமடைந்தனர். காயமடைந்த 4 பேரும் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசுத் தொகையை உயர்த்தி வழங்க எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

பொங்கல் பரிசுத் தொகையில் ரூ.5 ஆயிரமாக  உயர்த்தி வழங்க வேண்டும் என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, எங்களிடம் கேட்டபடி, இந்த அரசு தைப் பொங்கலுக்கு 5,000/- ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பில் முழு செங்கரும்பையும் 2 கோடியே 19 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க வேண்டும் என்றும், அதற்கான அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் இந்த விடியா திமுக அரசின் முதல்-அமைச்சரை வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது.

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. இது வரும் 29 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், மொத்தம் 17 அமர்வுகள் நடைபெறும் என்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி ஏற்கெனவே அறிவித்திருந்தார். எனினும் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் முன்கூட்டியே முடிவடைந்திருக்கிறது.

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடர்பாக, அலுவலக பரிந்துரை குழு கடந்த 20ம் தேதி கூடி ஆலோசனை மேற்கொண்டது. அதில், 23-ம் தேதியோடு குளிர்காலக் கூட்டத் தொடரை முடித்துக்கொள்வது என ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டதாக செய்தி வெளியானது. இந்நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.

உலகக் கோப்பை ஹாக்கிஇந்திய அணி அறிவிப்பு

உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் ஆடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை ஹாக்கி போட்டி வரும் ஜனவரி மாதம்   இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நடைபெற உள்ளது.  இதில்  16 நாடுகள் பங்கேற்று விளையாடுகின்றன.

இப்போட்டியில் ஆடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் பெயர்கள்: ஹர்மன்ப்ரீத் சிங்  (கேப்டன்),    கிரிஷன் பகதூர் பதக் (கோல் கீப்பர்),  ஸ்ரீஜேஷ் ரவீந்திரன் (கோல் கீப்பர்),  சுரேந்தர் குமார்,     வருண் குமார், அமித் ரோஹிதாஸ் (துணை கேப்டன்), நிலம் சஞ்சீப் செஸ்   மன்பிரீத் சிங், ஹர்திக் சிங், நீலகண்ட சர்மா, ஷம்ஷேர் சிங், விவேக் சாகர் பிரசாத், ஆகாஷ்தீப் சிங்   மந்தீப் சிங், லலித் குமார் உபாத்யாய், அபிஷேக், சுக்ஜீத் சிங்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...